பென்னாகரம் பாணியில் திண்ணை பிரசாரம்: தொகுதிகளை 'அள்ள' பா.ம.க., தந்திரம்

Updated : ஜன 26, 2014 | Added : ஜன 24, 2014 | கருத்துகள் (62)
Share
Advertisement
லோக்சபா தேர்தலில், பா.ம.க., போட்டியிட உள்ள தொகுதிகளில், எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என்பதில், அந்தக் கட்சியினர் தீவிரமாக உள்ளனர். அதனால், பென்னாகரம் இடைத்தேர்தல் பாணியில், இப்போதே, திண்ணை பிரசாரத்தை துவக்கி உள்ளனர்.விரைவில் வெளியாகலாம்:லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., போட்டிஇடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஆனாலும், முறையான அறிவிப்பு
பென்னாகரம் பாணியில் திண்ணை பிரசாரம்: தொகுதிகளை 'அள்ள' பா.ம.க., தந்திரம்

லோக்சபா தேர்தலில், பா.ம.க., போட்டியிட உள்ள தொகுதிகளில், எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என்பதில், அந்தக் கட்சியினர் தீவிரமாக உள்ளனர். அதனால், பென்னாகரம் இடைத்தேர்தல் பாணியில், இப்போதே, திண்ணை பிரசாரத்தை துவக்கி உள்ளனர்.


விரைவில் வெளியாகலாம்:

லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., போட்டிஇடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஆனாலும், முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை; விரைவில், வெளியாகலாம் என, நம்பப்படுகிறது.கடந்த, 2009ல் நடந்த, லோக்சபா தேர்தலிலும், 2011ல் நடந்த சட்டசபை தேர்தலிலும், படுதோல்வியை சந்தித்த, பா.ம.க., வரும், லோக்சபா தேர்தலில், எப்படியும் குறிப்பிட்ட அளவு இடங்களைப் பெற்று விட வேண்டும் என்பதில், குறியாகவுள்ளது. அப்போது தான், கட்சிக்கு எதிர்காலம் உண்டு என்றும், அதன் தலைவர்கள் நம்புகின்றனர். அதனால் தான், சில மாதங்களுக்கு முன், துவக்கிய, சமூக பேரியக்கத்திற்கும், அரசியலுக்கும் தொடர்பு இல்லை என, கைகழுவி விட்ட, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பா.ம.க., சார்பில், 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்து, தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.

தி.மு.க., ஆட்சியில், பென்னா கரம் சட்டசபை தொகுதியில், இடைத்தேர்தல் நடந்த போது, பா.ம.க.,வினர், முந்தைய வழக்கத்திற்கு மாறாக, புதிய பாணியில், திண்ணைப் பிரசாரத்தை மேற்கொண்டனர். இந்த திண்ணைப் பிரசாரத்தின் போது, கும்பலாக வீடு வீடாக, வீதி, வீதியாகச் செல்லும், பா.ம.க., கட்சியினர், வன்னிய சமூகத்தினரை குறிவைத்து பிரசாரம் செய்வர்.அப்போது, வன்னியர் குல பெருமை மற்றும் தற்போதுள்ள, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலைமையில் இருப்பது, பிற்பட்ட வகுப்பினருக்கு, அரசியல் கட்சிகள் இழைத்துள்ள பாதகங்கள் போன்றவற்றை விவரித்து, மக்களிடம் ஓட்டு கேட்பர். அத்துடன், பா.ம.க.,விற்கு ஓட்டுப் போடும்படி, பாலில் சத்தியம் வாங்குவதும் உண்டு.இதன்மூலம், குறிப்பிட்ட சமூகத்தினரின் ஓட்டுகளை, சிந்தாமல், சிதறாமல், பா.ம.க.,விற்கு பெற முடியும் என்பது, அவர்களின் கணிப்பு. பென்னாகரம் இடைத்தேர்தலில், பா.ம.க.,வினர் பின்பற்றிய, இந்த நடைமுறை, அந்தக் கட்சி, தேர்தலில் இரண்டாம் இடம் பிடிக்க உதவியது. அதே பாணியை தற்போதும் துவக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.


மற்ற தொகுதிகளிலும்...:

லோக்சபா தேர்தலில், தர்மபுரி தொகுதியில், பா.ம.க., இளைஞர் அணி தலைவர், அன்புமணி போட்டியிடுவது உறுதியாகி உள்ளதால், முதற்கட்டமாக, இந்தத் தொகுதியில், பா.மக.,வினர், திண்ணைப் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தர்மபுரியை தொடர்ந்து, பா.ம.க., போட்டியிடும் மற்ற தொகுதிகளிலும், இதேபோன்ற பிரசாரம் துவங்க உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், இரு சமூகத்தை சேர்ந்த, இளம் வயதினரின் காதல் விவகாரத்தில், பெரிய அளவில் ஜாதி மோதல்கள் உருவாகின. அதனால், அந்தத் தொகுதியில், தங்களின் செல்வாக்கை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகவே, அங்கு முதலில், திண்ணைப் பிரசாரத்தை, பா.ம.க., துவக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. பா.ம.க.,வினர், இந்த பிரசார தந்திரம், எந்த அளவுக்கு மக்களிடம் எடுபட்டிருக்கிறது என்பது, தேர்தலுக்கு பின்னரே தெரியவரும்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VSRINIVASAN - PUDHUCHERRY,இந்தியா
26-ஜன-201421:40:39 IST Report Abuse
VSRINIVASAN தி ண்ணை பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் கண் ணாய் இருக்கணும் அண்ணாச்சி
Rate this:
Cancel
சூரிய வெளிச்சம் - chennai,இந்தியா
25-ஜன-201419:25:18 IST Report Abuse
சூரிய வெளிச்சம் ஐயா தமாஷ் பண்ணாதீங்க. அப்புறம் நீங்களும் ஜோககர் ஆகிடுவீங்க.
Rate this:
Cancel
நக்கீரன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜன-201418:17:24 IST Report Abuse
நக்கீரன் நீங்க முதல்ல பாலுள்ள சத்தியம் பண்ணுங்க.
Rate this:
Kombakkam Krishnamurthy - lawspet,இந்தியா
26-ஜன-201400:20:35 IST Report Abuse
Kombakkam Krishnamurthyசரிங்க வீட்ட கொளுத்த மாட்டோம் மரத்தை வெட்ட மாட்டோம் , போதுமா போதுமா , எங்க சின்ன அய்யா அடுத்த சி எம் அப்ப வெட்டுவோம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X