ஊழல் புகாரில் சிக்கிய அ.தி.மு.க., வேட்பாளர் நீக்கம்: ராஜ்யசபாவுக்கு புது வேட்பாளர் 'மாஜி' மந்திரி செல்வராஜ்

Updated : ஜன 27, 2014 | Added : ஜன 26, 2014 | கருத்துகள் (35)
Advertisement
ஊழல் புகாரில் சிக்கிய அ.தி.மு.க., வேட்பாளர் நீக்கம்: ராஜ்யசபாவுக்கு புது வேட்பாளர் 'மாஜி' மந்திரி செல்வராஜ்

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான, அ.தி.மு.க., ராஜ்யசபா வேட்பாளர், சின்னதுரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எம்.பி.,யாகும் வாய்ப்பு கிடைத்த, இரண்டு நாளில், அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டது.

அவருக்கு பதிலாக, கட்சி அமைப்பு செயலரும், 'மாஜி' அமைச்சருமான செல்வராஜ், புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முதல்வரின் நடவடிக்கை, கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் இருந்து, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்ய, அடுத்த மாதம், 7ம் தேதி, தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல், 21ம் தேதி துவங்கியது. வரும், 28ம் தேதி, மனு தாக்கலுக்கு கடைசி நாள். அ.தி.மு.க., நான்கு இடங்களில், போட்டியிட முடிவு செய்து, 23ம் தேதி, வேட்பாளர்களை அறிவித்தது.திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலர், முத்துகருப்பன்; திருநெல்வேலி மாநகராட்சி மேயரும், மாவட்ட மகளிர் அணிச் செயலருமான விஜிலா சத்தியானந்த்; தூத்துக்குடி மாநகராட்சி மேயரும், மாநில மகளிர் அணிச் செயலருமான சசிகலாபுஷ்பா; தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவரும், இளைஞர், இளம்பெண்கள் பாசறை இணை செயலருமான சின்னத்துரை, ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.


புகார்:

வேட்பாளர் பட்டியல் வெளியானதும், கட்சி நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இரண்டு மாவட்டங்களை சேர்ந்த, ஏற்கனவே பதவிகளில் உள்ளவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு வழங்குவதா என, கோபம் அடைந்தனர். அத்துடன், ஊழல் புகாருக்குள்ளான சின்னத்துரைக்கு, வாய்ப்பு வழங்கப்பட்டது சரியல்ல என்றும் கொதிப்படைந்தனர்.வேட்பாளர் பட்டியல் வெளியானதும், கட்சி அலுவலகத்திற்கு, வேட்பாளர்கள் குறித்து, ஏராளமானப் புகார்களை, 'பேக்ஸ்' மூலம் அனுப்பினர். குறிப்பாக, சின்னத்துரை மீது, அதிகப்படியான புகார்கள் அனுப்பப்பட்டன.

சின்னதுரை, 2006 முதல் 2011 வரை, தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவராக இருந்தார். 'அப்போது அரசு நிதியில், 2 கோடி ரூபாய் முறைகேடு செய்தார்' என, புகார் எழுந்தது. இதுகுறித்து ஆய்வு நடத்திய அதிகாரிகள், முறைகேடு நடந்ததை உறுதி செய்து, அரசுக்கு அறிக்கை அளித்தனர்; ஆனால், அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.வீபாண்டியன் பட்டினத்தை சேர்ந்த கணேசன் என்பவர், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்து மனுவில், 'முறைகேடு குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்' எனக் கோரினார். அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'லஞ்ச ஒழிப்பு போலீசார், ஏற்கனவே விசாரித்து வருகின்றனர்' என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறையினர், விசாரணையை கிடப்பில் போட்டனர்.

இந்நிலையில்தான், வேட்பாளராக சின்னதுரை அறிவிக்கப்பட்டார். உடனடியாக. அவர் மீது தலைமைக்கு புகார்கள் பறந்தன. புகார்களில், 'தூத்துக்குடி மாவட்ட செயலரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான சண்முகநாதனுக்கு எதிராக, சின்னதுரை செயல்பட்டு வந்தார். கட்சி சார்பில் நடந்த போராட்டங்களில் பங்கேற்று, சிறை சென்றது கிடையாது' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
குவிந்தனஅத்துடன், பொதுநல ஆர்வலர் அன்பழகன், சட்டசபை செயலர் ஜலாலுதீனுக்கு, நேற்று முன் தினம், அனுப்பிய மனுவில், 'சின்னதுரை மீது முறைகேடு வழக்கு பதியப்பட்டு, லஞ்ச ஒழிப்புத்துறையில் விசாரணையில் உள்ளது. அவரது வேட்பு மனுவை, ஏற்கக்கூடாது' என, தெரிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக புகார்கள் குவிந்ததால், சின்னத்துரை வேட்பாளர் பட்டியலில் இருந்து மட்டுமின்றி, கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு, முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சி கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில், செயல்பட்ட காரணத்தினாலும், தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணிச் செயலர், அ.தி.மு.க., இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை இணைச் செயலர் பொறுப்பிலிருந்த சின்னத்துரை, கட்சி அடிப்படை உறுப்பினர் உட்பட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.ராஜ்யசபா தேர்தலுக்காக, அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும், வேட்பாளர் பட்டியல், 23ம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அ.தி.மு.க., ஆட்சி மன்றக்குழு, மீண்டும் கூடி, மறு பரிசீலனை செய்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, சின்னத்துரைக்கு பதிலாக, கட்சி அமைப்பு செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான, ஏ.கே.செல்வராஜ், அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.இவ்வாறு, ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் செல்வராஜ் உட்பட அ.தி.மு.க.,வின் நான்கு ராஜ்ய சபா வேட்பாளர்களும் நாளை காலை வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர்.


அழகிரி மனைவிக்கு உறவினர்?

வாய்ப்பு பறிக்கப்பட்ட சின்னத்துரையிடம் கேட்ட போது, ''அம்மா கொடுத்தார்; அவரே பறித்து கொண்டார். எனக்கு, அவர் தான் தெய்வம். இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை. 'நான், அழகிரி மனைவி காந்தியின் உறவினரா?' என, கேட்கின்றனர். அவங்களுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை; இக்கேள்வியே தவறு. இதுபோன்ற கேள்வியை கேட்காதீர்கள், '' என்றார்.


செல்வராஜ் பயோடேட்டா:

ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.கே.செல்வராஜின் சொந்த ஊர், கோவை மாவட்டம், காரமடை அடுத்த ஆதிமாதையனூர்; வயது 48. திருமணமாகாதவர். பி.ஏ., பட்டதாரி. 2001ம் ஆண்டு, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். ஆறு மாதம், வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்தார். தற்போது, அ.தி.மு.க., மாநில அமைப்பு செயலராகவும், மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினராகவும், கரும்பு பயிரிடும் பகுதி ஒதுக்கீட்டு குழு உறுப்பினராகவும் உள்ளார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
umarfarook - dindigul,இந்தியா
26-ஜன-201414:59:48 IST Report Abuse
umarfarook அவர் எப்போ ஊழல் செய்தார் ? வேட்பாளராக அறிவிக்கபட்ட பின்னா ? ஒரு கட்சிக்கு வேட்பாளர் அறிவிக்கும் முன் அவரை பற்றி தெரிந்து கொள்ளாமல் தான் அறிவிப்பார்களோ ? ஒருவேளை அவர் ஊழல் செய்தது மக்களுக்கும் தெரிந்து விட்டது என்பதால் தான் கட்சியையும் விட்டு நீக்கி விட்டார்களா ?
Rate this:
Share this comment
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
26-ஜன-201413:53:47 IST Report Abuse
K Sanckar இது ஒரு முதல்வரின் அனுபவமின்மையையே வெளிச்சம் போட்டு கட்டுகிறது. ஜெயலலிதாவுக்கு ஒருவர் பெயரை ராஜ்ய சபை சீட்டுக்கு பரிந்துரை செய்யும் முன்னர் அவருடைய குலம் கோத்திரம் உள்பட கோப்பைகள் புலனாய்வு அறிக்கைகள் அனைத்தும் கிடைத்து விடும். அவைகளை பரிசீலித்த பின்னரே அவரின் பெயர் முன்மொழியப்படும். பெயரை அறிவித்த பின்னர் அவர் மீது புகார்கள் வருகிறது என்றால் அது கட்சிக்கு கெட்ட பெயர். இது ஜெயலலிதாவுக்கு நல்ல பெயர் அளிக்காது. துக்ளக் சோ ராமஸ்வாமி என்ன எழுதுகிறார் என்று பார்க்கலாம்.
Rate this:
Share this comment
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
26-ஜன-201419:34:08 IST Report Abuse
N.Purushothamanஇதில் இரண்டு வாய்ப்புகள் உள்ளன...ஒன்று சம்மந்தப்பட்டவர் அதிகார மையத்தையோ அல்லது சக்தி வாய்ந்தவரையோ பிடித்து தனது பய்லை மூவ் செய்திருப்பார்....அல்லது முதல்வர் மக்களின் ரியாக்ஷனை பார்த்து முடிவு எடுக்க முனைந்திருக்கலாம்...சமீபகாலமாக முதல்வர் இப்படி ஒரு நடைமுறையை பின்பற்றுகிறார் என்பது குறிப்பிடதக்கது...அதாவது மக்களின் முடிவை தன் முடிவாக இறுதி செய்கிறார்....எது எப்படியோ குற்றசாற்று வந்துடன் கட்சியில் இருந்தே தூக்கி அடிக்கும் இவரின் செயல் திடமானது தான்......
Rate this:
Share this comment
Cancel
suresh - camp @ usa,இந்தியா
26-ஜன-201413:41:20 IST Report Abuse
suresh ஒன்று செய்யலாமா? ஜெயாவை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு, மறு நாளே,சொத்து குவிப்பு வழக்கை காரணம் காட்டி, அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்வீர்களா? பாசறை மக்களே, மாற்றி யோசியுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X