உற்பத்தி துறையும் பொருளாதார தேக்கமும் : சீர்திருத்தம் செய்யாமல் கோட்டை விட்டோம்

Updated : ஜன 26, 2014 | Added : ஜன 26, 2014 | கருத்துகள் (7)
Share
Advertisement
எந்த ஒரு நாட்டிலும், வலுவான உற்பத்தி துறையே, பெரிய நடுத்தர வர்க்கத்தை உருவாக்குவதற்கான அடித்தளம். நம் நாட்டில், ஐ.டி., போன்ற சேவை துறை தொழில்கள் மட்டுமே, பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினரை உருவாக்கி உள்ளன.இதனால், செலவு செய்து, ஆங்கில திறனுடன் தொழில்நுட்ப பட்டங்களை பெற்றவர்களுக்கே, நடுத்தர வர்க்கத்தில் புக வாய்ப்பு உருவாகிறது. இதுவே, உற்பத்தி துறை செழித்தால், பள்ளி
உற்பத்தி துறையும் பொருளாதார தேக்கமும் : சீர்திருத்தம் செய்யாமல் கோட்டை விட்டோம்

எந்த ஒரு நாட்டிலும், வலுவான உற்பத்தி துறையே, பெரிய நடுத்தர வர்க்கத்தை உருவாக்குவதற்கான அடித்தளம். நம் நாட்டில், ஐ.டி., போன்ற சேவை துறை தொழில்கள் மட்டுமே, பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினரை உருவாக்கி உள்ளன.

இதனால், செலவு செய்து, ஆங்கில திறனுடன் தொழில்நுட்ப பட்டங்களை பெற்றவர்களுக்கே, நடுத்தர வர்க்கத்தில் புக வாய்ப்பு உருவாகிறது. இதுவே, உற்பத்தி துறை செழித்தால், பள்ளி கல்வி முடித்தவர்களும், பட்டய படிப்பு படித்தவர்களும், நடுத்தர வர்க்கத்தில் புகும் சூழல் உருவாகும். நடுத்தர வர்க்கம் விரிவடைவதோடு, சமுதாயத்தில் அனைத்து தரப்பினருக்கும், சம வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகும்.ஜெர்மனி போன்ற, உற்பத்தி சார்ந்த நாடுகளில் இதுதான் நிலை.ஆனால், நம் நாட்டில் உற்பத்தி துறை முடமாக உள்ளது என்றால், அது மிகையாகாது. இந்த துறைக்கு, கிட்டத்தட்ட, புதிய முதலீடுகளே இல்லை. ஏற்கனவே, இந்த துறைக்காக உத்தேசிக்கப்பட்ட, 10 லட்சம் கோடி ரூபாய் தனியார் மற்றும் அரசு முதலீடுகளும் முடங்கிக் கிடக்கின்றன. இதற்கு என்ன காரணம்?

இன்றைய நிலையில் ஒரு அனல் மின் நிலையம் தொடங்க வேண்டுமானால், 118 அரசு துறைகள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். இதில், ஏதேனும், ஒரு துறை ஒப்புதல் மறுத்தால், பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஸ்தம்பித்து விடும்.
இப்படி பல முட்டுக்கட்டைகளை தாண்டி, ஒரு உற்பத்தி தொழில் தொடங்கப்பட்டால், அது ஏறத்தாழ, 70 சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்; ஆண்டுதோறும், 100க்கும் மேற்பட்ட அறிக்கைகள் மற்றும் விவரங்களை அரசு துறைகளிடம், தாக்கல் செய்ய வேண்டும்.


அச்சுறுத்தும் சூழல்:

இதனால், தொழில் முனைவோர், அரசுக்கு விவரம் கொடுப்பதே, தங்களின் முக்கிய பணியாக செய்ய வேண்டிய, இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.மேலும், அந்த, 70 சட்டங்களில், பல அடுக்கில் அதிகாரிகள், முதலீட்டாளரை கைது செய்யவோ அல்லது, தொழிற்சாலையை மூடவோ அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இத்தகைய அச்சுறுத்தும் சூழலால், உற்பத்தி துறையில் முதலீடு செய்வதை பற்றி சிந்திக்கவே, பெரும்பாலானோர்
அஞ்சுகின்றனர்.

கடந்த, 1991ல், பொருளாதார சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து, தற்போது வரை, பொருளாதாரத்தில், உற்பத்தி துறையின் பங்கு, 15 முதல், 16 சதவீதமாகவே உள்ளது. இதில், பெரிய முன்னேற்றமே இல்லை. 2006ல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, பொருளாதாரத்தில் உற்பத்தி துறையின் பங்கை, 10 ஆண்டுகளில், 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று, ஒரு இலக்கு நிர்ணயித்தது. இதற்கு, பெருமளவில் பொருளாதார சீர்திருத்தம் தேவைப்பட்டது.அதாவது, மின்சாரம், கட்டுமான பணிகள், துறைமுகம், சாலை, ரயில்வே, தொழிலாளர் திறன் மேம்படுத்துதல், வங்கி கடன் மற்றும் தொழில் துறையில் அரசு குறுக்கீட்டை குறைத்தல் போன்றவை குறித்து, புதிய அணுகுமுறைகள் தேவைப்பட்டன.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதை, தற்போது, முடங்கி உள்ள, 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் காட்டுகின்றன. இதற்கு, உலக பொருளாதாரத்தை, காங்கிரஸ் மந்திரிகள், கச்சிதமாக கைகாட்டுகின்றனர். அது எவ்வளவு தூரம் உண்மை?கடந்த, 2003ல் இருந்து, 2008 வரையிலான காலகட்டத்தை, உலக பொருளாதார வரலாற்றில், ஒரு பொற்காலம் என்று சொல்லலாம். அந்த காலகட்டத்தில், உலகில் உள்ள, 196 நாடுகளில், 180 நாடுகள் பொருளாதார வளர்ச்சி பாதையில் சென்றன. அதில், 114 நாடுகள், 2007-08ல், 5 சதவீத வளர்ச்சியை எட்டிப்பிடித்தன; அவற்றில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் இந்த பொற்காலம், 2009 வரை தொடர்ந்தது.


பெரும் தவறு:

சுருங்கச் சொன்னால், வளர்ச்சிக்காற்று அடிக்கும் போது, விரித்த பாய்மரங்களோடு, எந்த சிரமமும் இல்லாமல், இந்திய பொருளாதாரம் முன்னேற்ற பாதையில் நகர்ந்தது. இது, மன்மோகன் சிங்கின் பொருளாதார கொள்கை ஆற்றலாலும்; சிதம்பரத்தின் சாதுர்யத்தாலும்; மாண்டேக் சிங் அலுவாலியாவின் முற்போக்கு சிந்தனையாலும், சாத்தியமானதாக பறைசாற்றப்பட்டது.ஆனால், இதே விவேகர்களால், 2008க்கு பின், பெருமளவு வளர்ச்சியை கொடுக்க முடியவில்லை. ஏனெனில், வளர்ச்சிக்காற்று வீசாத காலங்களிலும், இந்திய பொருளாதார கப்பல், முன்னேறுவதற்கு தேவையான சீர்திருத்தங்களை செய்ய தவறி விட்டனர். இது, அவர்கள் செய்த பெரும் தவறு.அடுத்து வரும் அரசாவது உலக பொருளாதாரத்தை கை காட்டாமல், உற்பத்தி துறைக்கு வேண்டிய சீர்திருத்தங்களை கையாண்டு, அரசு குறுக்கீட்டை பெருமளவு குறைக்க வேண்டும். இது நடக்காவிட்டால், இந்தியாவின் உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு, பணவீக்கம் என, மொத்த பொருளாதாரமுமே பெருமளவில் பாதிக்கப்படும்.

எம்.ஆர். வெங்கடேஷ், பட்டய கணக்காளர் மற்றும் பொருளாதார நிபுணர்

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SINGA RAJA - Madurai,இந்தியா
26-ஜன-201418:20:58 IST Report Abuse
SINGA RAJA பொருளாதார மேம்பாடு என்பது ஒரு துறை மட்டும் மேம்படுத்தப்படுவதில் இல்லை. அது பல்முனை விரிவாக்க முறையிலானது. நாட்டில் உற்பத்தித் துறைகள் அநேகம் இருந்தும் இன்று பெரும்பான்மையான மக்களுக்கான கல்வி ஒரு குறிப்பிட்ட உற்பத்தித் துறைக்கே செல்கிறது. இதனால் மற்ற உற்பத்தி துறைகளின் வளர்ச்சிக்குத் தேவையான திறன்பட்ட நிபுணர்கள் எதிர்காலத்தில் குறைவாகவே இருக்கும் நிலை ஏற்படுகிறது. காலப்போக்கில் இதன் தொடர் நிகழ்வால் ஏனைய துறைகள் வளர்ச்சி குன்றி அதற்கான தேவைகளுக்கு நாம் அண்டை நாட்டைச் சார்ந்திருக்கும் நிலை உருவாகக்கூடும். ஆகவே, ஒரு அரசு பொருளாதார மேம்பாடுகளை உருவாக்கும் போது அதை அனைத்துத் துறைகளுக்குமான நீண்டகால, சம அளவிலான வளர்ச்சிக்குரியதாக திட்டமிட வேண்டும். நாட்டின் ஒவ்வொரு இடத்தின் வளர்ச்சி நிலைகளை ஆராய்ந்து, அதன் வளங்களுக்கேற்ப திட்டமிட வேண்டும். நாம் உலக பொருளாதாரத்தோடு இணைந்திருந்தாலும், நமது உள்நாட்டின் தேவைகளுக்கான தன்னிறைவை உற்பத்தித்துறையில் ஈடுகட்டத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் உலகப் பொருளாதாரத்தின் சரிவு நமக்கு பாதகத்தை ஏற்படுத்திவிடாமல் நாம் பாதுகாப்பைப் பெற முடியும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோலியப் பயன்பாடு, நமது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை அதிகமாக ஏற்படுத்தி வருகிறது. ஆகவே , பெட்ரோலியப் பொருளுக்கு மாற்றாக நாம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையில் நாம் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். உணவின் மூலமும், மக்களின் சீரற்ற பழக்கங்களின் மூலமும், இன்று மக்களுக்கு ஏற்படுகின்ற நோய்கள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்க வேண்டும். ஒருபுறம் கல்வி கற்று வெளிநாட்டினருக்கு தகவல்தொழில் நுட்ப துறைகளில் பணியாற்றும் நம்மவர்கள், முதலீட்டுக்கான ஆர்வமின்றி, கிடைக்கும் ஊதியத்தை நுகர்வுக் கலாச்சாரத்தில் அதிக அளவில் கொண்டு செல்வதும் எதிர்கால திட்டமிடல் குறைவும் பற்றிய நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.சமீப காலமாக ஏற்பட்டிருக்கும் குடும்ப உறவுச்சிதறல்கள் மற்றும் சர்வ சாதாரணமாகப் பரவிவரும் போதைக் கலாச்சாரத்திற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். நம் நாட்டில் விவசாய உற்பத்திக்கான மிகச்சரியான திட்டமிடல் இல்லை. கல்வியற்ற வயது முதிர்ந்த வேறு வழியில் தங்களது வாழ்வைத் தொடர இயலாத வறுமையின் கீழ் உள்ள மக்களே இன்று விவசாயப் பணிகளில் இருக்கிறார்கள். தகவல் தொழில் நுட்பத் துறையிலோ கம்ப்யுடரும் ஏசியும், விவசாயத்துறையிலோ வறுமையும் கிளிசலும். இதுதான் இன்றைய விவசாய உற்பத்தியாளர்களின் நிலை. நூற்றி முப்பது கோடி மக்களுக்கு உணவைப் படைப்பவனின் கதியோ கந்தல் உடைதான், அறியாமைதான், காய்ந்து வறண்ட பஞ்சடைத்த விழிகளும், உள்ளடங்கிய வயிறும்தான். விவசாய நவீன கல்வி ஒன்றே இந்த நிலைமையை மாற்றும். ஆகவே, பொறியியல், மருத்துவம், போன்று விவசாய உற்பத்தித் துறைகளில் நவீன கல்வியின் அவசியத்தை உருவாக்க வேண்டும். குறைந்த நீர்ப் பயன்பாட்டில் அதிக மகசூல் செய்யும் முறைகளை புதிய விவசாய கல்விகற்ற இளைஞர்களைக் கொண்டு உருவாக்க வேண்டும். கணினி தொழில் நுட்பத்தை அரசின் அனைத்துத் துறைகளிலும் புகுத்தி, உற்பத்திக்கான அலுவலகச் செலவுகளைக் குறைக்க வேண்டும். நாளுக்கு நாள் புதிய பரிணாம வளர்ச்சியை உருவாக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம், இதில் நம் தேசம் சார்ந்த அனைத்து துறை வளர்ச்சியிலும் நாம் அதிநவீன ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும். பொருளாதார மேம்பாடு என்பது பணம் மட்டும் சார்ந்த ஒன்றல்ல, அது பண்பாட்டு வளர்ச்சியின் அடிப்படையிலானது.
Rate this:
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
26-ஜன-201413:29:28 IST Report Abuse
Baskaran Kasimani ஜெயந்தி நடராஜன் போன்ற ....களை அமைச்சராக்கினால் இதுதான் நடக்கும்.
Rate this:
Cancel
Joe Pushparaj - Madurai,இந்தியா
26-ஜன-201412:49:44 IST Report Abuse
Joe Pushparaj ஹ்ம்ம் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டுமென்றால் ஒரு கட்டுரை எழுத வேண்டும். இதற்கு பல கூற்றுகள் [நிதர்சனங்கள்] காரணமாக உள்ளன. நமது நாடு என்பது ஐரோப்பிய நாடுகளை போலவோ ஜப்பானை போலவோ இல்லா விட்டால் தூர அல்லது மத்திய கிழக்கு நாடுகளை போலவோ ஒரு சீரான வரையறையுள்ள அரசியலமைப்பை அடிப்படையாக கொண்டதல்ல. மாறாக அந்தந்த காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்ற சூழ்நிலை கூறுகளை உடன் சேர்த்து கொண்டு உருவானது. அதுவும் இல்லாமல் நம்முடன் நேரடி போட்டியாளர்களாக இருப்பவர்கள் சீனா போன்ற வளரும் நாடுகள். அதனால் நம் உற்பத்தி திறன் சார்ந்த முறைமையும் அவர்களுடைய தரத்தினை மிஞ்சினால் போதும் என்று நம்மிடம் வாங்கி விற்பவர்கள் [அமெரிக்க ஜப்பான் இங்கிலாந்து போன்ற நாடுகள் விரும்புகின்றன.] அதனால்தான் இந்த நிலைமை, இது ஆட்சிக்கு வருபவர்கள் தெரிந்திருக்கும் நீண்ட கால வரலாறு. இதற்கு மாற்று கூறுகள் என்பன பற்றி ஆராய்ந்தோம் என்றால் உரிமைகள்[ownership] நதிநீர் பங்கீடு மின்சாரம் கல்வி போன்றவை மாநில அரசாங்கங்களின் தலையில் கட்டபடுகின்றன. ஆனால் முடிச்சு [டிச்ரிபுடிஒன், சலுகை, அதிகாரம் வழங்கல் [ஒப்பீடு முறை ] போன்றவை மத்திய அரசின் கையில் உள்ளது. இன்றைய கூட்டணி ஆட்சி தத்துவம் என்று வெளிநாட்டு முதலீட்டாளர்களை நம்ப வைத்து காலத்தை வோட்டிக் கொண்டிருப்பதுவும் இந்த நிலைமையினால் தான். இதனால் தான் புதிதாக கேரளா கோழி உற்பத்தி தொடங்குவதும் கர்நாடகா கோவை தொழிலதிபர்களை தங்கள் மாநிலத்திற்கு கூப்பிடுவதும் குஜராத் மாநிலத்திற்கு மேற்கு வங்காள உரிமை பெற்ற டாட்டா ஆலை சென்றதும் நடந்தது, [நமது தமிழ்நாடு சென்னை துறைமுக போக்குவரத்து] இலங்கைக்கும் மேற்கு வங்காளத்திற்கும் பிரித்து அளிக்கப்பட்து உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X