பதிவு செய்த நாள் :
கருத்துகள் (6)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேர் எழுதிய குரூப் - 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தேர்வு முடிவை மேலும் ஒரு மாதம் தள்ளிவைத்து வெளியிட, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ல், குரூப் - 4 தேர்வு நடந்தது. இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்காக நடந்த தேர்வை, 12.21 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என, கூறப்பட்டது. குரூப் - 4 தேர்வை, பட்டதாரிகளும் எழுதியுள்ளனர். இவர்கள், குரூப் - 2 தேர்வையும் எழுதியுள்ளனர்.

2012ல் நடந்த குரூப் - 2 தேர்வில், நேர்முகத் தேர்வு அல்லாத உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவை, இன்னும், தேர்வாணையம் வெளியிடவில்லை. குரூப் - 2 தேர்வு முடிவிற்கு முன், குரூப் - 4 தேர்வு முடிவை வெளியிட்டால், முதலில், கிடைத்த வேலையில் சேரலாம் என,முடிவெடுத்து, பட்டதாரிகளும், குரூப் - 4 வேலையில் சேர்வர்.

பதவி உயர்வு :
பின், குரூப் - 2 தேர்வு முடிவை வெளியிடும்போது, அதில் தேர்ச்சி பெற்றால், குரூப் - 4 வேலையை கைவிட்டு, அதிக சம்பளம், விரைவாக, அதிகாரி நிலைக்கு பதவி உயர்வு ஆகிய சிறப்புகளை கொண்ட, குரூப் - 2 வேலைக்கு வருவர்.இதனால், குரூப் - 4 நிலையில், மீண்டும் காலி பணியிடம் ஏற்படும்.

Advertisement

இதற்கு, மீண்டும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டியிருக்கும். இந்த சிக்கலை மனதில் கொண்டு,முதலில், குரூப் - 2 தேர்வு முடிவை வெளியிட்டு, பணி நியமனம் வழங்கியபின், குரூப் - 4 தேர்வு முடிவை வெளியிட, தேர்வாணையம் திட்டமிட்டு உள்ளது. குரூப் - 2 சான்றிதழ் சரிபார்ப்பு, இரு வாரம் வரை நடக்கும் என்பதால், 20 நாள் முதல், 25 நாள் கழித்தே, குரூப் - 4 தேர்வு முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள், தெரிவித்தன.
- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
எல்.கே.மதி - Lalgudy,இந்தியா
27-ஜன-201419:42:17 IST Report Abuse
எல்.கே.மதி அரசுப்பணி தேர்வாணயத்தின் அசுரத்தனமான செயல்பாட்டை காட்டுகிறதல்லவா இத்தனை நாள் இழுத்தடிப்பு நாடகம் என்ன என்ன 'குல்மால்' பேரங்கள் நடைபெறுகிறதோ யார் கண்டது? காசேதான் கடவுளடா என்ற பாடல் நினைவுக்கு வருகிறதா? வாழ்க புரட்சித்தலைவி அம்மா? வாழ்க எம்.ஜி.ஆர்.நாமம்
Rate this:
Share this comment
Cancel
raji - devakottai,இந்தியா
27-ஜன-201410:26:07 IST Report Abuse
raji நேர்மையான தி்றமையான சேர்மன் என்று அனைவரும் நம்புகிறார்கள் ஃ தாமதம் இல்லாமல் பணி நியமனம் வழங்குங்கள்
Rate this:
Share this comment
Cancel
surath - sohar,ஓமன்
26-ஜன-201418:50:12 IST Report Abuse
surath already 6 month gone, after result, it will take another 1 year for appointment. Kindly note that, For 2012-13 group-2 written result relased 1 year back. Till now not posted any single post for NON OT, from the date of written exam aleady 2 year gone
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
26-ஜன-201416:07:40 IST Report Abuse
Pugazh V அதிமுக ஆட்சியின் இந்த அவலங்களை எல்லாம் மக்கள் கண்டுக்க மாட்டார்கள். அழகிரியை திமுக விலிருந்து நீக்கியதல்லவா அவர்களுக்கு முக்கியம். அதிமுக அரசு என்ன கேவலமாக ஆட்சி செய்தாலும் அவர்களின் வாக்கு ரெட்டை இலைக்குத் தான்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
26-ஜன-201411:22:34 IST Report Abuse
Nallavan Nallavan மத்திய மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகள் உண்மையிலேயே பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படுகின்றனவா அல்லது தேர்வுக் கட்டணம் என்ற பெயரில் பணம் வசூல் செய்து நிதிச் சுமையைச் சமாளிக்கும் நோக்கத்திலா என்ற சந்தேகத்தை இது போன்ற தாமதங்கள் ஏற்படுத்தும் .....
Rate this:
Share this comment
Cancel
Tiruvannamalai Kulasekaran - AUSTRALIA  ( Posted via: Dinamalar Android App )
26-ஜன-201404:38:34 IST Report Abuse
Tiruvannamalai  Kulasekaran நேர்மையான தி்றமையான சேர்மன் என்று அனைவரும் நம்புகிறார்கள் ஃ தாமதம் இல்லாமல் பணி நியமனம் வழங்குங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X