இயற்கையின் நாயகி

Added : ஜன 26, 2014 | கருத்துகள் (5)
Advertisement
உயிர் வாழத் தேவையான அத்தனை காரணிகளிலும் நச்சும், நஞ்சும் கலந்து, மனிதனை நிரந்தர நோயாளியாக்கி வரும், இக்காலத்தில் இயற்கையாய் கிடைக்கும் பொருட்களின் மதிப்பு, விலைமதிப்பற்றது. வரும் தலைமுறையினருக்கு, இயற்கை சார்ந்த பொருட்களை அறிமுகப்படுத்தி, அழிவின் விளிம்பில்இருந்து மண்வளம் காப்பாற்ற முனைந்த நம்மாழ்வார், விதைத்த நல்விதைகளாக இன்றும் பலர் களம் இறங்கி, இயற்கையை
இயற்கையின் நாயகி

உயிர் வாழத் தேவையான அத்தனை காரணிகளிலும் நச்சும், நஞ்சும் கலந்து, மனிதனை நிரந்தர நோயாளியாக்கி வரும், இக்காலத்தில் இயற்கையாய் கிடைக்கும் பொருட்களின் மதிப்பு, விலைமதிப்பற்றது. வரும் தலைமுறையினருக்கு, இயற்கை சார்ந்த பொருட்களை அறிமுகப்படுத்தி, அழிவின் விளிம்பில்இருந்து மண்வளம் காப்பாற்ற முனைந்த நம்மாழ்வார், விதைத்த நல்விதைகளாக இன்றும் பலர் களம் இறங்கி, இயற்கையை கொண்டாடி வருகின்றனர். அவர்களில் ஒருவர் மதுரையை சேர்ந்த கஜலட்சுமி.
கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள இவரது தோட்டத்தில் இருந்து இயற்கை உரங்களால் சாகுபடியாகும் மலை வாழைப்பழம், ஆரஞ்ச், பட்டர்புரூட், பலா என பழவகைகளை, கடந்த சில ஆண்டுகளாக, மதுரையில் வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்து வருகிறார். இதன் அடுத்த கட்டமாகஇந்தியாவின் பல மாநிலங்களுக்கும் பயணம் செய்து, ஒவ்வொரு இடங்களிலும், கலப்படமே இல்லாமல் இயற்கை சார்ந்து கிடைக்கும் பொருட்களை அறிந்து, அவற்றையும் இங்கு கொண்டு வந்து "நவதானியா' என்ற பெயரில் அறிமுகம் செய்து உள்ளார். இதில் உணவு வகைகள் முதன்மையானவை. மசாலா பொருட்கள், அரிசி, சிறு தானியங்கள், பழங்கள், உலர் பழங்கள் மற்றும் மண்ணில் தயாரிக்கும் பானைகள், சணல் பொருட்கள், கலைப்பொருட்கள் என பல வகையான தயாரிப்புகள், வரவேற்பை பெறத் துவங்கின.


நவதானியா:

தற்போது கோமதிபுரம் மூன்றாவது மெயின் ரோட்டில் இயற்கை சார்ந்த பொருட்கள் மட்டுமே கிடைக்கும் "நவதானியா' என்ற நவீன ஷோரூமை துவக்கியுள்ளார். இந்த இயற்கை பயணம் குறித்து கஜலட்சுமி சொல்கிறார்...
" விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். அதனால் விவசாயம் என்பது என்ன, என எனக்கு சின்ன வயதிலேயே தெரியும். செயற்கை உரங்களின் பின் விளைவுகளால் மண் வளம் மட்டுமின்றி மனித வளம் பல விதங்களில் கெட்டுவிடுகிறது. குறிப்பாக செயற்கை உர தயாரிப்பு உணவுகளால் பெண்கள் எளிதாக பாதிக்கப்பட்டு விடுகின்றனர். அதை பல நிலைகளில் உணர்ந்தேன். அதன் வெளிப்பாடு தான் இந்த "நவதானியா'.
கொடைக்கானல் வாழைகிரியில் உள்ள தோட்டத்தில் சாகுபடியாகும் காப்பி மற்றும் மலைப்பயிர்கள் அனைத்தும் இயற்கை முறையில் தான் பயிரிடப்படுகிறது.
தற்போது குறைந்த பரப்பில் தான் இந்த சாகுபடி நடக்கிறது. அதனால் இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தும் தனியார் தோட்டங்களை தேர்வு செய்து அங்கிருந்து பழங்களை பெறுகிறோம்.


எக்கோ டூரிசம்:

கொடைக்கானல் பகுதியில் எக்கோ டூரிசம் துவங்க திட்டமிட்டுள்ளேன். கணவர் தீனதயாளன் எனது செயல்பாடுகளுக்கு முழு ஆதரவு அளிக்கிறார். உழைப்பின் மீது நம்பிக்கையுள்ள பெண்கள் வீடுகளில் சும்மா இருக்க கூடாது. தங்களிடம் உள்ள தனித்திறமைகள் மூலம் ஏதாவது ஒரு தொழிலை சிறு அளவில் துவங்கினால், படிப்படியாக முன்னேறலாம். அரசு மற்றும் தனியார் துறைகள் பல விதங்களில் இப்போது வழிகாட்டி வருகிறது", என்கிறார்.
இவரோடு பேச 98431 51352ல் டயல் செய்யலாம்.
- நமது செய்தியாளர் எட்வின்

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
10-பிப்-201402:48:47 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே நல்ல முயற்சி தோழி. பயணம் தொடர வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
N.Balachandarr - Chennai,இந்தியா
04-பிப்-201420:11:07 IST Report Abuse
N.Balachandarr Best wishes .may her breed grow and bring beautiful future for the younger generation free fro all the toxin introduced by total mis management of government
Rate this:
Cancel
Gopi - Chennai,இந்தியா
04-பிப்-201413:08:41 IST Report Abuse
Gopi வாழ்த்துக்கள், மற்ற ஊர்களுக்கும் விரிவு படுத்தவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X