அந்தமானில் காஞ்சிபுரம் சுற்றுலா பயணிகள்... நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து| 32 tourist dead in Andaman | Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (29)  கருத்தை பதிவு செய்ய

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இருந்து ஒரு குழுவாக, அந்தமானுக்கு சுற்றுலா சென்றவர்களுக்கு, நேற்றைய குடியரசு தினம், மிகப்பெரிய சோக தினமாக மாறி விட்டது. அந்தமான் அருகே, நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில், ஆறு குழந்தைகள் உட்பட, 32 பேர் இறந்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தை சேர்ந்தவர், குருசாமி செல்வராஜ், 64; 'பூஜா டிராவல்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்; அவ்வப்போது, சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்வார்.
இம்மாதம், அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு, சுற்றுலா ஏற்பாடு செய்தார். காஞ்சிபுரம், பி.எஸ்.கே., தெரு, கவரை தெரு, எண்ணெய்காரத் தெரு, குமார் தெரு, மின் நகர் பகுதியைச் சேர்ந்த, 16 ஆண்கள், 13 பெண்கள், மூன்று குழந்தைகள் உட்பட 32 பேர், சுற்றுலாவிற்கு தயாராகினர்.அனைவரும், 23ம் தேதி, அதிகாலை காஞ்சிபுரத்தில் இருந்து வேனில், சென்னை விமான நிலையம் சென்றனர். அங்கிருந்து, காலை, 8:10 மணிக்கு, விமானத்தில் அந்தமான் புறப்பட்டு சென்றனர்.

உறவினர்களுடன்...:அவர்களுடன், மும்பையில் வசிக்கும், அவர்களின் உறவினர்கள், அந்தமானில் இணைந்து கொண்டனர்.அனைவரும் அந்தமான் பகுதியை சுற்றிப் பார்த்தனர். நேற்று காலை, அந்தமான் அருகே உள்ள, ராஸ் தீவு, நார்த் பே தீவு, வைப்பர் தீவு, அந்தமான் தலைநகர், போர்ட்பிளேர் ஆகிய இடங்களை சுற்றிப் பார்க்க, படகில் சென்றனர். படகில், சுற்றுலாப் பயணிகளை குழுவாக அழைத்து சென்ற, செல்வராஜ், 64, அவரது மகன் மணிகண்டன், 35, மருமகள் உஷா, 30, பேத்தி பூஜா, மகள் கீதா; மின்நகர் அடுத்த எஸ்.எஸ்.வி., நகரைச் சேர்ந்த, சுரேஷ்சா, 36, அவரது மனைவி நித்யாபாய்,26, மகள்கள் தர்ஷினி, 7, வினோதினி, 3, அவரது தாயார் சாந்தாபாய், 65, மாமியார் சாந்திபாய்; கவரை தெருவைச் சேர்ந்த மணி, 33, அவரது மனைவி உஷா, 30, மகள் பூஜா, 3; குமார் தெருவைச் சேர்ந்த தியாகராஜன், 60, அவரது மனைவி அனுராதா, 54, கணபதி, 64, உட்பட, 45 பேர் பயணம் செய்தனர். தீவுகளை சுற்றி பார்த்துவிட்டு, மாலை, 4:00 மணிக்கு ராஸ் தீவில் இருந்து நார்த் பே தீவுக்கு திரும்பினர்.நடுக்கடலில் சென்ற போது, திடீரென படகு கவிழ்ந்தது. அனைவரும் கடலில் விழுந்தனர். தகவல் அறிந்து மீட்பு படையினர் விரைந்து சென்று கடலில் தத்தளித்தவர்களை, மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில், ஆறு குழந்தைகள் உட்பட, 32 பேர் இறந்தனர்; 13 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து காரணம்:அதிக பயணிகளை ஏற்றிச் சென்றதால், பாரம் தாங்காமல், படகு கவிழ்ந்ததாக ஒரு தரப்பிலும், பாறை மீது மோதி, படகு கவிழ்ந்ததாக மற்றொரு தரப்பிலும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. நார்த் பே தீவுக்கு வரும் கடல் பாதையில், குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பாறைகள் கிடையாது. அந்த பகுதியை விட்டு பாறை உள்ள பகுதிக்கு படகு சென்றதால் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

விபத்தில் தப்பிய தியாகராஜன் என்பவர் கூறும்போது, ''விபத்து எப்படி நடந்தது என்பதே தெரியவில்லை. திடீரென படகு கவிழ்ந்து அனைவரும் தண்ணீரில் விழுந்தோம். எனக்கு எதுவும் புரியவில்லை,'' என்றார்.

நேற்று இரவு, 9:00 மணிக்கு கிடைத்த தகவலின்படி, காஞ்சிபுரத்தில் இருந்து சென்றவர்களில், இரண்டு குழந்தைகள் உட்பட, 15 பேர் மீட்கப்பட்டு, போர்ட்பிளேரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

பிரதமர் அதிர்ச்சி:அந்தமானில் நடந்த படகு விபத்தில், ?? பேர் இறந்தது குறித்து, பிரதமர், மன்மோகன் சிங், அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:அந்தமானில் நடந்த படகு விபத்தில், ?? பேர் இறந்த சம்பவம் குறித்து, பிரதமர் அதிர்ச்சி அடைந்து உள்ளார். உயிரிழந்தோருக்கு, ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். விபத்தில் சிக்கி, மாயமானவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி, மத்திய அரசின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

*'அக்வா மரைன்' என்ற படகு தான், அந்தமானில், நடுக் கடலில் விபத்தில் சிக்கியது.
*இந்த படகில், 30 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால், 40க்கும் மேற்பட்டோர், இதில் சென்றுள்ளனர்.
*அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியதால், படகு, விபத்தில் சிக்கியதாக, முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
*படகில், உயிர் காக்கும் சாதனங்கள் எதுவும் இல்லாததும், உயிரிழப்பு அதிகரித்ததற்கு, முக்கிய

காரணமாக அமைந்து விட்டது.
*மீனவர்கள் கொடுத்த தகவலுக்கு பின், மீட்பு படையினர், விபத்து பகுதிக்கு விரைந்துள்ளனர்.
*விபத்து நடந்து, இரண்டு மணி நேரத்துக்கு பின் தான், மீட்பு படையினர், சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

தகவல் அறிய...
அந்தமான் கட்டுப்பாட்டு அறை: 03192-240127,03192-238881
மருத்துவமனை : 03192-2030629

முந்தைய விபத்துகள் :
2009 செப்., 30 :தேக்கடி ஏரியில், சுற்றுலா படகு, கவிழ்ந்து 45 பேர் பலி.
2010 அக்., 17 :பீகாரில், கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்ததில், 11 பேர் பலி.
2010 டிச., 26:ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் அருகே முல்லித்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்ததில், 15 பேர் பலி.
2011 டிச., 25 :பழவேற்காடு ஏரியில், படகு கவிழ்ந்து 22 பேர் பலி.
2012 ஏப்., 30 :அசாமில், பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்தது. 200 பேர் பலியாகினர்.
2013 ஜூலை 12 :பீகாரின் கோசி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், 11 பேர் பலி.

அந்தமான் படகு விபத்து நடந்தது எப்படி? அந்தமானில், காஞ்சிபுரம் மக்களை பலி வாங்கிய படகு விபத்துநடந்தது எப்படி என்பது குறித்து, புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. காஞ்சிபுரத்தில் இருந்து சென்று, அந்தமான் படகு விபத்தில் உயிர் தப்பிய, செல்வராஜ் குருசாமி கூறியதாவது: காஞ்சிபுரத்தில் இருந்து சென்ற, 32 பேரும், ஒரே படகில் தான் நேற்று காலை சென்றோம். வழக்கமாக, மெரினா பார்க் அருகே உள்ள, அபரிஞ்ச் ஜெட்டி என்ற பகுதியில் இருந்து தான் சுற்றுலா பயணிகள் செல்வர். அங்கிருந்து, ராஸ் தீவு, 1 கி.மீ., தூரத்தில் தான் உள்ளது.நேற்று, குடியரசு தினம் என்பதால், இந்திய எல்லையை ஒட்டிய பகுதியான, அபரிஞ்ச் ஜெட்டி பகுதியை மூடிவிட்டனர்.இதனால், சாத்தம் ஜெட்டி என்ற பகுதியில் இருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இங்கிருந்து ராஸ் தீவு, 5 கி.மீ., தூரம் அதிகம் என்பதால், திரும்பி வருவதில் தாமதம் ஏற்பட்டது.அபரிஞ்ச் ஜெட்டியில் இருந்து சென்றிருந்தால் சீக்கிரமே திரும்பியிருப்போம்; இதுபோன்ற விபத்தும் நடந்திருக்காது. நான் தப்பினேன்; என் மனைவி, குழந்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

அலை சீற்றம் தான் காரணமா? மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு உதவி செய்யும், அந்தமானைச் சேர்ந்த குமரேசன் கூறுகையில், ''அலையின் சீற்றம் காரணமாக, படகின் ஒரு பகுதியில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் சிலர், படகின் மற்றொரு பகுதிக்கு ஓடிச் சென்று உயிருக்கு போராடியுள்ளனர். பின்தொடர்ந்து மற்றொரு படகில் வந்தவர்கள், அவர்களைக் காப்பாற்றியதால், 16 பேர் உயிர் தப்பியுள்ளனர்,'' என்றார்.படகில் போதிய பாதுகாப்பு சாதனங்கள், உபகரணங்கள் இல்லாததும், விபத்திற்கு காரணம் என, கூறப்படுகிறது.

தப்பிய 16 பேர் யார், யார்?காஞ்சிபுரத்தில் இருந்து சென்றோரில், 16 பேர் உயிர் தப்பியுள்ளனர். செல்வராஜ் குருசாமி, ஜெயபாலன், பத்மினி, கஜேந்திரன், வள்ளி, பூஜா பாய், கங்கா, தியாகராஜன், வினோதினி, கோபால், சிவநாதம், பிரீத்தி, குமரகுரு நாதன், ரங்கநாதன், செல்வராஜ் மற்றும் சுப்ரமணி, ஆகிய 16 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், ஜி.பி.பந்த் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

சோகத்தில் மூழ்கிய காஞ்சிபுரம்: அந்தமானில் நடந்த படகு விபத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் இறந்தது, காஞ்சிபுரம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தகவல் அறிந்து, காஞ்சிபுரத்தில் இருந்து, அந்தமான் சென்றவர்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அனைவரும் அவர்களில் வீடுகளில் குவிந்தனர்.இறந்தவர்களின்

Advertisement

விவரம் தெரியாமல், இரவு வரை தவித்தனர். பெண்கள் அழுது புலம்பியபடி இருந்தனர். இச்சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் ஜெயலலிதா நிவாரண உதவி: இதுகுறித்த அவரது அறிக்கை: அந்தமான், போர்ட் பிளேரில் உள்ள, பே ஐலண்ட் அருகில், தனியாருக்கு சொந்தமான சுற்றுலாப் படகு ஒன்று, இன்று (நேற்று) மாலை, கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில் பயணித்த, 45 பேரில், 33 பயணிகள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். இந்த, 45 பயணிகளில், 28 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பலர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்ற செய்திகள் அறிந்து, மனவேதனை அடைந்துள்ளேன். இந்த செய்தி கிடைத்ததும், உடனடியாக தலைமைச் செயலரை தொடர்பு கொண்டு, விபத்துக்குள்ளான படகில் பயணித்த, தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் குறித்து, முழுத் தகவல்பெறுமாறும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் உத்தரவிட்டேன்.தமிழக அரசின் தலைமைச் செயலர், அந்தமான் யூனியன் பிரதேசத்தின், தலைமைச் செயலரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இருப்பினும், தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை பேர், இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்; எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்ற தகவல், இன்னும் அந்தமான் நிர்வாகத்திற்கு கிடைக்கவில்லை.

இச்சூழலில், தமிழக அரசின் வருவாய் நிர்வாக கமிஷனர் மற்றும் தமிழக அரசின் வருவாய் துறை செயலர் ஆகியோரை உடனடியாக, போர்ட் பிளேருக்கு செல்லுமாறும், மீட்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளேன்.மேலும், மீட்கப்பட்டவர்களையும், உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களையும், உடனடியாக அரசு செலவில் விமானம் மூலம், சென்னைக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளேன். இது மட்டுமின்றி, இறந்தவர்களின் உடல்களை, அரசு செலவில் சென்னைக்கு கொண்டு வந்து, அங்கிருந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.

இந்த துயர விபத்தில் சம்பந்தப்பட்டவர்களின், உறவினர்கள், விபத்துக்குள்ளானவர்களின் விவரங்களை அறிந்து கொள்ள வசதியாக, வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில், '1070' என்ற தொலைபேசி உதவி எண் தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, தலா, 1 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இறந்தவர்கள் எத்தனை பேர்? : காஞ்சி கலெக்டர் பேட்டி: காஞ்சிபுரம்: அந்தமானில், மீட்பு பணி முழுமையாக முடிந்த பின்னரே, இறந்தவர்கள் குறித்த தகவல் தெரிவிக்கப்படும், என, காஞ்சிபுரம் கலெக்டர், பாஸ்கரன் தெரிவித்தார்.நேற்று இரவு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரத்தில் இருந்து சென்றவர்களின் பெயர் பட்டியல் மட்டும், இதுவரை, கிடைத்துள்ளது. அந்தமானில், படகு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணி முடிந்த பிறகே, இறந்தவர்கள் குறித்த தகவல் தெரிய வரும். வருவாய் துறை செயலர், இன்று போர்ட்பிளேர் செல்கிறார். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (29)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Melbourne,ஆஸ்திரேலியா
28-ஜன-201402:57:34 IST Report Abuse
Raj 10 பேர் அதிகம் போனதால் எல்லாம் போட் ஒன்னும் உடைய வாய்ப்பில்லை. கண்டிப்பாக போட் மோசமான நிலையில் இருக்கு. நம்ம ஊரில் எந்த பஸ் ஆவது ஓவர் லோடு இல்லாம போகுதா? பிரச்சினை போட்-ல் இல்லை. அரசு இயந்திரம் சரியா செயல் படாமல் இருப்பதே காரணம். பாதுகாப்புக்கு, மனித உயிர் ரெண்டுமே ரொம்ப ரொம்ப விலை குறைவு நம்ம ஊரில். அடிப்படை மனித ஒழுக்க கல்வி ரொம்ப அவசியம். மக்களும் விதிகளை மதிச்சு நடக்கணும். எல்லாத்திலையும் அவசரம். அதிகாரிங்க லஞ்சம் கேக்கலநாளும் கொடுக்கற நாம் எத்தன பேர்? இது போல விபத்து இன்னும் நிறைய நடக்கும்.. மாற்றங்கள் வரவில்லை என்றால். ...
Rate this:
Share this comment
Cancel
Kumar Sivam - alain,பிரான்ஸ்
27-ஜன-201422:58:01 IST Report Abuse
Kumar Sivam இது ஒரு மோசமான நிகழ்வு. இனியாவது அரசும் சுற்றுலாப் பயணிகளும் உயிரின் அவசியத்தைக் கருதி நவீனத் தற்காப்பு வசதிகள் கொண்ட படகுகளில் மட்டும் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு குறைவான நபர்கள் பயணிக்க ஆவன செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
27-ஜன-201421:59:15 IST Report Abuse
Angry ஜெய் மிகப் பெரும் துயரம்
Rate this:
Share this comment
Cancel
kuchipudi gumma - chennai,இந்தியா
27-ஜன-201417:31:49 IST Report Abuse
kuchipudi gumma இருந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய , காஞ்சி மாநகர தெய்வங்கள் அருள வேண்டும் . இத்தருணத்தில் இருந்து நாம் சொந்த சிலவில் லைப் ஜாக்கெட் வாங்கி அணிந்து படகு சவாரி செய்வது பாதுகாப்பானது . சுற்றுலா நடத்துபவர்களும் இதில் கவனம் செலுத்தவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Richard.MM - Coimbatore,இந்தியா
27-ஜன-201417:04:23 IST Report Abuse
Richard.MM ஆழ்ந்த அனுதாபங்கள், இந்நிகழ்ச்சி உச்சகட்ட அலட்சியத்தின் உதாரணம், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு இது போன்ற பலவேறு நிகழ்வுகள் இருப்பினும் அது கருத்தில் நிற்காததின் விளைவு ஈடு செய்ய முடியாத இழப்பு, வருந்துவதை தவிர வேறு எதையும் செய்ய முடியாத நிலையில் நாம். RIP ALL OF THEM & CONDOLENCES TO GRIEVING FAMILIES & THEIR FRIS.
Rate this:
Share this comment
Cancel
S.Harris - Sivakasi,இந்தியா
27-ஜன-201416:33:50 IST Report Abuse
S.Harris ( முந்தைய விபத்துகள் : 2009 செப்., 30 :தேக்கடி ஏரியில், சுற்றுலா படகு, கவிழ்ந்து 45 பேர் பலி. 2010 அக்., 17 :பீகாரில், கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்ததில், 11 பேர் பலி. 2010 டிச., 26:ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் அருகே முல்லித்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்ததில், 15 பேர் பலி. 2011 டிச., 25 :பழவேற்காடு ஏரியில், படகு கவிழ்ந்து 22 பேர் பலி. 2012 ஏப்., 30 :அசாமில், பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்தது. 200 பேர் பலியாகினர். 2013 ஜூலை 12 :பீகாரின் கோசி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், 11 பேர் பலி.)
Rate this:
Share this comment
Cancel
s.p.poosaidurai - Ramanathapuram,இந்தியா
27-ஜன-201414:18:00 IST Report Abuse
s.p.poosaidurai துயரமான சம்பவம் எல்லா பகுதிகளில் போட்டிங் பயணம் நவீன பாதுகாப்பான பயணமாக அமைய அந்த அரசுகள் அந்த துறை வாரியாக ஆய்வு செய்து நடைமுறைபடுத்தவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
DDS - Belfast,யுனைடெட் கிங்டம்
27-ஜன-201414:01:11 IST Report Abuse
DDS நெஞ்சம் பதைக்கும் இது போன்ற செய்திகள் முழுமையாக இனி ஒருபோது நடக்காத வகையில் படகுகளில் பயணம் நடை முறை படுத்த வேண்டும்..பாது காப்பு உபகரணங்கள் இல்லா படகு போக்குவரத்து தடை செய்யப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
swaminathan babu - SHARJHA,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜன-201413:55:14 IST Report Abuse
swaminathan babu ஏன் இந்த கோரமான நிகழ்வுகள் இதயம் வலி தாங்க முடியவில்லை இறைவா ஏன் உனக்கு இந்த உயிர்கள் மிகவும் கொடுருமாக மாயித்துவிட்டாய் உயிர் பிரிந்தஅந்த குடும்பதிருக்கு நான் இறைவநிடும் பிராத்திக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
27-ஜன-201413:23:59 IST Report Abuse
Nallavan Nallavan சில வருடங்களாகவே அங்கொன்றும், இங்கொன்றுமாய் நடக்கும் நிகழ்வு ..... முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்பு உணர்வு இதெல்லாம் நமக்கு மழுங்கிப் போய்விட்டது ..... மனித உயிர்களும் மலிவாகிவிட்டன ..... ஒன்றும் செய்ய முடியாது ...... இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் தொடரும் ..... கூடிப் பேசிவிட்டு எந்தத் தீர்வும் இல்லாமல் கலைந்து போகும் மனிதர்கள் நாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X