அ.தி.மு.க.,வுக்கு தேர்தல் பிரசாரம்? : பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி| Panruti Ramachandran to campaign for ADMK? | Dinamalar

அ.தி.மு.க.,வுக்கு தேர்தல் பிரசாரம்? : பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

Updated : ஜன 28, 2014 | Added : ஜன 27, 2014 | கருத்துகள் (64) | |
""அ.தி.மு.க., கூட்டணிக்கு, நம்மால் முடிந்த ஆதரவு உண்டு,'' என, சமீபத்தில் அரசியலில் இருந்து விலகியதாக அறிவித்த, பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். அதனால், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., ஆதரவாக, அவர் பிரசாரம் செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசு தின நிகழ்ச்சிகள் முடிந்து, தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஜெயலலிதா, 2013ம் ஆண்டிற்கான தமிழக அரசின், அண்ணா விருதை,
அ.தி.மு.க.,வுக்கு தேர்தல் பிரசாரம்? : பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

""அ.தி.மு.க., கூட்டணிக்கு, நம்மால் முடிந்த ஆதரவு உண்டு,'' என, சமீபத்தில் அரசியலில் இருந்து விலகியதாக அறிவித்த, பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். அதனால், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., ஆதரவாக, அவர் பிரசாரம் செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசு தின நிகழ்ச்சிகள் முடிந்து, தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஜெயலலிதா, 2013ம் ஆண்டிற்கான தமிழக அரசின், அண்ணா விருதை, சமீபத்தில், விஜயகாந்தின் தே.மு.தி.க., கட்சியிலிருந்து விலகிய, பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு வழங்கினார்.

அரசியலாக்கக் கூடாது:

மேலும், பாரதியார் விருது, அம்பேத்கர் விருது, பெரியார் விருது மற்றும் பாரதிதாசன் விருதுகளையும், அந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வழங்கினார். இதில், அண்ணா விருது பெற்ற, பண்ருட்டி ராமச்சந்திரன், தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியே வந்த போது, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரான, மா.பா.பாண்டியராஜன் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, நிருபர்களிடம் ராமச்சந்திரன் கூறுகையில்,"" நான், 1964ல், உதவி பொறியாளராக பணியாற்றிய போது, அண்ணாதுரையால் ஈர்க்கப்பட்டு, அரசியலுக்கு வந்தேன். ஜெயலலிதாவும், அவர் வழியில் செயல்பட்டு வருகிறார். அண்ணாதுரையை நம்பியவன் என்பதற்காக, எனக்கு விருது வழங்கப்பட்டுஉள்ளது; இதை அரசியலாக்கக் கூடாது,'' என்றார். அவர், மேலும் கூறியதாவது: நாட்டில் பணக்காரர், ஏழை பாகுபாடு அதிகளவில் இருப்பதாக, மத்திய அமைச்சர் சிதம்பரமே கூறியுள்ளார். இதில், 50 சதவீத ஏழைகளின் சம்பாத்தியமானது, 3 சதவீத, பணக்காரர்களின் சம்பாத்தியத்திற்கு இணையாக உள்ளது. சம தர்ம சமுதாயம் அமைய வேண்டும்.

கடும் அதிருப்தி :

ஏழை, பணக்காரர் என்ற முரண்பாடுகளை மாற்றி அமைக்க, முற்போக்கு சிந்தனை தேவை. விரைவில், டில்லியில் அரசியல் மாற்றம் ஏற்படும் சூழல் உள்ளது. முற்போக்கு கொள்கையுடைய ஆட்சி அமைய வேண்டும். அ.தி.மு.க.,வும், கம்யூனிஸ்ட்களும் இணைந்து, முற்போக்கு கூட்டணியை அமைத்துள்ளன. அந்த கூட்டணிக்கு நம்மால் முடிந்த ஆதரவை தருவோம். இவ்வாறு, அவர் கூறினார்.
அ.தி.மு.க., கூட்டணிக்கு, நம்மால் முடிந்த ஆதரவு உண்டு என, பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்திருப்பதன் மூலம், லோக்சபா தேர்தலில், அவர் அந்தக் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X