தே.மு.தி.க., ஆதரவுடன் வாசன் போட்டி? காங்கிரஸ் கோரிக்கையை ஏற்றார் விஜயகாந்த்

Updated : ஜன 28, 2014 | Added : ஜன 28, 2014 | கருத்துகள் (45)
Advertisement
தே.மு.தி.க., ஆதரவுடன் வாசன் போட்டி? காங்கிரஸ் கோரிக்கையை ஏற்றார் விஜயகாந்த்

தமிழகத்தில் இருந்து, ராஜ்யசபா எம்.பி.,க்கள் ஆறு பேரை தேர்வு செய்ய, அடுத்த மாதம், 7ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில், அ.தி.மு.க., சார்பில், சசிகலா புஷ்பா, விஜிலா, முத்துக்கருப்பன், ஏ.கே.செல்வராஜ் ஆகிய நான்கு பேரும், மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில், ரங்கராஜனும் போட்டியிடுகின்றனர். எஞ்சிய ஒரு இடத்துக்கு, தி.மு.க., சார்பில், திருச்சி சிவா நிறுத்தப்பட்டுள்ளார்.


பலம் இல்லை:

ஆனால், 21 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ள, தே.மு.தி.க., போட்டியிடுமா அல்லது தி.மு.க.,வை ஆதரிக்குமா அல்லது போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. போட்டியிட்டாலும், வெற்றி பெறக் கூடிய அளவுக்கு, அக்கட்சிக்கு ஆதரவு பலம் இல்லாததால், போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும் என, எதிர்பார்க்கப்பட்டது. இச்சூழ்நிலையில், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, காங்கிரஸ் சார்பில், நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க, தே.மு.தி.க., சம்மதம் தெரிவித்துள்ளதாக, கூறப்படுகிறது. வாசன் வகித்து வரும், ராஜ்யசபா எம்.பி., பதவி, வரும், ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மீண்டும் எம்.பி.,யாக விரும்புகிறார். அதற்காக, தி.மு.க.,வின் ஆதரவை பெற, அவர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், தே.மு.தி.க., தயவுடன், அவர் களம் இறங்கக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வாசன் திட்டம் குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:


ஆதரிக்க முடியாது:

தி.மு.க., பொருளாளர், ஸ்டாலினுடன், வாசன் இதுகுறித்து மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். 'காங்கிரசை எதிர்த்து, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி விட்டோம். காங்கிரசுடன் இனி உறவு இல்லை என்ற முடிவு எடுத்த பின், ராஜ்யசபா தேர்தலில், காங்கிரசை ஆதரித்தால், தி.மு.க.,வின் நிலைப்பாடு கேலிக்குரியதாகி விடும். எனவே, தி.மு.க.,வால் உங்களை ஆதரிக்க முடியாது' என, ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதற்கு பின், ஸ்டாலின், சேலம் சென்று விட்டார். சென்னை திரும்பிய ஸ்டாலின், இந்த விஷயத்தை கூறுவதற்காக, கருணாநிதியை சந்தித்தார். அப்போது, அருகில் இருந்த கனிமொழியும், தன்னிடம் வாசன் பேசியதாக, கருணாநிதியிடம் கூறியிருக்கிறார். காங்கிரசுக்கு தி.மு.க., ஆதரவு அளிக்க முடியாது என்ற ஸ்டாலின் நிலைப்பாட்டை, கருணாநிதியும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.


மீண்டும் பேச்சு:

பின், வீடு திரும்பிய ஸ்டாலினுக்கு, மீண்டும் வாசனிடம் இருந்து போன் வந்துள்ளது. 'டில்லியில் இருந்து அகமது படேல் பேசினார். காங்கிரஸ் போட்டியிடுவதாக இருந்தால், ஆதரவு அளிக்க தயார் என, விஜயகாந்த் கூறியிருக்கிறார். அதனால், உங்கள் நிலை என்ன என, கேட்க சொன்னார்' என, வாசன் கூறியுள்ளார். அதற்கு ஸ்டாலின், 'எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை' என, பதிலளித்துள்ளார். 'இதை காங்கிரஸ் மேலிடத்திடம் கூறி விடலாமா' என, வாசன் மீண்டும் கேட்க, 'ஆமாம்' என, ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இவ்வாறு, தி.மு.க., வட்டாரம் தெரிவித்தது. இதற்கு பிறகே, தே.மு.தி.க., ஆதரவுடன், ராஜ்யசபா தேர்தலில் களம் இறங்கலாமா என, வாசன் யோசித்து வருகிறார். சட்டசபையில், காங்கிரசுக்கு ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தே.மு.தி.க., ஆதரித்தால், காங்கிரசால், 26 ஓட்டுகள் பெற முடியும். தி.மு.க.,வும் அதே பலத்துடன் தான் களம் இறங்கியுள்ளதால், இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி ஏற்படும்.


இன்று முடிவு:

பா.ம.க., உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ, அந்த கட்சிக்கு வெற்றி கிட்டும் என்ற நிலை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு, பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் புதிய தமிழகம் அதிருப்தி எம்.எல்.ஏ., ஆகியோருடன், ரகசிய பேச்சுவார்த்தை, நடத்தப்பட்டு வருகிறது என, காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்தது. ராஜ்யசபா தேர்தலில், வாசனை ஆதரிக்கும் முடிவுக்கும், லோக்சபா தேர்தல் கூட்டணிக்கும் தொடர்பு ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில், தே.மு.தி.க., தலைமை உறுதியாக உள்ளது. 'அது வேறு; இது வேறு' என்ற நிலையை, அக்கட்சி எடுத்துள்ளது போலவே, பா.ம.க.,வும் எடுத்தால், காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகி விடும் என்பது தான், வாசன் போடும் கணக்கு. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், வாசன் முடிவு இன்று தெரிந்து விடும்.


ரகசிய ஆலோசனை:

சென்னையில் உள்ள நாட்களில், வழக்கமாக கட்சி அலுவலகம் வரும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நேற்று அங்கு வரவில்லை. வீட்டிலேயே, கட்சி மாநாட்டு ஏற்பாடு குழு, கூட்டணி குழுவினரை அழைத்து, காலையில் ஆலோசனை நடத்தினார். மாலையில், கட்சியின் மாநில நிர்வாகி கள் சுதீஷ், சந்திரக்குமார், இளங்கோவன், பார்த்தசாரதி உட்பட, சிலரை மட்டும் அழைத்து, ரகசிய ஆலோசனை நடத்தினார். அப்போது, ராஜ்யசபா தேர்தலில், வாசன் போட்டியிட்டால், அவருக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து, விவாதித்ததாகவும், அதில், சாதகமான முடிவு எடுக்கப்பட்டதாகவும், தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
-- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kopula Jeyakumar - Madurai,இந்தியா
28-ஜன-201419:04:27 IST Report Abuse
Kopula Jeyakumar ரகுவின் கருத்து மரியாவின் தலையில் மிளகாய் அரைத்த மாதிரி இருக்கு. இப்பிடி துளி துளியா உறிஞ்சி உறிஞ்சி பாலைவனம் ஆக்கிவிட்டார் உங்கள் தலை.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sundram - Muscat, OMAN,ஓமன்
28-ஜன-201418:00:05 IST Report Abuse
Ramesh Sundram வாசன் அவர்களே சிதம்பரம் அவர்களிடம் சொல்லி விஸ்கி காந்த வீட்டிற்க்கு வருமான வரி பிரிவினரை வைத்து ஒரு ரேயது விட சொல்லுங்கள் தானாக காலில் சரக்கு அடிக்காமலே வந்து விழுவார் விஸ்கி காந்த பிறகு நீங்கள் பார்த்து கொள்ளுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Ravikrishna - singapore,சிங்கப்பூர்
28-ஜன-201416:44:46 IST Report Abuse
Ravikrishna யப்பா வாசா பரவாயில்லப்பா தமிழன் என்று இலங்கைக்கு வாதிடாவிட்டாலும். திமுக விடம் நன்றியோடு கூட்டா இல்லையே என்று கேட்டியே இப்ப நீ கொஞ்சம் தமிழன் தான்... இப்பத்தான் கைப்புள்ள கெலம்புரான் ...அட புரியலையா...கைப்புள்ள கதை கிளைமாக்ஸ் தான் கடைசியில்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X