அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசின் நடவடிக்கைகளால் வாசன் கவலைப்படுகிறார்: கருணாநிதி

Updated : ஜன 28, 2014 | Added : ஜன 28, 2014 | கருத்துகள் (84)
Advertisement
மத்திய அரசின் நடவடிக்கைகளால் வாசன் கவலைப்படுகிறார்: கருணாநிதி

சென்னை: ''கச்சத்தீவு பிரச்னையில், மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு, மத்திய அமைச்சர் வாசன் கவலைப்படுகிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: 'கச்சத்தீவு அருகில், மீன் பிடிக்க, தமிழக மீனவருக்கு உரிமை இல்லை' என, சென்னை உயர்நீதிமன்றத்தில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தின் சார்பில், மத்திய அரசில் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்களே, மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து கவலைப்படுகின்றனர். உதாரணமாகக் கூற வேண்டுமானால், வாசன், 'கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, கூறியிருக்கிறார். 'கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது' என, தெரிவிக்கக் கோரி, சுப்ரிம் கோர்ட்டில், தி.மு.க., தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தில், கச்சத்தீவில், தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பான வழக்கு நடைபெறுவதும், அதில் மத்திய அரசு ஒரு மனுவைத் தாக்கல் செய்வதும், தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு காரியம். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருப்பதாக, மத்திய அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கலாம். அதற்கு மாறாக, தமிழர்களின் மனதை நோகடிப்பதற்காகவே, இப்படியொரு மனுவை, மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது, தமிழர்கள் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயல். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
29-ஜன-201402:42:56 IST Report Abuse
John Shiva   U.K வாசனின் கவலைகள் எல்லாம் தனது அமைச்சுப் பதவி .இவர் ஈழத்தில் கொலைகள் ,மீனவர் கொலைகள் நடக்கும் போது வாசனும் சிதம்பரமும் வாய் மூடி மவுனியாக இருந்தார்கள் .இப்ப தேர்தல் வந்தவுடன் முதலைகண்ணீர் வடிக்கிறார்கள்.இவர்களை நம்பி தமிழ் நாட்டு மக்கள் ஏமாறக் கூடாது . கருணாநிதிக்கு ஒருவரும் கூட்டுக்கு வரமாட்டார்கள் என்று தெரியும் .
Rate this:
Share this comment
Cancel
Kopula Jeyakumar - Madurai,இந்தியா
28-ஜன-201418:14:45 IST Report Abuse
Kopula Jeyakumar தமிழ் சிங்கம் வஞ்சபுகழ்ச்சி அணியில் கருத்தை பதிகிறார். அவரிடம் கோபம் கொள்ள வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
Ravikrishna - singapore,சிங்கப்பூர்
28-ஜன-201416:51:15 IST Report Abuse
Ravikrishna நீங்க எல்லாரும் இந்த தமிழன் தமிழன் என்று சொல்லியே ஓட்டுங்கடா உங்களை யாரும் தமிழ்நாட்டில் அசைச்சுக்க முடியாது ...தமிழன் வாழவேண்டுமென்றால் நீங்க யாரும் உயிரோடு இருக்கக்கூடாது நீங்க சாவுற அன்னைக்குத்தான் எங்களுக்கு உண்மையான தமிழன் தீபாவளி .....பொங்கல் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X