பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 19,326 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்: எஸ்.பி., ஆச்சியம்மாள் தகவல்

Added : ஜன 29, 2014
Advertisement

கரூர்: ""தமிழகத்தில், 19, 326 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,'' என, சென்னை மண்டல எஸ்.பி., ஆசியம்மாள் கூறினார்.
குடிமைப்பொருள்வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் புதிய அலுவலகத்தை நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் அருகில், கலெக்டர் ஜெயந்தி தலைமை வகித்து திறந்து வைத்தார். குடிமைப்பொருள்வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை மண்டல எஸ்.பி., ஆசியம்மாள் முன்னிலை வகித்தார். பின்னர் எஸ்.பி., ஆசியம்மாள் நிருபர்களிடம் பேசியதாவது: இந்த அலுவலகத்தில், ஒரு எஸ்.ஜ., நான்கு போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் மிகவும் குறைந்த அளவில் ரேஷன் அரிசி கடத்தல் நடந்து வருகிறது. இதை போலீஸார் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.
மொத்தம், 9,390 வழக்குகள், தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 4,668 வழக்கில், 19, 326 குவிண்டால் ரேஷன் அரிசியும், 946 வழக்குகளில், 46, 500 லிட்டர் கெரசினும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு, 95.7 லட்சம் ரூபாய். மாநிலத்தில் மொத்தம், 9,390 வழக்குகளில், 6,439 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 166 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய, 1,063 இரு சக்கர வாகனங்கள், 86 மூன்று சக்கர வாகனம், 396 நான்கு சக்கர வாகனம் என, மொத்தம், 1,545 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், கர்நாடக மாநிலம் பங்காருபேட்டையைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X