பொது செய்தி

தமிழ்நாடு

அங்காளம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை

Added : ஜன 29, 2014
Share
Advertisement

காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அங்காளம்மன் கோவிலில், தை அமாவாசை சிறப்பு பூஜை நாளை நடக்கிறது. இதையொட்டி, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில், அம்மன் அலங்கரிக்கப்பட்டு, பிரகார உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

* தர்மபுரி வெளிப்பேட்டை அங்காளம்மன் கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. காலை, 10 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், மதியம், 1 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு, 9 மணிக்கு, ஜாம பூஜை நடக்கிறது.

* காரிமங்கலம், கெரகோடஅள்ளி ஸ்ரீ வீரதீர விவேக ஆஞ்சநேயர், பாலக்கோடு ஏரிக்கரை ஆஞ்சநேயர் கோவில், மணிக்கட்டியூர் ஆஞ்சநேயர் கோவில், தர்மபுரி எஸ்.வி.,ரோடு ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ கனவாய் ஆஞ்சநேயர் கோவில், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், எஸ்.வி., ரோடு அங்காளம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில், தை அமாவாசையை முன்னிட்டு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஸ்வாமி திருவீதி உலாவும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X