ஸ்டாலின் உயிருக்கு உண்மையிலேயே ஆபத்தா?

Added : ஜன 30, 2014 | கருத்துகள் (7)
Share
Advertisement
'இன்னும் மூன்று மாதங்களில், ஸ்டாலின் இறந்து விடுவார்' என, அழகிரி கூறியதாக, கருணாநிதி வெளியிட்ட தகவலின், களேபரம் முடிவதற்குள், 'ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து என்றும், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்றும் கோரி, மத்திய அரசிடம், தி.மு.க., தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில், ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்ய உள்ளதால், அவருக்கு பாதுகாப்பு தேவை எனக்கூறி, ஒரு
ஸ்டாலின் உயிருக்கு உண்மையிலேயே ஆபத்தா?

'இன்னும் மூன்று மாதங்களில், ஸ்டாலின் இறந்து விடுவார்' என, அழகிரி கூறியதாக, கருணாநிதி வெளியிட்ட தகவலின், களேபரம் முடிவதற்குள், 'ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து என்றும், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்றும் கோரி, மத்திய அரசிடம், தி.மு.க., தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில், ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்ய உள்ளதால், அவருக்கு பாதுகாப்பு தேவை எனக்கூறி, ஒரு மாதத்திற்கு முன், அந்தக் கடிதம் கொடுக்கப்பட்டதாகவும், தற்போது, உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளதாகவும், தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே, ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து உள்ளதா என்பது குறித்து, அந்தக் கட்சியின், முன்னாள், இந்நாள் நிர்வாகிகள், உணர்ச்சி பொங்க முன்வைத்த வாதங்கள்:

தன் குடும்பத்தைத் தவிர்த்து, மூன்றாம் நபர் ஒருவர், தி.மு.க.,வில் வளர்ந்துவிடக் கூடாது என்பதில், கருணாநிதி தெளிவாக இருக்கிறார். அதனால், தன்னை கொலை செய்ய திட்டமிட்டார் என, வைகோ மீது பழி சுமத்தி, அவராகவே, தி.மு.க., விலிருந்து வெளியேறச் செய்தார். இப்போது, ஸ்டாலின் குறித்து, அழகிரி சொன்னதாக ஒரு கருத்தை, கருணாநிதியே சொல்லுகிறார். கருணாநிதியை, அழகிரி சந்தித்த பின், அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அதற்கான காரணத்தை சொல்லும்போது, இப்போது சொல்லும் குற்றச்சாட்டை, கருணாநிதி ஏன் சொல்லவில்லை. சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்கு பின், அழகிரி இப்படி சொன்னார் என, சொல்வதன் பின்னணி என்ன? தமிழ் மக்கள் தெரிந்துகொள்ள இதைத் தெரிவிக்கிறேன் என்கிறார். இவரது குடும்ப சண்டையை, தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லையே. அவர்களது குடும்பத்தில் சண்டை என்பது, அரசியல் ரீதியாக நடக்கும் பதவிப் போட்டி. இதன்மூலம், தேர்தல் நேர ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். எனவே, கருணாநிதி இப்படியொரு குழப்பத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் குளிர்காய நினைக்கின்றார். நான் அடிப்பது போல அடிக்கிறேன்; நீ பிரிவதுபோல் பிரிந்து கொள். பின் சேர்வது போல் சேர்ந்து கொள்ளலாம் என்பதே இது. அழகிரி விவகாரத்தில், கருணாநிதி கடைபிடிக்கும் அணுகுமுறை. அவர் பாணியில் சொல்லப்போனால், நீர் அடித்து நீர் விலகாது. கட்சிக்குள் அவரது குடும்பத்தைத் தாண்டி, மூன்றாம் நபர் வந்துவிடக் கூடாது என்பது தான் கருணாநிதியின் கொள்கை. எனவே, மிக விரைவில், வழக்கமான அவரது பாணியில், கண்கள் பணித்தது; இதயம் இனித்தது என, அழகிரி தி.மு.க.,வில் சேர்த்துக் கொள்ளப்படுவார். ஏனென்றால், ஸ்டாலின் குறித்து, அப்படியொரு கருத்தை நான் கூறவே இல்லை என, அழகிரி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பரிதி இளம்வழுதி, செயற்குழு உறுப்பினர், அ.தி.மு.க.,

ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து நிலவுகிறது. லோக்சபா தேர்தலில் கட்சியின் பிரதான பிரசாரகர் அவர் என, குறிப்பிட்டு, ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு தி.மு.க., தலைமை கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதம், மத்திய உள்துறைக்கு அனுப்பப்பட்டு, ஆய்வு நடந்து வருகிறது என, வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது. இட்டுக்கட்டி வெளியிடப்பட்ட தகவல். அப்படியொரு சூழல், ஸ்டாலினுக்கு ஏற்படவில்லை. அவருக்கு ஆபத்து என்றால், அதை, வெளிப்படையாக சொல்லும் தைரியம், எதார்த்தம் தி.மு.க.,வுக்கு உண்டு. எதையும், மறைமுகமாக செய்யவேண்டிய அவசியம் தி.மு.க.,வுக்கு இல்லை. இதற்கிடையே, அழகிரிக்கும், தலைவர் கருணாநிதிக்கும் இடையே கோபாலபுரம் வீட்டில் நடந்த வாக்குவாதங்கள் குறித்து, கருணாநிதியே வெளிப்படையாகக் கூறியுள்ளார். செய்தியாளர்கள் மத்தியில், தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பின்போது தான், 'மூன்று மாதங்களில் ஸ்டாலின் இறந்து விடுவார் ' என, அழகிரி கூறியதாக, கருணாநிதி சொன்னார். மேலும், அழகிரி எப்போது வீட்டுக்கு வந்தார் என்றெல்லாம் சொல்லி, அதற்கான விளக்கங்களையும், தெரிவித்து விட்டார். இந்த விவகாரத்தில், மேலும், சந்தேகம் இருந்தால், அவரிடமே விளக்கமும் பெறலாம். மாறாக, தவறான புரிதல்களுடனும், வேண்டுமென்றே பொய்யை பரப்பும் வகையில், தகவல்களை வெளியிடுகின்றனர். ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து என்ற தவறான தகவலை, இரு வேறுபட்ட பிரச்னைகளை இணைத்தும், திரித்தும் பரப்புகின்றனர். 'பேஸ்புக், ட்விட்டர்' போன்ற சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து, தேவையற்ற வதந்திகளை, ஸ்டாலின் தொடர்பாக வெளியிடுகின்றனர். இதற்கு, சமூக வலைதளங்களிலும், பதில் சொல்லி வருகிறோம். எனவே, இப்பிரச்னையில் இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

ஜெ.அன்பழகன், தென்சென்னை மாவட்ட, செயலர். தி.மு.க.,

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜன-201410:08:14 IST Report Abuse
வெ.சங்கரன் ஏதாவது அனாதைபிணம் கிடைத்தி்ட , ஸ்டாலி னுக்காக உயிர் தி்யாகம் என்ற நாடகமும் நடக்கும். .....
Rate this:
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
30-ஜன-201410:04:15 IST Report Abuse
Divaharan ஐ நா சபையிடம் பாதுகாப்பு கேட்டு இருக்கலாம் ?
Rate this:
Cancel
sundar - Pdy,இந்தியா
30-ஜன-201409:35:55 IST Report Abuse
sundar ஏன் இப்போதுள்ள நாளிதழ்களின் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு அழகிரியை கைது செய்யலாமே. அப்படி செய்யும் பட்சத்தில் அவர்கள் ஆடும் நாடகம் வெளிச்சத்திற்கு வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X