அ.தி.மு.க.,வை ஒழிக்க வேண்டும் : பா.ம.க., ராமதாஸ் ஆவேச பேச்சு

Updated : பிப் 02, 2014 | Added : பிப் 01, 2014 | கருத்துகள் (12)
Advertisement
அ.தி.மு.க.,ஒழிக்க வேண்டும், பா.ம.க., ராமதாஸ்,Ramdoss,  ADMK

"தமிழகத்தில் தான், ஓட்டுகள் விற்பதும், வாங்குவதும் நடக்கிறது. அதனால், தமிழகம், அவமான சின்னமாக விளங்குகிறது,” என, பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

சேலத்தில், பா.ம.க., சார்பில், மது ஒழிப்பு குறித்த பெண்கள் மாநாட்டுக்கு தலைமை வகித்து, அக்கட்சியின் நிறுவனர், ராமதாஸ் பேசியதாவது:குழந்தைகளுக்கு ஓட்டுகள் இல்லை. ஆனால், அவர்களே, இன்று ஓட்டுகள் விற்பனைக்கு இல்லை என, தெரிவித்து வருகின்றனர். அவர்கள் தெரிவிப்பது, எங்களின் எதிர்காலத்தை விற்பனை செய்யாதீர்கள் என்பதே.கோடி, கோடியாக கொட்டி வைத்துள்ள ஊழல், லஞ்ச கறுப்பு பணம் மூலம், ஓட்டுகள், 2,000, 3,000 ரூபாய்க்கு, தேர்தல் நேரங்களில், விலை பேசப்படுகின்றன. கள்ளப் பணத்தில் இருந்து தான், ஊழல் ஆரம்பிக்கிறது.'ஆம் ஆத்மி' கட்சி, ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. ஓட்டுகளையும் விலைக்கு வாங்கவில்லை.

தமிழகத்தில், தி.மு.க.,- - அ.தி.மு.க., கட்சிகள், வெற்றிலை பாக்குடன், வெங்கடாஜலபதி படத்தை வைத்து, சத்தியம் வாங்கி, ஓட்டுக்கு, ஐந்து ரூபாய் கொடுத்து, இந்த கலாசாரத்தை துவக்கின. இதை, தி.மு.க., தான் முதலில் கொண்டு வந்தது. அதன்பின், 10 ரூபாய் துவங்கி இன்று திருமங்கலம், பென்னாகரம் தேர்தல்களில்ஓட்டுக்கு, 5,000 ரூபாய் வரை, வழங்கப்பட்டது. இதையே திருமங்கலம் பார்முலா என, கூறுகின்றனர்.பெரியண்ணா, 'டிவி' கொடுத்தாரு, இந்த அம்மா பொங்கலுக்கு, 1 கிலோ அரிசி, சர்க்கரையுடன், 100 ரூபாய் தர்றாங்க. அதை வாங்கும் உங்கள் கணவர்கள், 100 ரூபாயுடன், கூடுதலாக, 100 ரூபாய் போட்டு சாராயம் குடிக்கிறாங்க.

தமிழகத்தில், பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், ஒரு சொட்டு சாராயம் கூட விற்பனை செய்யப்படாது. தமிழகத்தில், 2.5 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். நீங்கள் சரியாக முடிவு எடுப்பீர்கள், உங்கள் குடும்பம் வளம் பெற, எதிர்காலத்தில் குழந்தைகளின் வாழ்வாதாரம் சிறக்க, பா.ம.க.,வை ஆதரிக்க கோரி வருகிறோம். தமிழகத்தில், தி.மு.க.,- - அ.தி.மு.க., கட்சிகளைநிரந்தரமாக ஒழிக்க வேண்டும். இவ்வாறு' அவர் பேசினார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUPER SINGER. - TRICHY,இந்தியா
05-பிப்-201402:34:09 IST Report Abuse
SUPER SINGER. தருவியா தரமாட்டியா தரலேன்னா உன் பேச்சு கா...
Rate this:
Share this comment
Cancel
Suresh Kumar - new jersey,யூ.எஸ்.ஏ
02-பிப்-201400:29:49 IST Report Abuse
Suresh Kumar Super Super ஒரு பயபுள்ளைக்கி இத சொல்ல தைரியம் இல்ல தல...
Rate this:
Share this comment
Cancel
red - brisbane,ஆஸ்திரேலியா
01-பிப்-201404:43:14 IST Report Abuse
red என்ன இது? அம்மாவை எதிர்த்தா பேசி இருக்காரு. எலெக்க்ஷன் முடிஞ்சதும் சிறைல களி சோறு தான். ஏற்கனவே பட்டது பத்தாது போல இருக்கு. அப்புறம் எங்க தலைவர் தான் அறிக்கை விட்டு வெளில எடுக்கணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X