ஊழல்வாதிகள் பெயர்கள் வெளியீடு: 'ஆம் ஆத்மி'யின் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த அதிரடி

Updated : பிப் 02, 2014 | Added : பிப் 01, 2014 | கருத்துகள் (16)
Advertisement
ஊழல்வாதிகள் பெயர்கள் வெளியீடு: 'ஆம் ஆத்மி'யின் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த அதிரடி

நாடு முழுவதும், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, முக்கிய தலைவர்கள் பலரையும் எதிர்த்து, வேட்பாளரை நிறுத்துவோம்' என, 'ஆம் ஆத்மி' கட்சித் தலைமை நேற்று அறிவித்தது. அந்த பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த சிதம்பரம், வாசன், அழகிரி, கனிமொழி, ராஜா ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி, டில்லி சட்டசபை தேர்தலில், முதன்முறையாக போட்டியிட்டு, ஆட்சி அமைத்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கையாக, எதிர்வரும் லோக்சபா தேர்தலிலும், போட்டியிடப்போவதாக, அந்த கட்சி அறிவித்துள்ளது.இந்நிலையில், டில்லியில் நேற்று, ஆம் ஆத்மி கட்சியின், தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் பேசிய, கட்சித் தலைவரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், "ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள, முக்கிய அரசியல்வாதிகள் அனைவரையும் எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும்,” என, அறிவித்தார்.


வாரிசு அரசியல்:


மேலும், அவர் கூறியதாவது:ஊழல் செய்யும், எந்த அரசியல்வாதியும், பார்லிமென்டிற்குள் நுழையவே கூடாது. பார்லிமென்ட்டிற்குள் நுழைய, தகுதி இல்லாத அவர்கள், தேர்தல் களத்திலேயே, தோற்கடிக்கப்பட வேண்டும். எதிர்வரும் லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை, இரண்டு முக்கிய கொள்கைகளை முன்னிறுத்தி, ஆம் ஆம்தி கட்சி, களம் இறங்கும்.ஒன்று, ஊழல் ஒழிப்பு; இன்னொன்று வாரிசு அரசியல். 'ஊழல்வாதிகளை தோற்கடியுங்கள்' என, மக்களிடம் வலியுறுத்தும் அதே வேளையில், பரம்பரை வாரிசு மற்றும் குடும்ப அரசியலையும் ஒழித்துக் கட்ட வேண்டுமென்றும், கோரிக்கை வைப்போம்.இந்தியாவில், வாரிசு அரசியல் என்பது, இனி இருக்கவே கூடாது என, பிரச்சாரம் செய்வோம். எங்கள் கட்சியை வலுப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல; நாட்டில், லஞ்சம், ஊழலை ஒழித்து, நேர்மையான அரசியலை கொண்டு வருவது தான் இலக்கு.இவ்வாறு அவர் பேசினார்.

பின், ஊழல்வாதிகள் யார் யார் என, பட்டியல் வாசித்தார். அதில், நாடு முழுவதும், பல அரசியல் தலைவர்கள், முதல்வர்கள் பெயர்கள் இருந்தன.தமிழகத்தில், ஐந்து பேர் பெயர்கள், இடம்பெற்று இருந்தன. காங்கிரசை சேர்ந்த, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், வாசன், தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மகள் கனிமொழி, கருணாநிதி மகன் அழகிரி ஆகியோர் பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தன.இது தவிர, தேசிய அளவில், முன்னணி தலைவர்களாக விளங்கும், சரத் பவார், முலாயம் சிங், மாயாவதி, பிரபுல் படேல், காங்கிரசை சேர்ந்த சுரேஷ் கல்மாடி, கபில் சிபல், சல்மான் குர்ஷித், அசாம் முதல்வர் தருண் கோகாய், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் பெயர்களும் அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தன.


ராகுலுக்கு எதிராக:


"ஊழல்வாதிகளான இவர்கள், எந்த தொகுதியில் நின்றாலும், அங்கு ஆம்ஆத்மி கட்சியின் சார்பில், வேட்பாளர்கள் போட்டியிட்டு, இவர்களை தோற்கடிப்பார்கள்” என, அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.இந்த பட்டியலை வாசித்து முடித்த பிறகு, அங்கு கூடியிருந்த கூட்டத்தில் இருந்து, 'காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின் பெயர் இல்லையா' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. உடனே, அரவிந்த் கெஜ்ரிவால், "அந்த பெயரும், உள்ளது; ராகுலுக்கு எதிராகவும், ஆம் ஆத்மி வேட்பாளர் போட்டியிடுவார்,” என்றார்.

மேலும், அவர் கூறுகையில், "காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தனது, 'இமேஜை' உயர்த்திக் கொள்வதற்காக, 500 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டுள்ளார். ஒரு நேர்மையான தலைவராக இருந்தால், இவ்வளவு பணத்தை, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக, செலவு செய்ய முடிந்திடுமா என்பதை, மக்கள் உணர வேண்டும்” என்றார்.


வழக்கு தொடருவேன் - அமைச்சர் வாசன்:

மத்திய அமைச்சர், வாசன் நேற்று டில்லியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: கடந்த எட்டு ஆண்டுகளாக, மத்திய அரசில், அமைச்சராக இருந்துள்ளேன்.இதுவரை, எந்த ஒரு தவறான நடவடிக்கைகளிலும், நான் ஈடுபட்டது கிடையாது.இருப்பினும், அரவிந்த் கெஜ்ரிவால், என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக, அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதை, வன்மையாக கண்டிக்கிறேன். நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்பதோடு மட்டுமல்லாது, அவர், தனது அறிவிப்பையும், திரும்ப பெறவேண்டும்.இல்லையெனில், விரைவில், அவர் மீது, சட்டப்பூர்வமான நடவடிக்கையை, எடுப்பேன்.இவ்வாறு, அமைச்சர், வாசன் கூறினார்.அது போல், பிறரும், கெஜ்ரிவாலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அவர் மீது வழக்கு தொடரப்படும் என, அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Chennai,இந்தியா
02-பிப்-201400:34:32 IST Report Abuse
Mohan கேஜ்ரிவால் தவிர உலகில் உள்ள அனைவரும் அயோக்கியர்கள் :)
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
01-பிப்-201407:58:42 IST Report Abuse
villupuram jeevithan இந்த பட்டியில் சோனியா, மன்மோகன் பெயர்கள் இல்லை, அவகளுக்கு நல்ல சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்
Rate this:
Share this comment
Cancel
Uthiran - chennai,இந்தியா
01-பிப்-201407:18:56 IST Report Abuse
Uthiran ஆம் ஆத்மியில் இல்லாத அனைவரும் ஊழல்வாதிகள் என்று மொத்தமாக சொல்லிவிடவேண்டியதுதானே? எதற்கு இப்படி உருப்படாத பட்டியல் எல்லாம் வெளியிட்டுக்கொண்டு? ஆனால் நீ இப்படி வெளியிடும் அறிக்கை காகிதங்கள் கக்கா போன பின் துடைக்க கூட உபயோகப்படாது.. உன்னை நம்பி வோட்டு போட்டவர்களை நன்றாகவே அடிக்கிறாய்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X