அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுமுக சூழலை கெடுக்கும் இலங்கை பிரதமருக்கு ஜெ., காட்டமான கடிதம்

Updated : பிப் 02, 2014 | Added : பிப் 01, 2014 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை:'இலங்கை கடற்படையினரால், சிறை பிடிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள், 38 பேரை விடுவிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.கடும் எதிர்ப்பு:கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையே, ஜன., 27ல், சென்னையில் பேச்சு நடந்தது. இது ஏற்படுத்திய, சுமுக சூழலால், கடந்த இரு
சுமுக சூழலை கெடுக்கும் இலங்கை பிரதமருக்கு ஜெ., காட்டமான கடிதம்

சென்னை:'இலங்கை கடற்படையினரால், சிறை பிடிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள், 38 பேரை விடுவிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.


கடும் எதிர்ப்பு:


கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையே, ஜன., 27ல், சென்னையில் பேச்சு நடந்தது. இது ஏற்படுத்திய, சுமுக சூழலால், கடந்த இரு வாரங்களில், 295 தமிழக மீனவர்கள், 45 படகுகளுடன், இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டனர்.இந்த சுமுக சூழ்நிலையை, சீர்குலைக்கும் விதமாக, ஜன., 29, இரவு, பாக் ஜலசந்தி பகுதியில், ஆறு விசைப்படகுகளில், மீன் பிடித்துக் கொண்டு இருந்த, 38 தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். இவர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த சம்பவத்தால், சுமுக சூழல் சீர்குலைக்கப் பட்டு உள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என, இலங்கைக்கு அறிவுறுத்த வேண்டும். இலங்கை கடற்படையின், அத்துமீறலுக்கு, கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.


ஏற்பாடு:

தூதரக அளவில் தொடர்பு கொண்டு, கடத்தப்பட்ட, 38 தமிழக மீனவர்களை, படகுகளுடன், உடனே விடுவிக்க, ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NavaMayam - New Delhi,இந்தியா
01-பிப்-201406:37:40 IST Report Abuse
NavaMayam மற்ற தொழில்கள் மற்ற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து போகின்றனவே அதற்கு சுமூக சூழலை யார் கெடுக்கிறார்கள் , அதுவும் இலங்கை அரசா.....தமிழக மீனவர்களும் இடம் பெயர்ந்து தங்கள் மீன்பிடி தொழிலை இலங்கைக்கோ , ஆந்திரவுக்கொ , கெரலாவுக்கொ மாற்றி கொண்டால் தான் அவர்களுக்கு வாழ்வு என்ற சூழ்நிலையை தாங்கள் உருவாக்கி விடுவீர்கள் இன்னும் இரண்டு வருடத்தில்....
Rate this:
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
01-பிப்-201405:44:49 IST Report Abuse
தங்கை ராஜா என்னா நடிப்பு, என்னா நடிப்பு.........பிச்சு உதர்றாங்க அம்மா........ஒருபுறம் இலங்கைக்கு எதிராக நீலிக்கண்ணீர், மறுபுறம் அவர்களுக்கு ஆதரவாக சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை.
Rate this:
Cancel
red - brisbane,ஆஸ்திரேலியா
01-பிப்-201404:48:29 IST Report Abuse
red என்னைக்கு என் தலைவர் படத்த காணோமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X