காங்., கூட்டணியிலிருந்து பா.ஜ.,வுக்கு தாவுகிறார் சரத் பவார்: மோடியுடன் சந்திப்பு

Updated : பிப் 02, 2014 | Added : பிப் 01, 2014 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி : ''லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்களை பேசுவதற்கு, காங்., கட்சி தயக்கம் காட்டுகிறது. இதனால், எந்த கட்சியுடன் வேண்டுமானாலும், நாங்கள் கூட்டணி அமைப்போம்,'' என, தேசியவாத காங்., தலைவர்களில் ஒருவரான, பிரபுல் படேல் மிரட்டல் விடுத்துள்ளார்.இதற்கிடையே, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியை, சரத் பவார்
காங்., கூட்டணியிலிருந்து பா.ஜ.,வுக்கு தாவுகிறார் சரத் பவார்:  மோடியுடன் சந்திப்பு

புதுடில்லி : ''லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்களை பேசுவதற்கு, காங்., கட்சி தயக்கம் காட்டுகிறது. இதனால், எந்த கட்சியுடன் வேண்டுமானாலும், நாங்கள் கூட்டணி அமைப்போம்,'' என, தேசியவாத காங்., தலைவர்களில் ஒருவரான, பிரபுல் படேல் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதற்கிடையே, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியை, சரத் பவார் ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் வெளியாயின. எனினும், அதை பவார் மறுத்துள்ளார்.


15 ஆண்டுகளாக:

மகாராஷ்டிராவில், காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரசின், பிரித்விராஜ் சவான், முதல்வராகவும், தேசியவாத காங்கிரசின், அஜித் பவார், துணை முதல்வராகவும் உள்ளனர்.மத்தியிலும், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணியில், தேசியவாத காங்., அங்கம் வகிக்கிறது. அந்த கட்சி தலைவரான, சரத் பவார், மத்திய விவசாய அமைச்சராக பதவி வகிக்கிறார். 15 ஆண்டுகளாக, இரண்டு கட்சிகளும், கூட்டணியில் உள்ளன.


மாற்றங்கள்:


இதற்கிடையே, வரும் லோக்சபா தேர்தலிலும், இந்த கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி தொடரும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில், சமீபகாலமாக, அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, தேசியவாத காங்., கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, பிரபுல் படேல், நேற்று கூறியதாவது:தேர்தலுக்கு, இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக, காங்., தலைவர்களை அணுகினோம். ஆனால், அவர்கள், அதில் ஆர்வம் காட்டவில்லை. கூட்டணி தொடர்பான விஷயங்களை பேசுவதை, தாமதப்படுத்துகின்றனர். இதற்கு மேலும், எங்களால் பொறுமையாக இருக்க முடியாது. லோக்சபா தேர்தலில், எந்த கட்சியுடனும், நாங்கள் கூட்டணி அமைக்கலாம். கடைசியாக, காங்., மூத்த தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான, பிரித்விராஜ் சவானை சந்தித்து, இதுகுறித்து பேச திட்டமிட்டுள்ளோம். காங்கிரசுடனான கூட்டணியை முறிக்கும் எண்ணம், எங்களுக்கு இல்லை; அந்த கூட்டணியிலேயே, நீடிக்க விரும்புகிறோம். ஆனால், காங்கிரசுக்கு அதில் ஆர்வம் இல்லை எனில், நாங்கள் என்ன செய்ய முடியும்?இவ்வாறு, பிரபுல் படேல் கூறினார்.


மோடியுடன் சந்திப்பா?சரத் பவார் மறுப்பு:


தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் கூறியுள்ளதாவது:பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியுடன் பேச்சு நடத்துவதற்காக, நான், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, ரகசியமாக சந்தித்தாக, தகவல் வெளியாகியுள்ளது. இது, அடிப்படை ஆதாரமற்ற தகவல். எந்த சூழ்நிலையிலும், மோடியை, நான் சந்திக்கவில்லை. அந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படும் நாளில், நான், டில்லியிலேயே இல்லை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

அனைத்து அரசியல் கட்சிகளுக்குமே, எந்த கட்சியுடனும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தேசியவாத காங்., கட்சி, எங்கள் கூட்டணியில், 15 ஆண்டுகளாக உள்ளது. அந்த கட்சியுடனான, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை, அவ்வளவு எளிதாக இருக்கும் என, நினைக்கவில்லை.
அபிஷேக் சிங்வி, காங்., செய்தி தொடர்பாளர்


'சேர்க்க விடமாட்டோம்'-சிவசேனா காட்டம்:


சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான, சஞ்சய் ராவத் கூறியதாவது: மகாராஷ்டிரா மாநிலத்தில், தே.ஜ., கூட்டணியை பொறுத்தவரை, அந்த கூட்டணியில், பல ஆண்டுகளாக சிவசேனா கட்சி உள்ளது; அந்த கூட்டணியில், தேசியவாத காங்கிரசுக்கு இடமில்லை. அந்த கட்சி, தே.ஜ., கூட்டணியில் சேருவதற்கு, அனுமதிக்க மாட்டோம். எங்களால் முடிந்த வகையில், அந்த முயற்சியை தடுப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanjay Velur - Chennai,இந்தியா
02-பிப்-201421:07:51 IST Report Abuse
Sanjay Velur பவார், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து 10 நாட்களில் பேச போவதக அறிவித்துள்ளார். இந்த செய்தி தவறான செய்தி.
Rate this:
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
01-பிப்-201407:51:05 IST Report Abuse
villupuram jeevithan மகாராஷ்டிராவின் திமுக, இங்கே இருந்து கொள்ளை அடிச்சாச்சு, இனி அங்கே தான் போகணும் மீண்டும் தனது வேலையை தொடர..
Rate this:
Cancel
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
01-பிப்-201407:33:25 IST Report Abuse
Aboobacker Siddeeq காங்கிரசின் தயவால் தான் மகாராஷ்ட்ராவில் முதல்வராகவும், மத்தியில் மந்திரியாகவும் பதவி வகித்து பல ஊழல்களுக்கு உடந்தையாகவும் இருந்து பணத்தை வாரி சுருட்டினார். பணம் பதவி இல்லாமல் இவரால் இருக்க முடியாது. அத்தோடு சிவ சேனாவை எதிர்த்து தான் இதுவரை காலம் தள்ளி கணிசமான வெற்றிகளை பெற காரணமாக இருந்தார். இப்போது சிவ சேனா - பா.ஜ.க. வுடன் ஒத்துழைத்து பதவி மற்றும் பண சுகம் அடைவது சிரமம் தான். ஆனால் இவை இரண்டுக்காகவும் இவர் எதையும் செய்வார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X