ஆட்சியிலும், கட்சியிலும் அதிரடி மாற்றம்: லோக்சபா தேர்தலை சந்திக்க ஜெ., ரெடி

Updated : பிப் 03, 2014 | Added : பிப் 01, 2014 | கருத்துகள் (32)
Advertisement
ஆட்சியிலும், கட்சியிலும் அதிரடி மாற்றம்: லோக்சபா தேர்தலை சந்திக்க ஜெ., ரெடி

லோக்சபா தேர்தலுக்கு முன், அமைச்சரவையிலும், அதிகாரிகள் மட்டத்திலும், அதிரடி மாற்றம் செய்ய, முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். புகார்களுக்கு ஆளான, கட்சி நிர்வாகிகளும் மாற்றப்படலாம் என, அ.தி.மு.க., வட்டாரத்தில், பரபரப்பாக பேசப்படுகிறது.இந்த முறை நடக்கவிருக்கும் மாற்றம், தேர்தலுக்கானது என்பதால், மிகப்பெரிய அளவில் இருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

லோக்சபா தேர்தலுக்கு, வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனையில், ஜெயலலிதா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதற்காக, மூத்த அமைச்சர்களான, ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரை, சென்னையிலேயே தங்கி இருக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.வேட்பாளர் தேர்வு குறித்து நடத்தப்பட்ட ஆலோசனை பற்றி, ஆளும் கட்சி வட்டாரத்தில் புது தகவல்கள் உலா வருகின்றன. அதன்படி, தற்போதைய அமைச்சர்கள் நான்கு பேர், லோக்சபா தேர்தலில் களம் இறக்கப்பட உள்ளதாக, தெரியவந்துள்ளது.இது தவிர, நான்கு அமைச்சர்கள் நீக்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. சென்னைக்கு அருகே உள்ள மாவட்டத்தைச் சேர்ந்தவர், தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மற்றும் கடலோர மாவட்டத்தைச் சேர்ந்தவர் உட்பட, நான்கு பேர், நீக்கப்படலாம் என, கூறப்படுகிறது.

அந்த அமைச்சர்கள் யார்? அவர்களுக்கு பதிலாக, அமைச்சரவையில் இடம் பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும், விவாதமும், ஆளும் கட்சி வட்டாரத்தில் அனலை ஏற்படுத்தி உள்ளது. அதில், 'மாஜி'க்கள் சிலரின் பெயரும், ஆளும் கட்சியினரால் அடிக்கடி உச்சரிக்கப்படுகின்றன.

இதற்கிடையில், அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும் கட்சியினர் மீதான புகார்களை விசாரிக்க, கட்சியில், நான்கு பேர் குழுவை, ஜெயலலிதா ஏற்படுத்தி உள்ளார். முன்னாள் அமைச்சர், கோகுல இந்திரா, டி.ஆர்.அன்பழகன், ஏ.கே.செல்வராஜ், பி.குமார் ஆகியோர் அதில் இடம்பெற்றுள்ளனர்.இக்குழுவின் விசாரணை முடிவுகள், உடனடியாக, முதல்வருக்கு அனுப்பப்படுகின்றன. அமைச்சர் ஒருவர் மீதான விசாரணையை, சமீபத்தில் அக்குழு முடித்துள்ளது. மாவட்டச் செயலர் மீதான விசாரணையை துவக்கி உள்ளது. அதன்
அடிப்படையில், சிலர் மீது நடவடிக்கை பாய உள்ளது.

இதற்கிடையில், அதிகாரிகள் மட்டத்திலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்வதற்கான ஆலோசனைகளும் நடந்து வருகின்றன. போலீஸ் அதிகாரிகள் மாற்றத்திற்கான பட்டியல் தயாராகி விட்டதாகவும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான மாற்றம் பற்றிய விவாதம் நடந்து வருவதாகவும், கோட்டை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
02-பிப்-201420:34:11 IST Report Abuse
g.s,rajan தமிழக முதல்வர் ஜெயா அவர்களுக்கு மத்தியில் இருந்து "செக்"வைக்கப்படுகிறது ,"தமிழனே தமிழனுக்கு எதிரி" என்று கூறும் வகையில் சிலர் தொடர்ந்து திரைமறைவு வேலைகளில் ஈடுபடுகின்றனர் .என்ன செய்வது ???"டாஸ்மாக்" கடையை துணிச்சலாக முதல்வர் மூடினால் அதற்கும் பயங்கர எதிர்ப்பு கிளம்பும் ,கள்ளச் சாராயம் வந்துவிடும் என்று கூறி அதற்கும் முட்டைக்கட்டை போட சிலர் தயாராக இருப்பார்கள் .என்னதான் செய்வது ???
Rate this:
Share this comment
Cancel
Kuwait Tamilan - Salmiya,குவைத்
02-பிப்-201419:28:03 IST Report Abuse
Kuwait Tamilan எல்லா அமைச்சரையும் மாற்றிய பிறகு முதல் அமைச்சரையும் மாற்றுவாரா முதல்வர்?
Rate this:
Share this comment
Cancel
gopal - KL,மலேஷியா
02-பிப்-201415:38:21 IST Report Abuse
gopal தமிழக அரசியலில் சுவாரசியமான பேச்சாளர்கள் என்றால் முன்பெல்லாம் தி.மு.க.வினரைதான் சொல்வார்கள். அவர்கள் கூறுவது நிஜமோ, கற்பனையோ, பேச்சு என்னமோ, சுவாரசியம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X