கும்பிடு பதவிக்கு வேட்டா? கூட்டணி கட்சிக்கு சீட்டா?| Dinamalar

கும்பிடு பதவிக்கு வேட்டா? கூட்டணி கட்சிக்கு சீட்டா?

Added : பிப் 02, 2014
Share
"எப்பவுமே "லேட்'தானா? சீக்கிரமா வா...சாமி கும்பிட்டுட்டு, "ஷாப்பிங்' போகணும்?,'' என்று சித்ராவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு, கோனியம்மன் கோவிலுக்குள் நுழைந்தாள் மித்ரா."எலக்ஷனுக்கு அப்புறமாவது, இந்த ஊருக்கு விமோட்சனம் வரணும்னு நல்லா சாமியைக் கும்பிடுடி!,'' என்றாள் சித்ரா."அதுக்கெல்லாம் "சான்ஸ்' இருக்கிற மாதிரி தெரியலை; ரெண்டு மேயர்களை ராஜ்யசபா
கும்பிடு பதவிக்கு வேட்டா? கூட்டணி கட்சிக்கு சீட்டா?

"எப்பவுமே "லேட்'தானா? சீக்கிரமா வா...சாமி கும்பிட்டுட்டு, "ஷாப்பிங்' போகணும்?,'' என்று சித்ராவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு, கோனியம்மன் கோவிலுக்குள் நுழைந்தாள் மித்ரா.
"எலக்ஷனுக்கு அப்புறமாவது, இந்த ஊருக்கு விமோட்சனம் வரணும்னு நல்லா சாமியைக் கும்பிடுடி!,'' என்றாள் சித்ரா.
"அதுக்கெல்லாம் "சான்ஸ்' இருக்கிற மாதிரி தெரியலை; ரெண்டு மேயர்களை ராஜ்யசபா எம்.பி.,யாக்குனது மாதிரி, நம்ம "டவுன் டாடி'க்கு கோயம்புத்தூர்ல "சீட்'டு கொடுத்து, "ஜெயிச்சுக் காட்டுங்க' ன்னு மேடம் சொல்லிருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.
"அப்படின்னா விமோட்சனம் வந்தது மாதிரிதான்னு சொல்லு,'' என்று சிரித்த சித்ரா, ""ஆனா, நான் கேள்விப்பட்டது வேற மாதிரி இருக்கே. கோவை தொகுதியை "சிட்டிங் சீட்'டுன்னு சி.பி.எம்.க்கே சி.எம்.,ஒதுக்கிட்டதா தகவல்; அவுங்க சத்தமில்லாம வேலையை ஆரம்பிச்சிட்டாங்க. சிட்டிக்குள்ள ஆளுங்கட்சிக்கு ரொம்ப பேரு கெட்டுருக்குன்னு உளவுத்துறை "ரிப்போர்ட்' வந்த பிறகுதான், இந்த முடிவு எடுத்ததா ரத்தத்தின் ரத்தங்களே சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.


பயங்கர டோஸ்:

"இருக்கலாம்; ஏன்னா, கோடநாட்டுல இருந்து சி.எம்.,திரும்புறப்ப, கோயம்புத்தூர் ஏர்போர்ட்ல வழியனுப்பப் போன ஆளும்கட்சி வி.ஐ.பி.,க்கள் எல்லாருமே "உர்ர்'ருன்னு வந்தாங்க; பயங்கர "டோஸ்" கிடைச்சிருக்குன்னு பேச்சா இருக்கு; அப்புறம் எப்படி "சீட்' கொடுப்பாங்க?,''
"ஆனாலும், தேர்தல்ல ஜெயிக்கிறதுக்கு திடீர்னு வேலையெல்லாம் வேகப்படுத்தப் போறாங்களாம். வர்ற 15ம் தேதி, சி.எம்.,மேடத்தோட நட்சத்திர பிறந்தநாள் வருது; அன்னியிலயிருந்து சிட்டியில தினரும் ஒரு வளர்ச்சிப் பணி துவக்க விழா செய்யப்போறாங்களாம்; எந்தெந்த வேலையை சீக்கிரமா ஆரம்பிக்கணும்னு நீங்களே சொல்லுங்கன்னு கவுன்சிலர்களைக் கூப்பிட்டு, மேயரே கேட்டாராம்,''
"கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?,'' என்றாள் மித்ரா.
"தி.மு.க.,வுலயும் என்ன வாழுதாம்? அங்கேயும் ஒரே அடிதடியாத்தான் இருக்கு; மதுரையில எல்லா கிளையையும் கலைச்சதுனால, இங்கேயும் கலைச்சிட்டு, புது நிர்வாகிகளை எடுக்கிறதுக்கு மனு கொடுக்குறாங்க; மாநகர் மாவட்டத்துல இந்த முறை வீரகோபாலை எதிர்த்து, "மாஜி' துணை மேயர் கார்த்திக்கை களமிறக்க, பொங்கலூர் பழனிச்சாமி திட்டம் போட்ருக்காரு; இவுங்க ரெண்டு பேருமே, ஸ்டாலின் ஆட்கள்தான்னாலும் வீரகோபாலுக்குதான் ஸ்டாலின் ஆதரவாம். சிட்டிக்குள்ள அவரோட ஆட்களுக்கு மட்டும்தான் மனு கொடுக்கணும்னு உத்தரவு வந்திருக்காம்,'' என்றாள் சித்ரா.


2 கட்சி மோதிரம்:

"ஒரு குழந்தைக்கு பொறந்தவுடனே ரெண்டு கட்சியில இருந்து ரெண்டு மோதிரம் வந்திருக்கு,'' என்று மேட்டரை மாற்றினாள் மித்ரா.
"அந்த அதிர்ஷ்டக் குழந்தை யாருடி?,''
"கே.கே.புதூர்ல, கார்ப்பரேஷன்மெட்டர்னிடி சென்டர் ஒண்ணு புதுசா திறந்திருக்காங்க; அங்கு பொறந்த மொத குழந்தைக்கு "என் கையாலயே புது டிரஸ் கொடுக்குறேன்'னு மேயர் சொல்லிருக்காரு. ஆனா, அவரு வர்றதுக்கு ஒரு நாள் "லேட்'டானதால, அந்த வார்டு டிஎம்கே கவுன்சிலர் ரவி, குடியிருப்போர் சங்கத்துக்காரங்களோட சேர்ந்து ஒரு கிராம் மோதிரத்தை அந்த குழந்தைக்குப் போட்டுட்டாரு. மேயர் கொந்தளிச்சு, "என்ன அரசியல் பண்றீங்களா?'ன்னு கேட்டு, கார்ப்பரேஷன் சார்புல தாய்க்கு நைட்டியும், சேய்க்கு புது டிரஸ்சும் கொடுத்ததோட, தன்னோட சொந்தக்காசுல ஒரு கிராம்ல மோதிரம் போட்ருக்காரு,''
"தானம் பண்றதுல போட்டி வந்தா, ஜனங்களுக்குதான் நல்லது,'' என்ற சித்ரா, "மதுரைக்காரங்களுக்கு போஸ்ட்டிங் போட்ட புண்ணியவான் யாருன்னே தெரியலையேடி,'' என்று தோல்வியை ஒப்புக்கொண்டாள்.
"எல்லாம் நம்ம மருதமலை அடிவாரத்துல, கல்விக்கு துணையா இருக்கிற அரசர்தான்; வந்ததுல இருந்து, கிட்டத்தட்ட 300, 400 பேருக்கு "போஸ்ட்டிங்' போட்டுக் கொடுத்திருக்காரு; யார்ட்டயும் லட்சத்துக்குக் குறையாம, துட்டு வாங்கிருக்காரு. எல்லாமே "டெம்பரரி போஸ்ட்டிங்'தான்; ஆனா, "பர்மெனென்ட்' ஆயிரும்னு நம்பி நிறைய்யப்பேரு பணம் கொடுத்திருக்காங்க. அதுலதான், அருப்புக்கோட்டை, மதுரைன்னு அவுங்க ஊரு ஆளுங்களா இருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.


கவரவ பிச்சை:

"இதுக்குப் பேருதான், "கவுரவ பிச்சை'யோ? நானும் அவரைப்பத்தி, ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்; தொலைதூரக் கல்வியில படிக்கிறவுங்க கட்டுற பணத்துல, ஏஜென்சிக்கு "கமிஷன்' கொடுக்குறோம்கிற பேர்ல ஏகப்பட்ட பணத்தை அடிக்கிறாராம்; நேரடியாச் சேர்றவுங்களுக்கும், ஏதாவது ஒரு ஏஜென்சி பேரை வச்சு, காசு எடுக்குறாருங்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
"நெஞ்சு பொறுக்குதில்லையே பாரதி....!'' என்றாள் மித்ரா.
"ஒரு கார்ப்பரேஷன் ஆபீசரை, "என்னோட ஆபீஸ் பக்கமே வந்துராதீங்க'ன்னு கலெக்டர் "வார்ன்' பண்ணிருக்காங்க தெரியுமா?,'' என்று சித்ரா விடுகதை போடும்போதே, கோவில் மணி பலமாய் அடிக்க, இருவரும்ஓடிப்போய், அம்மனின் சன்னதியைப் பார்த்து, கண் மூடி கரம் தூக்கினார்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X