லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிக்கு நற்சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு!| Dinamalar

லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிக்கு நற்சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு!

Added : பிப் 02, 2014 | |
"அதோ, அந்த பறவை போல வாழ வேண்டும்...'' என உற்சாகமாக பாடிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா."என்னக்கா, பாட்டு பலமா இருக்கு,'' என்று ஆர்வமிகுதியில் கேட்டாள் மித்ரா."இப்ப நடக்கிற, அரசு விழாக்கள்ல இந்த பாட்டு கட்டாயம் ஒலிபரப்புறாங்க. குடியரசு தின விழா நிகழ்ச்சியை பார்க்க, சிக்கண்ணா காலேஜ் போயிருந்தேன். அங்க, ஜெய்வாபாய் ஸ்கூல் பொண்ணுங்க, இந்த பாட்டுக்கு டான்ஸ்
லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிக்கு  நற்சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு!

"அதோ, அந்த பறவை போல வாழ வேண்டும்...'' என உற்சாகமாக பாடிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.
"என்னக்கா, பாட்டு பலமா இருக்கு,'' என்று ஆர்வமிகுதியில் கேட்டாள் மித்ரா.
"இப்ப நடக்கிற, அரசு விழாக்கள்ல இந்த பாட்டு கட்டாயம் ஒலிபரப்புறாங்க. குடியரசு தின விழா நிகழ்ச்சியை பார்க்க, சிக்கண்ணா காலேஜ் போயிருந்தேன். அங்க, ஜெய்வாபாய் ஸ்கூல் பொண்ணுங்க, இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடுனாங்க. தேசிய வாக்காளர் தின விழாவுலயும் ஒலிபரப்புனாங்க.சி.எம்., கலந்துகிட்ட சினிமா நூற்றாண்டு விழாவிலும் இந்த பாட்டை ஒலிபரப்பியிருக்காங்க. சி.எம்., சிரிச்சதால, எல்லா பங்ஷன்லயும் ஒலிபரப்ப ஆரம்பிச்சுட்டாங்க,'' என்று விளக்கம் சொன்ன சித்ராவுக்கு, சுடச்சுட டீ கொடுத்து உபசரித்தாள் மித்ரா.
டீயை உறிஞ்சியவாறு, "சிக்கண்ணா காலேஜ்ல நடந்த விழாவுல, அரசு அதிகாரிகளுக்கு சகட்டுமேனிக்கு நற்சான்றிதழ் கொடுத்தாங்க. 2,000 ரூபா கொடுத்தால், வண்டி ஓட்ட தெரியாதவங்களுக்கு கூட லைசென்ஸ் கொடுத்துடுவாராம் ஒரு அதிகாரி. அவருக்கு, கலெக்டர் கையால் நற்சான்றிதழ் கொடுத்திருக்காங்க. அதை பார்த்த வருவாய்த்துறை உதவியாளர் ஒருத்தர், என் பையனுக்கு எல்.எல்.ஆர்., போடவே லஞ்சம் கொடுத்தேன். இப்ப பாருங்க, அவருக்கு பாராட்டு கெடைக்குதுன்னு புலம்பியிருக்காரு,'' என்றாள் சித்ரா.


ஹெல்மட், சீட் பெல்ட்:

உடனே, மித்ரா, "நம்மூர்ல, ஹெல்மெட் போடாம யாரு போனாலும், "பைன்' கட்டாம போக முடியாது. அந்தளவுக்கு, "ரூல்ஸ்'சை கடுமையா அமல்படுத்தியிருக்காங்க. ஹெல்மெட் போடாம போகும் அதிகாரிகளும் போலீசுல சிக்குறாங்க,'' என்றாள்.
"போலீஸ்காரங்க, சட்டத்தைதானே அமல்படுத்துறாங்க. இது, பாராட்டக்கூடிய விஷயம்தானே,'' என்று சித்ரா கேட்க, "ஆமாம், கண்டிப்பா பாராட்டித்தான் ஆகணும். ஏன்னா, ஏ.பி.ஆர்.ஓ., ஒருத்தரு, ஹெல்மெட் இருந்தும் பெட்ரோல் டேங்க் மீது வச்சிட்டு வேகமா வந்திருக்காரு. கலெக்டர் ஆபீஸ் பக்கத்துலயே அவரை போலீஸ்காரங்க மடக்கிட்டாங்களாம். அந்த வழியா வந்த பி.ஆர்.ஓ., சமரசம் பேசியும் போலீசார் மசியலையாம். வேற வழியில்லாம, 100 ரூபாய் அபராதம் கட்டிட்டுத்தான் போயிருக்காங்க. அடுத்தகட்டமா, கார்ல போறவங்க, சீட் பெல்ட் அணியாம இருந்தா, அபராதம் வசூலிக்க திட்டம் போட்டிருக்காங்களாம். அதை அமல்படுத்திட்டாங்கன்னா, போலீஸ்காரங்களுக்கு சல்யூட் அடிக்கலாம்,'' என்றாள்.


அழைப்பிதழில் பெயர் இல்லை:

டீயை குடித்து முடித்த சித்ரா, "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ராயபுரம் ஹாஸ்டல்ல மனிதநேய வார விழா கலை நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சிருக்காங்க. இன்விடேஷன்ல ஆர்.டி.ஓ., பெயர் மட்டும் போட்டிருக்காங்க. மத்தவங்க பெயர் இல்லாம இருந்துச்சு; பி.ஆர்.ஓ.,வும் கவனிக்காம விட்டுட்டாரு போலிருக்கு. இடுவம்பாளையத்தில நடந்த லேப்-டாப் கொடுக்கிற பங்ஷன்ல, இன்விடேஷனை பார்த்த மினிஸ்டர், டென்ஷனாகி, அங்கே இருந்த ஏ.பி.ஆர்.ஓ.,வுக்கு "செம டோஸ்' விட்டிருக்காரு,'' என்று சொல்லிக் கொண்டே, பேன்சி ஸ்டோருக்கு போகணும். செந்தூரம் காலியாயிருச்சு என்றாள் சித்ரா.
"வருங்காலத்துல, நீயும் கவுன்சிலராகி, மண்டல தலைவராகி, மேயரா வர வாய்ப்பிருக்குன்னு கேரளா நம்பூதிரி யாராவது சொன்னாங்களா,'' என்று கிண்டலடித்தாள் மித்ரா.
"கார்ப்பரேஷன்ல இருக்கிற லேடி ஆபீசரு ரூமுக்குள்ள ஆண்கள் போகக்கூடாதாம். மீறி போயிட்டா, சகட்டுமேனிக்கு திட்டுவாங்களாம். வாரத்துல ஒரு நாள் மட்டும் வருவாங்களாம்; அந்த நேரத்துல பார்த்து வணக்கம் போட்டு வைக்கலாம்னு யாராவது உள்ளே நுழைஞ்சா அவ்வளவுதானாம். கண்டபடி திட்டுவாங்களாம். அவுங்கதான், மக்களோட நெருக்கமா இருக்க வேண்டிய அதிகாரியாம்,'' என்று சொல்லி விட்டு, பைக்கை கிளப்பினாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X