தே.மு.தி.க., தனித்து போட்டி? மாநாட்டில் விஜயகாந்த் பேச்சு

Updated : பிப் 04, 2014 | Added : பிப் 03, 2014 | கருத்துகள் (245)
Share
Advertisement
விழுப்புரம் : 'தேர்தலில் தனித்து போட்டியிடவே தொண்டர்கள் விரும்புகிறார்கள்; கூட்டணி வேண்டாம் என்கிறார்கள். கடந்த தேர்தலில் கூட்டணி வைத்து, அதனால் பட்ட அடி போதும்,' என, விழுப்புரத்தில் நேற்று நடந்த தே.மு.தி.க., மாநாட்டில் விஜயகாந்த் பேசினார்.விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் நேற்று தே.மு.தி.க., நடத்திய 'ஊழல் எதிர்ப்பு மாநாட்டில்" தமிழகம் முழுவதும் இருந்து
தே.மு.தி.க., தனித்து போட்டி? மாநாட்டில் விஜயகாந்த் பேச்சு

விழுப்புரம் : 'தேர்தலில் தனித்து போட்டியிடவே தொண்டர்கள் விரும்புகிறார்கள்; கூட்டணி வேண்டாம் என்கிறார்கள். கடந்த தேர்தலில் கூட்டணி வைத்து, அதனால் பட்ட அடி போதும்,' என, விழுப்புரத்தில் நேற்று நடந்த தே.மு.தி.க., மாநாட்டில் விஜயகாந்த் பேசினார்.

விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் நேற்று தே.மு.தி.க., நடத்திய 'ஊழல் எதிர்ப்பு மாநாட்டில்" தமிழகம் முழுவதும் இருந்து பெருந்திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில் விஜயகாந்த் பேசியதாவது:போலீஸ் என்றால் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று கேட்டிருக்கிறேன். சினிமாவில் ஏன் போலீஸ் வேடம் போட்டேன், என, இப்போது வெட்கப்படுகிறேன். போலீசை வைத்து மாநாட்டுக்கு வந்த தொண்டர்களை தடுக்கிறார்கள். பேனர்களை அகற்றுகிறார்கள். பேனரும், போஸ்டரும் வைத்தால் தப்பா? கஞ்சா கேசில் உள்ளே தள்ளுகின்றனர். இதுவரை ஆண்டவன் யாராக இருந்தாலும், இனி ஆளப்போவது தே.மு.தி.க.,தான்.சட்டசபையில் 145 பேர் இருப்பதால், என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. இளைஞர்களை கெடுக்கவே 'டாஸ்மாக்' மதுக்கடைகளை திறந்துள்ளனர். டாஸ்மாக்கிற்கு டார்கெட் நிர்ணயிக்கும் அரசு, விவசாய உற்பத்திக்கும் டார்கெட் வைக்க வேண்டியதுதானே? ஏன் செய்யவில்லை. விலையில்லா பொருட்களுக்கும் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் விலை நிர்ணயம் செய்து வசூலிக்கின்றனர். எங்கு பார்த்தாலும் ஊழல் தான்.

டாஸ்மாக்கில் மது விற்பனைக்கு ரூ.350? கோடி இலக்கு நிர்ணயிக்கும் நீங்கள், அதே போன்று விவசாயிகளின் உற்பத்திக்கும் டார்கெட் நிர்ணயுங்கள் பார்க்கலாம். ஒரு ரூபாய்க்கு இட்லியாம்; பத்து ரூபாய்க்கு தண்ணீராம். மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டிய முதல்வரே, 'தண்ணி' காட்டுகிறார். தமிழகம் முழுவதும் பெண்கள் காலி குடத்துடன் அலைகின்றனர்.இந்த ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ரோடு வசதி இல்லை. தினமும் நான்கு முறை கரென்ட் போகிறது. இனிமேல் மின்வெட்டு இருக்காது என்றனர். வரும் கோடையில் நிலைமையை நினைத்து பார்க்கவே முடியவில்லை. 'நாற்பதும் நமதே" என்கின்றனர். 40? லோக்சபா தொகுதிகளையும் காசு கொடுத்து வாங்கலாம் என நினைக்கின்றனரா? இன்று, எங்கும் ஊழல்தான். என்னை பார்த்து, ' ஏன் ஊழல் எதிர்ப்பு மாநாடு' என, ஏன் நடத்துகிறீர்கள்; ஊழல் ஒழிப்பு மாநாடு என நடத்த வேண்டியதுதானே என கேட்கின்றனர். என்னிடம் ஆட்சி இருந்தால்தானே ஒழிக்க; இல்லாததால்தான், ஊழலை எதிர்ப்போம் என்கிறேன்.

ஜெயலலிதா, கோடநாட்டில் இருக்கும்போது, கர்நாடக முதல்வர் கோவைக்கு வந்து, 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை கொண்டு போனார். கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், ஈரோடு தொழிலதிபர்கள் அவரது கூட்டத்தில் பங்கேற்றனர். இங்குள்ள ஆட்சியாளர்கள் என்ன செய்கின்றனர்?தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு கெட்டுவிட்டது. என்னை ஆட்சியில் உட்கார வைத்து பாருங்கள். கண் இமை போல், மக்களை பாதுகாப்பேன். எல்லோரும் கூட்டணி பற்றி கேட்கிறார்கள்.என் தொண்டர்கள் கூட்டணி வேண்டாம். தனித்தே நிற்கலாம் என்கின்றனர். கடந்த முறை கூட்டணி வைத்து பட்ட அடி போதும்.இவ்வாறு, விஜயகாந்த் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (245)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raana Moona - India,இந்தியா
04-பிப்-201403:27:56 IST Report Abuse
Raana Moona பாவம், மறுபடியும் டெல்லி தேர்தல் முடிவு மாதிரி ஆகிவிடப் போகிறது.
Rate this:
Cancel
rishi - varanasi,இந்தியா
04-பிப்-201400:38:08 IST Report Abuse
rishi தொண்டர்களிடம் எப்படி வாக்கெடுப்பு நடத்தினர், எவன்கிட்ட கத சொல்லுற, இந்த தேர்தலோட நீ காலி
Rate this:
Cancel
ELUVATHI - thanjavur,இந்தியா
04-பிப்-201400:16:15 IST Report Abuse
ELUVATHI பேய் கிட்ட தப்பிச்சு, நாய் கிட்ட மாட்டி கொல்லாத தலைவா சிறப்பா செயல்படுத்துவதால் தான் நீ கேப்டன் என்று அழைக்கபடுகிறாய் ALL IS WELL வேலீலா போற ஓனான, வேட்டி குள்ள விட்டுட்டு நிண்டுது கொடைதுன்னு சொன்னனான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X