உளுந்தூர்பேட்டையில் தே.மு.தி.க., மாநாடு : அ.தி.மு.க., மீது கடும் அதிருப்தி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

உளுந்தூர்பேட்டையில் தே.மு.தி.க., மாநாடு : அ.தி.மு.க., மீது கடும் அதிருப்தி

Added : பிப் 03, 2014 | கருத்துகள் (13)
உளுந்தூர்பேட்டையில் தே.மு.தி.க., மாநாடு : அ.தி.மு.க., மீது கடும் அதிருப்தி

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையில் நடந்த, தே.மு.தி.க., மாநில மாநாட்டில், விஜயகாந்த், பிரேமலதா பங்கேற்றனர். மாநாட்டு நிகழ்ச்சியில், பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த எறஞ்சியில், தே.மு.தி.க., சார்பில், ஊழல் எதிர்ப்பு மாநில மாநாடு, நேற்று மாலை நடந்தது. உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே, தே.மு.தி.க.,வினர், மாவட்டச் செயலர், வெங்கடேசன் தலைமையில், விஜயகாந்திற்கு, பூரண கும்ப மரியாதையுடன், வரவேற்பு அளிக்கப்பட்டது.

63 அடி உயர கம்பம் : மாலை, 3:35க்கு மாநாட்டு திடலின் முகப்பு பகுதிக்குச் சென்று, 63 அடி உயர கம்பத்தில், கட்சிக் கொடியை, விஜயகாந்த் ஏற்றி வைத்தார். அவரது மனைவி பிரேமலதா உடனிருந்தார்.
மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த, பெரியார், காமராஜர், அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர்., பெயர்களில் அமைந்துள்ள, நுழைவு வாயில்களை பொருளாளர், இளங்கோவன், எம்.எல்.ஏ.,க்கள் பார்த்தசாரதி, முருகேசன், பார்த்திபன், சிவக்கொழுந்து ஆகியோர் திறந்து வைத்தனர்.
மாநாட்டு பந்தலுக்கு மாலை, 3:50 மணிக்கு விஜயகாந்த், பிரேமலதா மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வந்தனர். மாநாட்டு குழு தலைவர், வெங்கடேசன் எம்.எல்.ஏ., வரவேற்றார். பின், மேடை நிகழ்ச்சிகளை பிரேமலதா துவக்கி வைத்தார். மாலை, 4:00 மணிக்கு, மேடை நிகழ்ச்சிகள் துவங்கியதும், விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் கீழே இறங்கிச் சென்றனர். மாலை, 6:15 மணிக்கு மாநாடு துவங்கியது. எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள் பலர் பேசினர். இரவு, 7:15 மணிக்கு விஜயகாந்த், பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோர் மாநாட்டு மேடைக்கு வந்தனர். அதைத் தொடர்ந்து பேசிய பலரும், அ.தி.மு.க.,வையும், ஜெ.,வையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினர். மாநாட்டில் பேசிய எவரும், தி.மு.க., - காங்., - பா.ஜ., உட்பட, வேறு எந்தக் கட்சிகளைப் பற்றியும், விமர்சனம் செய்யவில்லை. இது, அடுத்த சில நாட்களில், தே.மு.தி.க., எடுக்கப் போகும் முடிவை நோக்கிய அறிகுறி என, தொண்டர்கள் பேசினர். குறிப்பாக பிரேமலதா, ஆளும் அ.தி.மு.க., அரசின், பாரபட்ச போக்கை கடுமையாக விமர்சித்தார்.

ஊழலுக்கு எதிர்ப்பு : மேலும், திராவிடக் கட்சிகள் குறித்து, மாநாடு முடிந்ததும், விஜயகாந்த் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலையை, அங்கு நடந்த சம்பவங்கள் வெளிப்படையாகக் காட்டின. நேற்றைய, தே.மு.தி.க., ஊழல் எதிர்ப்பு மாநாடு, அ.தி.மு.க., எதிர்ப்பு மாநாடு போல நடந்தது. அதனால், மாநாட்டிற்கு வந்த பலரும், இவர்கள் நடத்துவது, ஊழல் எதிர்ப்பு மாநாடா அல்லது அ.தி.மு.க., எதிர்ப்பு மாநாடா என, விமர்சித்தனர். மேலும், தே.மு.தி.க., மாநாட்டில் பங்கேற்ற நிர்வாகிகள் அனைவரும், "ஊழலை ஒழிப்போம்' வாசகத்தை கைப்பட்டையாக அணிந்து பங்கேற்றனர். விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவும், கைப்பட்டை அணிந்திருந்தனர்.

தலைவர்கள் படங்களுக்கு முக்கியத்துவம் இல்லை

தே.மு.தி.க., மாநாட்டு முகப்பு பகுதியில், பிரியாணி, ஐஸ் கிரீம், குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவு விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மாநாட்டிற்காக, சென்னை, திருச்சி, சேலம் மார்க்கத்திலிருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் தொண்டர்கள் வந்தனர். அவர்களின் வாகனங்களுக்கு விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி உட்பட, அனைத்து, "டோல்கேட்'களிலும் கட்டணம் வசூலிக்காமல், இலவச
அனுமதி வழங்கப்பட்டது.
கட்சித் தலைவர் விஜயகாந்த், பிற்பகல், 3:35 மணிக்கு, மாநாட்டு பந்தல் அருகில் வந்தார். 3:50 மணிக்கு மாநாட்டு மேடைக்கு சென்றார்.
மாநாட்டு பந்தல் நுழைவு வாயில்கள் அனைத்திலும் விஜயகாந்த் படம் மட்டுமே இடம்
பெற்றிருந்தது. மற்ற தலைவர்கள் படம் இடம் பெறவில்லை.
மாநாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு, "கேப்டன்' வாட்டர் பாட்டில் மற்றும் வாட்டர் பாக்கெட் வழங்கப்பட்டது. அவற்றில், விஜயகாந்த் படம், முரசு சின்னம், ஊழல் எதிர்ப்பு மாநாடு, "லோகோ' அச்சிடப்பட்டிருந்தது.
மாநாட்டுக்காக, 50 ஏக்கர் நிலத்தை சொந்தமாக வாங்கினர். அந்த இடம் போதுமானதாக இல்லாததால், அருகில் உள்ள விளை நிலங்களை வாடகைக்கு எடுத்து, மாநாட்டு திடல் அமைத்திருந்தனர். நிலத்தை வாடகையாக கொடுத்தவர்களுக்கு ஏக்கருக்கு தலா, 5,000 ரூபாய் வழங்கப்பட்டது.
மாநாட்டு மேடையிலும், எந்த தலைவர்களின் படமும் இல்லை.

தே.மு.தி.க., மாநாட்டு துளிகள்

தொண்டர்களின் வாகனங்களுக்கு இலவச அனுமதி

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி, பிரேமலதாவுக்கு, நேற்று மதியம், 2:25 மணிக்கு, உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே, விழுப்புரம் மாவட்ட செயலர், வெங்கடேசன் தலைமையில், நிர்வாகிகள் கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

மாநாட்டு முகப்பு பகுதியில், பிரியாணி, ஐஸ் கிரீம், குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவு விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மாநாட்டிற்காக, சென்னை, திருச்சி, சேலம் மார்க்கத்திலிருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் தொண்டர்கள் வந்தனர். அவர்களின் வாகனங்களுக்கு விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி உட்பட, அனைத்து, "டோல்கேட்'களிலும் கட்டணம் வசூலிக்காமல், இலவச அனுமதி வழங்கப்பட்டது.

கட்சித் தலைவர் விஜயகாந்த், பிற்பகல், 3:35 மணிக்கு, மாநாட்டு பந்தல் அருகில் வந்தார். அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வணக்கம் கூறிய அவர், 3:37 மணிக்கு, சமாதான புறாக்களை பறக்க விட்டார்.

சிவப்பு, மஞ்சள், கறுப்பு நிறங்களில் பலூன்களை பறக்க விட்டார். 3:50 மணிக்கு மாநாட்டு மேடைக்கு சென்றார்.

மாநாட்டு பந்தலில், நான்கு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன.

பெரியார், அண்ணாதுரை, விஜயகாந்த், காமராஜ் ஆகிய நான்கு பேரின் பெயர்களில் நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனாலும், அனைத்திலும் விஜயகாந்த் படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. மற்ற தலைவர்கள் படம் இடம் பெறவில்லை.

விஜயகாந்த், கட்சிக் கொடியேற்றும்போது தேசிய நெடுஞ்சாலையில், 20 நிமிடம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

---- மாநாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு, "கேப்டன்' வாட்டர் பாட்டில் மற்றும் வாட்டர் பாக்கெட் வழங்கப்பட்டது. அவற்றில், விஜயகாந்த் படம், முரசு சின்னம், ஊழல் எதிர்ப்பு மாநாடு, "லோகோ' அச்சிடப்பட்டிருந்தது.

மாநாட்டுக்காக, 50 ஏக்கர் நிலத்தை சொந்தமாக வாங்கினர். அந்த இடம் போதுமானதாக இல்லாததால், அருகில் உள்ள விளை நிலங்களை வாடகைக்கு எடுத்து, மாநாட்டு திடல் அமைத்திருந்தனர். நிலத்தை வாடகையாக கொடுத்தவர்களுக்கு ஏக்கருக்கு தலா, 5,000 ரூபாய் வழங்கப்பட்டது.

மாநாட்டு மேடையிலும், எந்த தலைவர்களின் படமும் இல்லை. அனைத்து பேனர்களிலும் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோரது படங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X