தேவர் சிலைக்கு தங்க கவசம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேவர் சிலைக்கு தங்க கவசம்

Added : பிப் 03, 2014 | கருத்துகள் (1)

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, இம்மாதம் 9ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா தங்கக் கவசம் அணிவிக்கிறார். அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் ஜெயலலிதா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவிற்காக, கடந்த 2010ம் ஆண்டு, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.அப்போது, தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்க ஆவன செய்ய வேண்டும் என, அங்கு குழுமியிருந்த மக்களும், கோவை, காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேஸ்வர சுவாமியும் வேண்டுகோள் வைத்தனர்.அதை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, அ.தி.மு.க., சார்பில் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்படும் என, தெரிவித்திருந்தார். அதன்படி இம்மாதம், 9ம் தேதி, பிற்பகல், 1:30 மணிக்கு, பசும்பொன் கிராமத்தில், தேவர் சிலைக்கு, முதல்வர் ஜெயலலிதா தங்கக் கவசம் அணிவிக்கிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X