அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவையில் உதயமானது கொங்குநாடு ஜனநாயக கட்சி

Added : பிப் 03, 2014 | கருத்துகள் (3)
Advertisement
கோவையில் உதயமானது கொங்குநாடு ஜனநாயக கட்சி

கோவை: கொங்குநாடு முன்னேற்ற கழகத்திலிருந்து, சமீபத்தில் விலகிய, அதன் பொதுச்செயலர், நாகராஜ், "கொங்குநாடு ஜனநாயக கட்சி'யை நேற்று துவக்கினார். கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் தலைவராக, "பெஸ்ட்' ராமசாமி உள்ளார். இக்கட்சியில், பொதுச்செயலராக இருந்த ஈஸ்வரன், அதிலிருந்து விலகி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என்ற கட்சியை ஏற்கனவே துவக்கினார். அதன்பின், கொ.மு.க., பொதுச்செயலராக நாகராஜ் பதவி வகித்தார். தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சமீபத்தில், கட்சியில் இருந்து விலகிய நாகராஜ், "கொங்குநாடு ஜனநாயக கட்சி' என்ற கட்சியை, கோவை, சின்னியம்பாளையத்தில் நேற்று துவக்கினார். அங்குள்ள திருமண மண்டபத்தில் நடந்த விழாவில், பச்சை, மஞ்சள், பச்சை நிற கொடியுடன், 'கேஜேகே' என்ற ஆங்கில எழுத்துக்களுடன் கொடியை அறிமுகம் செய்தார்.

நாகராஜ் கூறுகையில், ""எங்கள் கட்சியின் பெயருக்கு அங்கீகாரம் பெற, தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்துள்ளோம். வரும் தேர்தலில், சமூக ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து செயல்படுவோம். வாய்ப்பு கிடைத்தால், லோக்சபா தேர்தலில் போட்டியிடுவோம். மத்தியில், நரேந்திர மோடி ஆட்சிக்கு வர வேண்டும். இன்னும் ஓரிரு நாட்களில் கட்சியின் பிரதிநிதிகள் கூடி, புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்வோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
03-பிப்-201420:04:32 IST Report Abuse
GUNAVENDHAN கொங்குநாடு முன்னேற்ற கழகம் , இப்போது மொத்தம் 4 கட்சிகளாக சில வருடங்களிலேயே அசுர வளர்ச்சி அடைந்துள்ளதோ ?.
Rate this:
Share this comment
Cancel
rasaa - atlanta,யூ.எஸ்.ஏ
03-பிப்-201412:18:28 IST Report Abuse
rasaa யோவ்... உங்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா? லெட்டெர் பேடு கட்சிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது. இன்னும் எவ்வளவு நிறங்கள் இருக்கின்றன... ஏன் அந்த பச்சை, மஞ்சளையே தூக்கிட்டு அலையுறீங்க.
Rate this:
Share this comment
Cancel
Logu Thangam - Chettipalayam,இந்தியா
03-பிப்-201411:34:02 IST Report Abuse
Logu Thangam கட்சிக்கு எதிராக செயல்பட்ட GK.நாகராஜ் கொ.மு.க வில் இருந்து 10/12/2013 அன்றுமுதல் கட்சியில் இருந்து விடுவ்கிக்கபட்டார் அனால் அவர் சொல்வது முற்றிலும் பொய். அவரை யாரும் கொ.மு.க வில் இருந்து வெளியேற்றவில்லை தானாக வெளியேறி கட்சி துவங்கிஉள்ளார் என்பதுபோல ஒரு மாயைய் தோற்றத்தை உருவாக்கயுள்ளர். இவர் பணம் சம்பாதிப்பதற்காக இந்த இயக்கத்தை துவங்கிஉள்ளார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X