ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக 'ஆம் ஆத்மி' கட்சி அலறல்: ரூ.20 கோடி கொடுக்க முன்வந்ததாக எம்.எல்.ஏ., தகவல்

Updated : பிப் 04, 2014 | Added : பிப் 04, 2014 | கருத்துகள் (66)
Advertisement
ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக 'ஆம் ஆத்மி' கட்சி அலறல்:     ரூ.20 கோடி கொடுக்க முன்வந்ததாக எம்.எல்.ஏ., தகவல்

'டில்லியில் நடைபெறும், 'ஆம் ஆத்மி' அரசை, எப்படியும் கவிழ்த்தே தீருவது என, காங்கிரசும், பா.ஜ.,வும் கூட்டுச் சேர்ந்து, சதி திட்டம் தீட்டியுள்ளன. இதை அம்பலப்படுத்தும் விதத்தில், டில்லி முழுவதும், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

டில்லியில் நேற்று, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, சஞ்சய் சிங், நிருபர்களிடம் கூறியதாவது:


சதித் திட்டம்:


ஆம் ஆத்மி, ஆட்சிக்கு வந்ததை, காங்கிரசாலும், பா.ஜ.,வாலும், ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இதனால், எப்படியும், இந்த ஆட்சியை, கவிழ்க்க வேண்டுமென்று, கூட்டுச் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக, பல வழிகளிலும், முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்ததும், மின் கட்டணத்தை, பாதியாகக் குறைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை, தனியார் மின் வினியோக நிறுவனங்களால், பொறுத்துக் கொள்ள முடியவில்லை. குறிப்பாக, அனில் அம்பானி நிறுவனம், டில்லியின் கிழக்குப் பகுதிக்கு, மின் வினியோகம் செய்கிறது. இந்த நிறுவனத்திற்கு, மின்சாரம் வழங்கும், என்.டி.பி.சி., பொதுத்துறை நிறுவனத்திற்கு, பணம் கட்டாமல், பாக்கி வைத்துள்ளது. டில்லியில், மின்சாரத்தை, என்.டி.பி.சி.,யிடம் இருந்து வாங்கி, தனியார் நிறுவனங்கள், வினியோகம் செய்கின்றன. கிழக்கு டில்லி பகுதிக்கு, மின்சாரம் தடை செய்யப்படும் என, தனியார் நிறுவனம், மிரட்டல் விடுக்கிறது. இந்த மிரட்டலுக்கு அடிபணியாமல், முதல்வர் கெஜ்ரிவால், 'மின் வினியோக உரிமத்தை, ரத்து செய்யவும், தயங்க மாட்டோம்' என்றார்.


ஆர்ப்பாட்டம்:


இது காங்கிரசுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் பிடிக்கவில்லை. இந்த பின்னணியில் தான், வேண்டுமென்றே, டில்லி அரசுக்கு, நெருக்கடி அளிக்க, காங்கிரஸ் திட்டமிட்டு, நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதை, கண்டிக்கும் வகையிலும், மக்கள் மத்தியில் எடுத்துக் கூறும் வகையிலும், நாளை (இன்று) முதல், டில்லி முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, சஞ்சய் சிங் கூறினார்.

ஆம் ஆத்மி, எம்.எல்.ஏ., மதன் லால் கூறியதாவது:எங்கள் ஆட்சி, டில்லியில் அமைந்து மூன்று நாட்கள் கழித்து, எனக்கு, ஒரு போன் வந்தது. வெளிநாட்டு அழைப்பு அது. அதில் பேசிய ஒருவர், 'ஆம் ஆத்மி கட்சியை, உடைத்து வெளியே வாருங்கள்' என்றார்.

மேலும், 'இது சம்பந்தமாக, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லியை, உடனடியாக சென்று பாருங்கள். அவர், மேற்கொண்டு செய்ய வேண்டியதை சொல்லுவார்' என்றும் கூறினார்.நான் உடனே, 'வாயை மூடு. வை போனை...' என்று கூறி, சத்தம் போட்டேன். அதே எண்ணுக்கு, நான் திரும்பவும், போன் செய்த போது, யாரும் எடுக்கவில்லை.சில நாட்கள் முன், இன்னொருவர், குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் நண்பர் என, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, என்னை வந்து சந்தித்தார்.

அவர் கூறியதாவது: பின்னியைப் போல், நீங்களும் கட்சியை விட்டு, வெளியே வாருங்கள். உங்களுக்கு, நாங்கள் உதவுகிறோம். குறைந்தது, 10 எம்.எல்.ஏ.,க்களை, அழைத்து வாருங்கள். ஆம் ஆத்மி கட்சியை உடைத்து, உருவாக்கப்படும் குழுவுக்கு, தலைவராக இருங்கள். உங்களுக்கு, முதல்வர் பதவி, வழங்கப்படும். அவ்வாறு செய்தால், 20 கோடி ரூபாய் அளிக்கப்படும். தவிர, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும், 10 கோடி ரூபாய் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.போன் உரையாடலை, நான் பதிவு செய்யவில்லை; ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க இயலாது. என்றாலும், என்னிடம் பேரம் பேசப்பட்டது உண்மை.இவ்வாறு, மதன் லால் கூறினார்.


3 எம்.எல்.ஏ.,க்கள் இன்று ஆதரவு வாபஸ் :

ஆம் ஆத்மி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, இன்று விலக்கிக் கொள்ளப் போவதாக, அதிருப்தி, எம்.எல்.ஏ., வினோத்குமார் பின்னி, நேற்று தெரிவித்தார்.டில்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அதிக இடங்களில், 31 தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற்றது. 28 எம்.எல்.ஏ.,க்களை பெற்ற ஆம் ஆத்மி, எட்டு உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.காங்கிரஸ் தலைவர்கள் மீதும், அக்கட்சியை சேர்ந்த, முன்னாள் முதல்வர், ஷீலா தீட்ஷித் மீதும், கண்டனக் குரல் எழுப்பி வரும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி, நித்ய கண்டத்தை சந்தித்து வருகிறது.இந்நிலையில், கட்சிக்கு எதிராக பேசியதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட, எம்.எல்.ஏ., வினோத்குமார் பின்னி, இன்று, அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறப் போவதாக அறிவித்துள்ளார்.அவருடன், ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த, எம்.எல்.ஏ., சோபிப் இக்பால், சுயேச்சை எம்.எல்.ஏ., ராம்பீர் சோகீன் ஆகியோர், அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.இதனால், கெஜ்ரிவால் அரசு, பெரும்பான்மை பலத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில், பா.ஜ., தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக, ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இதை, சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது குறித்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
- கமல்நாத், மத்திய அமைச்சர், காங்.,


அருண் ஜெட்லி மறுப்பு:

பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான, அருண் ஜெட்லி, ஆம் ஆத்மியின் புகாரை மறுத்துள்ளார்.இதுகுறித்து, அவர் அளித்துள்ள பதிலில், "ஆம் ஆத்மி குற்றச்சாட்டு அபத்தமானது, முட்டாள் தனமானதும் கூட. மாற்று அரசியல் வழங்க போவதாக, தம்பட்டம் அடித்து, அரசியலில் இறங்கினர். தவறுகள், பொய்கள் போன்றவை தான், அவர்களது மாற்று அரசியல் என்பது, இப்போது தான் புரிகிறது,” என்றார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இளங்கோ - chennai,இந்தியா
05-பிப்-201402:08:43 IST Report Abuse
இளங்கோ ரூபாய் இருபது கோடியும் கொடுத்து முதல்வர் பதவியும் இவருக்கு கொடுக்க BJP யினருக்கு என்ன தலைஎழுத்து?கொஞ்சம் நம்பும்படியாக வேறு ஏதாவது சொல்லியிருக்கலாம் Mr மதன்லால்.
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
04-பிப்-201422:40:26 IST Report Abuse
adalarasan DEC.ல் குடுப்பதாக சொன்னால் , இதுவரை ஏன், தெரிவிக்கவில்லைபோலீசில், பதிவுசெய்து, நிரூபிக்க தடயங்களை, கொடுக்கலாமே?சரியான அரசியில் நாடகம் இவர்களும் வெகுவிரைவில், கத்துக்கொண்டுவிட்டனர்? நடராசன்.
Rate this:
Share this comment
Cancel
Thamizhan - chennai,இந்தியா
04-பிப்-201418:42:33 IST Report Abuse
Thamizhan இவங்க கட்சிய யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை தானாகவே இவர்களே அழிச்சிபாங்க..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X