பதிவு செய்த நாள் :
கருத்துகள் (220)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

தே.மு.தி.க., மாநாட்டில், கூட்டணி குறித்து, தெளிவான முடிவு அறிவிக்கப்படாத நிலையில், அக்கட்சித் தலைவர் விஜயகாந்தின் மனைவி, பிரேமலதாவின் ஆவேச பேச்சும், ஊழல் குற்றச்சாட்டும், தி.மு.க.,வை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இரு கட்சிகளின் கூட்டணி முயற்சிக்கு, இது பெரும் தடையாக அமைந்துள்ளதாகவும், தி.மு.க., வட்டாரம் கருதுகிறது. அதேநேரத்தில், பா.ஜ., மீது, எந்த விமர்சனமும் செய்யப்படாததால், 'கூட்டணி வாய்ப்பில் பாதிப்பு இல்லை' என, அக்கட்சி வட்டாரம் நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

குழப்பம் : யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்வதற்காக, உளுந்தூர்பேட்டை அருகே, எறஞ்சி கிராமத்தில், தே.மு.தி.க., ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. ஆனால், 'ஊழலை ஒழிப்போம்' என, உறுதிமொழி எடுத்ததோடு சரி; கூட்டணி பற்றி எந்த முடிவும் எடுக்கப்படாமல், மாநாடு முடிந்துள்ளது.இறுதியாக பேசிய, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த், 'தனித்துப் போட்டியிட வேண்டும் என்பது, தொண்டர்கள் விருப்பமாக உள்ளது. ஆனாலும், தலைவர்கள் எடுக்கும் முடிவை, அவர்கள் ஏற்றுக் கொள்வர்' எனக் கூறி, குழப்பத்தை நீட்டிக்கச் செய்துள்ளார். தே.மு.தி.க.,வுடன் கூட்டு சேர, தி.மு.க.,வும், பா.ஜ.,வும் விருப்பம் தெரிவித்துள்ளன. அதற்கான பூர்வாங்க பேச்சு முடிந்துள்ளது. தே.மு.தி.க.,வின் முடிவுக்காக, இந்த கட்சிகள் காத்திருக்கின்றன. மாநாட்டில், கட்சியினரிடம் கருத்து கேட்டு, முடிவை தெரிவிக்கப் போவதாக, இந்த கட்சிகளுக்கு, விஜயகாந்த் பதில் அளித்திருந்தார்.எனவே, மாநாட்டு முடிவை, தே.மு.தி.க.,வினரை விட, இக்கட்சியினர் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், விஜயகாந்த் திட்டவட்டமாக எதையும் அறிவிக்க மறுத்து விட்டார். அதனால், கூட்டணிக்காக அக்கட்சி நடத்தி வரும் பேரம், தொடரும் சூழல் உருவாகி உள்ளது.

கவலை :இதற்கிடையில், மாநாட்டு பேச்சும்,

கருத்தும், தி.மு.க.,வை கவலை அடையச் செய்துள்ளது. அ.தி.மு.க.,வை கடுமையாக தாக்கிப் பேசிய விஜயகாந்த், தி.மு.க.,வை தொட மறுத்து விட்டார். ஆனால், அவரது மனைவி, தி.மு.க.,வுக்கு எதிராக பேசி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 'ஆட்சியில் இருந்த போது, தே.மு.தி.க.,வை அழிக்க தி.மு.க., நினைத்தது.அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும், தே.மு.தி.க., தான் சவால்' என, பேசிய பிரேமலதா, '2ஜி' ஊழல் விவகாரத்தையும் இழுத்துள்ளார். அதற்கு முன், அவர் கட்சியினரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, தி.மு.க., கூட்டணிக்கு எதிரான நிலையை பதிவு செய்துள்ளார். 'அவர்கள் பதவிக்கு வர, நம்மை பகடைக்காயாக ஆக்கப் பார்க்கின்றனர்' என, பிரேமலதா பேசிய தகவல், அறிவாலயம் வரை எட்டியுள்ளது.இதுவும், தி.மு.க., தலைமையை அதிருப்தி அடையச் செய்து விட்டது.

இழுத்தடிப்பு :இதுகுறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது:அ.தி.மு.க.,வைப் போல, தி.மு.க.,வும் தங்களுக்கு எதிரி தான் என, பிரேமலதா பேசியுள்ளது, அக்கட்சி தலைமையின் மன ஓட்டத்தை தான் பிரதிபலிக்கிறது. கூட்டணி சேர்வதற்காக, தி.மு.க., எடுத்த முயற்சிகளுக்கு, எந்த உத்தரவாதமும் தராமல், விஜயகாந்த் இழுத்தடித்து வருகிறார்.மேலும், கூட்டணி சேர தடையாக இருக்கும் விதத்தில், நடைமுறைக்கு

Advertisement

ஒவ்வாத நிபந்தனைகளையும் விதிக்கிறார். முதலில், 20 தொகுதிகள் வேண்டும் என, கேட்டார். அது முடியாது என்றதும், காங்கிரசையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என, கூறத் துவங்கினார். தி.மு.க.,வுடன் கூட்டு சேர்வதை விரும்பாமல் தான், அவர், இப்படி நியாயமற்ற கோரிக்கைகளை கூறுகிறார் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஆனாலும், அணியை வலுப்படுத்தவேண்டும் என்பதற்காக, அக்கட்சியின் முடிவை எதிர்நோக்கினோம். இப்போதும் கூட, விஜயகாந்தின் மனநிலை தெரியவில்லை. ஆனாலும், அவரது மனைவியின் மனநிலை தெரிந்து விட்டது. மனைவியின் கருத்துக்கு விரோதமாக, அவர் முடிவு எடுப்பார் என்பதை, நாங்கள் நம்பத் தயாராக இல்லை.இவ்வாறு, தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

நம்பிக்கை :இந்நிலையில், 'மாநாட்டில் பா.ஜ., பற்றி எந்த விமர்சனமும் இல்லாததால், கூட்டணியில், தே.மு.தி.க., சேருவதற்கான வாய்ப்பு பறிபோகவில்லை' என, பா.ஜ., தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், 'தனித்துப் போட்டியிட வேண்டும் என்பது, தொண்டர்களின் விருப்பம் என்று தான், விஜயகாந்த் கூறியிருக்கிறார். அது அவரது விருப்பம் அல்ல. அதை இன்னும் கூறவில்லை. அது, பா.ஜ.,வுடன் கூட்டணி என்பதாக தான் இருக்கும்' என்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (220)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
05-பிப்-201400:54:33 IST Report Abuse
John Shiva   U.K விஜயகாந்த் நல்லாக தண்ணீர் அடித்துப் போட்டு பேசியதை இன்று செய்திகளில் பார்த்தேன் .இவரை ஒரு எதிர் கட்சி தலைவர் என்று சொல்லக் கூடாது .
Rate this:
Share this comment
Cancel
samraj - ulaanbaatar ,மங்கோலியா
04-பிப்-201422:38:26 IST Report Abuse
samraj 2006 ல் மன்மோகனுக்கு அழுத்தம் கொடுத்து, பதவியை அழுக வைக்க மகனுக்கு மந்திரி பதவி பெற்ற கருணாநிதி, இப்போது விஜயகாந்த் கொடுக்கும் அழுத்தத்தால் விழி பிதுங்கி நிற்கிறார். இந்த இரண்டு வியாபாரிகளும், தலைவர்கள் பொறுப்புக்கு வந்து விட்டதால், இவர்களை பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்புக்கு நாமும் ஆளாகிவிட்டோம்.
Rate this:
Share this comment
Cancel
ramkumar - chennai,இந்தியா
04-பிப்-201420:43:26 IST Report Abuse
ramkumar விஜயகாந்துக்காக பிஜேபி காத்து கிடப்பது வெட்க கேடு...vijayakanth நாகரிகம் தெரியாதவர். இவர் உடன் சேர்ந்தால் மோடிக்கு அவ பெயர் உண்டாகும் எனவே வரும் தேர்தலில் மக்களும் மற்ற கட்சியினரும் தேமுதிகவை புறக்கணிக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
04-பிப்-201418:28:10 IST Report Abuse
villupuram jeevithan அவர் தயவுக்காக காலில் விழும் கட்சிகளை கிண்டல் செய்வதை விட்டு விட்டு இப்படி இவரை போய் கிண்டலடிக்கலாமா?
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
04-பிப்-201418:26:53 IST Report Abuse
villupuram jeevithan பாவம், கேப்டனை போட்டு இப்படி வருத்தெடுக்கிறீங்க? அவர் என்ன பண்ணுவார் எல்லோரும் அவர் காலில் விழுந்தா?
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
04-பிப்-201416:06:06 IST Report Abuse
T.C.MAHENDRAN விஜயகாந்த் ஒரு காமெடி பீசு என்றால் ,பிரேமலதா ஒரு டம்மி பீசு.
Rate this:
Share this comment
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
04-பிப்-201417:44:16 IST Report Abuse
ஆனந்த் அந்த ரெண்டு பீஸின் கூட்டணிக்கு ஏங்கும் கருணாநிதி ஒரு .... தானே...
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
04-பிப்-201415:49:36 IST Report Abuse
Sundeli Siththar தேமுதிக இன்று ஆட்சியில் இல்லை. அந்த நேரம், ஊழல் எதிர்ப்பு என்று கூறலாம்... ஆனால் அவர்களால் குடும்ப ஆதிக்கம் பற்றி பேசமுடியாது... மனைவியும், மைத்துனரும், தேமுதிகவை கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். பண்ரூட்டி ராமச்சந்திரன் அவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்யும் அளவிற்கு அவர்கள் இருக்கின்றனர். இந்தக் கட்சியை நம்புவது முட்டாள்தனம்.
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
04-பிப்-201415:42:40 IST Report Abuse
Sundeli Siththar அவங்களா வந்தா வரட்டும்... இல்லையினா போகட்டும். தேமுதிகவிற்காக யாரும் ( திமுகவும், பாஜகவும் ) காத்திருக்க வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
SKM - naragham,இந்தியா
04-பிப்-201415:20:32 IST Report Abuse
SKM Avargal ஆட்சிக்கு வர நம்மை பகடைக்காய் ஆக்க பார்க்கின்றனர் ? நீங்கள் ஏற்கனவே பகடைக்காய் ஆக இருந்தவர்கள்தான் .
Rate this:
Share this comment
Cancel
kumbakonam kuppusami - kumbakonam,இந்தியா
04-பிப்-201414:28:02 IST Report Abuse
kumbakonam kuppusami தினமலர் தான் அப்செட் ஆகி உள்ளது. பிரேமலதா மற்று ஒரு ஜெ ஜெ என்பது அனைவருக்கும் தெரியும் ஒவ்வொரு தேர்தலிலும் பணம் வாங்கி கொண்டு தனியாக நிற்பது இவருக்கு வாடிக்கை. ஊழல் ஒழிப்பு என்பது வெறும் கோஷம் தான். எறிஞ்சி கூட்டம் எல்லா பத்திரிக்கைகளுக்கும் ஒரு ஏமாற்றமே எதிர் பார்த்த செய்திகள் கிடைக்க வில்லை என்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X