பச்சை பட்டனை 2 முறை அழுத்தினால் தொடர்பு| Dinamalar

பச்சை பட்டனை 2 முறை அழுத்தினால் தொடர்பு

Added : பிப் 05, 2014
Advertisement
பச்சை பட்டனை 2 முறை அழுத்தினால் தொடர்பு

நவம்பர் 21, 2008: அஸீஸாபாத்திலிருந்து கார் மூலமாக இவர்கள் வேறொரு வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஸாகியர் ரகுமான் லக்வீ, ஜரார்ஷா, அபுஹம்சா, காஃபா, நசீர் மற்றும் நசீர் அகமது ஆகியோர் அங்கு முன்பே வந்திருந்தனர். இந்த லட்சியக் குழுவின் தலைவனாக இஸ்மாயில் கான் நியமிக்கப்பட்டிருந்தான். இந்த வீட்டின் அருகில் சரக்குகள் நிறைந்த பல பெட்டிகள் இருந்தன. இவர்களுக்கு இந்தப் பெட்டிகள் திறந்து காட்டப்பட்டுப் பின்னர் இவர்களிடம் தரப்பட்டன. இவற்றில் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் இருந்தன இந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை எவ்வாறு வினியோகிக்க வேண்டுமென்று இஸ்மாயிலிடம் அபுஹம்ஸா விளக்கினான். இந்த உத்தரவை இஸ்மாயில் அவனது டைரியில் குறித்துக்கொண்டான். சாக்குகளைத் தன்வசம் பெற்றுக்கொண்டான்.இந்திய கரன்சியில் பணம்:

பின்னர் கசாப் இடம் அபு ஹம்சா ரூபாய் பத்தாயிரத்து எண்ணூறு (ரூ.10,800) இந்தியக் கரன்சியாகக் கொடுத்தான். அதை கசாப், இஸ்மாயில் இருவரும் பகிர்ந்துகொண்டனர். மற்ற ஜோடிகளுக்கும் இவ்வாறு இந்தியக் கரன்சியில் பணம் வழங்கப்பட்டது. பின்னர் ஜரார்ஷா ஒவ்வொருவருக்கும் ஒரு மொபைல் போன் வழங்கினான். இந்த செல்போன் நம்பர்கள் எந்த இடத்துக்கு உரியவை என்று இஸ்மாயில் கேட்டதற்கு, அந்த எண்கள் இந்தியாவைச் சேர்ந்தது என்றும், அதற்குரிய சிம் கார்டுகள் இந்தியாயவில் சிலரை ஏமாற்றிப் பெறப்பட்டதென்றும் ஜரார்ஷா கூறினான். இவர்கள் மும்பையை அடைந்தவுடன் இவை ஆக்டிவேட் ஆகுமென்றும் ஜரார்ஷா கூறினான். மும்பையை அடைந்த பின்னர் இந்த போன்களைப் பயன்படுத்துமாறும் ஷா கூறினான். எந்த எண் மூலம் இவர்களைத் தொடர்பு கொளவது என்று கசாப் கேட்டபோது, அந்த எண்கள் போன்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதென்றும், அதில் உள்ள பச்சை பட்டனை இரண்டுமுறை அழுத்தினால், அவர்களுடன் தொடர்பு கிடைக்கும், அவர்களும் வேலையின் போக்கு பற்றி அவர்களுடன் பேசலாமென்று ஜரார்ஷா அவர்களிடம் தெரிவித்தான்.ரகசிய குறியீடுகள்:

பின்னர் இஸ்மாயிலிடம் சில தொலைபேசி எண்களை ஜரார்ஷா கொடுத்து அவற்றை அவனது டைரியில் குறித்துக்கொள்ளுமாறு கூறினான். இஸ்மாயில் அவ்வாறே செய்தான். மேலும் கொலாபா, டபிள்யூடிசி ஆகிய மும்பைப் பகுதிகளின் பெயர்களையும் விவரித்தான். இந்தப் பயிற்சியின்போது இவர்களுக்கு அபுஹம்ஸா, அவர்களை யாரும் சந்தேகப்படாமலிருக்க, குறிப்பாக அவர்கள் தொலைபேசியில் பேசும்போது எவ்வித சந்தேகங்களும் ஏற்படாதவாறு சில குறியீடுகளையும் - கோட்ஸ் - கொடுத்தான். இந்தக் குறியீடுகள், வரைபட விபரங்களைத் தனது நாட்குறிப்பில் குறித்துக் கொண்டான். பின்னர் இஸ்மாயிலிடம் ஒரு சேடலைட் தொலைபேசியைக் கொடுத்துவிட்டு ஸாகியுர் ரகுமான் அங்கிருந்து சென்றான்.மூடை மூடையாக ஆயுதங்கள்:

பின்னர், வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் அடங்கிய பெரிய சாக்குமூட்டையை இஸ்மாயில் கொடுத்ததுடன் ஒவ்வொருவருக்கும் ஒரு ஏகே47 துப்பாக்கி, 8 மாகசின்கள், 240 ரவுண்டுகள், 8 கைக்குண்டுகள், ஒரு பயோநெட், ஒரு பிஸ்டல்-3 மாகசின்-21 ரவுண்டுகள், ஒரு தண்ணீர் பாட்டில், 1 கிலோ ரெய்சின், 1 ஹெட்போன் மற்றும் 3 ஒன்பது வோல்ட் பேட்டரியுடன் ஒரு சார்ஜரும் கொடுத்தான். மேலும் ஒவ்வொருவருக்கும் 8 கிலோ எடையுள்ள ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து கொண்ட டிபன் டப்பா (ஒரு சிறிய சாக்குப்பை) கொடுத்தான். மேலும், ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரு ஜிபிஎஸ் சிஸ்டம் மற்றும் இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கெக்ளள சிறிய பவுச் ஒன்றும் இஸ்மாயில் கொடுத்தான்.


அவர்கள் அனைவரும் தங்களுக்குத் தரப்பட்ட பொருட்களை எடுத்துக் கொண்டார்கள். ஏகே47 மற்றும் பிஸ்டலைச் சுத்தம் செய்து சர்வீஸ் செய்தனர். ஏகே47ல் மாகசின் ஒவ்வொன்றிலும் 30 ரவுண்டுகள் நிரப்பினர். பிஸ்டலில் 7 குண்டுகள் நிரப்பினர். பயிற்சிக் காலத்தில் சொல்லிக் கொடுத்ததுபோல, ஒரு மாகசின் தீர்ந்ததும், அடுத்தது தயாராக, உடனடியாக இயங்க, இரண்டு மாகசின்களை ஒரு கயிற்றில் இணைத்து, தொடர்ந்து சுடுவதற்குத் தயாராக வைத்துக் கொண்டார்கள். பெரிய கோணிப்பையில் தங்களது புதிய ஆடைகள், மற்ற ஆயுதங்களைப் பேக் செய்துகொண்டார்கள். வெடிகுண்டுகளும் மற்ற பொருட்களும் லஷ்கர்-இ-தோய்பாவுக்குச் சொந்தமான காரில் அன்று இரவு வைக்கப்பட்டது. இந்துஸ்தானி பெயர்களுடன் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை அவரவர் பாக்கெட்டில் இஸ்மாயில் அறிவுரைப்படி வைத்துக் கொண்டார்கள்.ஜிபிஎஸ் சிஸ்டம்:

வரைபடத்தில் காட்டப்பட்ட நெடுங்கோடு, படுக்கைக்கோடு விபரங்களை டைரியில் அபுஹம்ஸா, காபா அறிவுரைப்படி இஸ்மாயில் குறித்துக்கொண்டான். மும்பை நகரை அடைவதற்கு இந்த ஜிபிஎஸ் சிஸ்டம் சிரமமில்லாமல் உதவும் என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. அப்போது கசாப் இவர்கள்கூட இருந்தான்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X