'நம்மிடம் பண பலம் இல்லை; மக்கள் பலம் உண்டு': பொதுக்குழுவில் ஆதங்கப்பட்ட ம.தி.மு.க., நிர்வாகிகள்

Added : பிப் 05, 2014 | கருத்துகள் (1)
Share
Advertisement
'ம.தி.மு.க.,விடம் பண பலம் இல்லை; ஆனால், மக்கள் பலம் இருக்கிறது. ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபம், ம.தி.மு.க.,வுக்கு ராசியான மண்டபம். வரும் லோக்சபா தேர்தலில், கட்சி இரு மடங்கு வெற்றி கிடைக்கும்' என, ம.தி.மு.க., பொதுக்குழுவில், அந்தக் கட்சி நிர்வாகிகள், 'சென்டிமென்டாக' பேசினர். இருந்தாலும், பல ஆண்டுகளாக பதவியில் இல்லாததால் தான், தங்கள் கட்சியினரிடம் பணம் இல்லை என்பதை,
'நம்மிடம் பண பலம் இல்லை; மக்கள் பலம் உண்டு': பொதுக்குழுவில் ஆதங்கப்பட்ட ம.தி.மு.க., நிர்வாகிகள்

'ம.தி.மு.க.,விடம் பண பலம் இல்லை; ஆனால், மக்கள் பலம் இருக்கிறது. ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபம், ம.தி.மு.க.,வுக்கு ராசியான மண்டபம். வரும் லோக்சபா தேர்தலில், கட்சி இரு மடங்கு வெற்றி கிடைக்கும்' என, ம.தி.மு.க., பொதுக்குழுவில், அந்தக் கட்சி நிர்வாகிகள், 'சென்டிமென்டாக' பேசினர். இருந்தாலும், பல ஆண்டுகளாக பதவியில் இல்லாததால் தான், தங்கள் கட்சியினரிடம் பணம் இல்லை என்பதை, அவர்கள் ஆதங்கத்தோடு வெளிப்படுத்தியதாக நம்பப்படுகிறது.


மக்கள் நம் பக்கம்:

ம.தி.மு.க.,வின், 22வது பொதுக்குழுக் கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள, ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில், நேற்று நடந்தது. பொதுக்குழுவில் பேசிய, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, ''ம.தி.மு.க., விடம் பண பலம் இல்லை; ஆனால், மக்கள் பலம் உள்ளது. தமிழக மக்களின் வாழ்வாதாரங்களுக்கு, ம.தி.மு.க., போராடுவதால், மக்கள் நம் பக்கம் திரும்பி உள்ளனர்'' என்றார்.

பொதுக்குழு கூட்டம் முடிந்த பின், வைகோ பேட்டி: மூத்த மாவட்டச் செயலர் மாரியப்பன் பேசுகையில், ''இந்த திருமண மண்டபம் ராசியான மண்டபம். ஏற்கனவே, இந்த மண்டபத்தில், ம.தி.மு.க., பொதுக்குழு நடத்தியது. அப்போது நடந்த தேர்தலில், ம.தி.மு.க., வெற்றி பெற்றது. அதேபோல், வரும் லோக்சபா தேர்தலில், ம.தி.மு.க., இருமடங்கு வெற்றி பெறும்,'' என்றார். அத்துடன், காங்., கட்சியை, ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றும் குறிக்கோளுடன், பா.ஜ.,வுடன் செய்து கொள்ளும், தொகுதி உடன்பாடு அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்வது, தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை இலக்காக நிர்ணயித்து, மக்கள் சக்தியைத் திரட்டுவது என்றும், கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இலங்கையில், தனி ஈழம் தொடர்பாக, பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்; காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்கு முறைக்குழு அமைக்க வேண்டும்; மீத்தேன் எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; கரும்பு, நெல்லுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயிக்க வேண்டும்; மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்; கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும்; தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும்; கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது உட்பட, 17 தீர்மானங்களும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன. மத்தியில், ஊழலற்ற அரசு அமைய வேண்டும். காங்., அரசும், காங்கிரசை ஆதரிக்கும் அரசும், மீண்டும் அமையக் கூடாது. காங்., ஆட்சியில், பல ஊழல்கள் நடந்துள்ளன. இலங்கை விவகாரத்தில், வாஜ்பாய் பின்பற்றிய அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.


தே.மு.தி.க., வந்தால் மகிழ்ச்சி:

இலங்கை பிரச்னையை, பா.ஜ., சரியான முறையில் அணுகும். நாளுக்கு நாள் மோடி ஆதரவு, அலை பெருகி வருகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள் என, அனைத்து தரப்பு மக்களிடமும், மோடி பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. மோடி பிரதமராக, 89 சதவீதம் ஆதரவு என, கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. வரும் 8ம் தேதி நடைபெறவுள்ள, வண்டலூர் பொதுக்கூட்டத்தில், நான் பங்கேற்பேன். பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., - தே.மு.தி.க., இடம் பெற்றால், எனக்கு மகிழ்ச்சியே. லோக்சபா தேர்தலில், பா.ஜ., வுடன் ம.தி.மு.க., கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ம.தி.மு.க., 10 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட விரும்புகிறது. அவற்றில் வெற்றி பெறும் என்றும் நம்புகிறோம். இவ்வாறு, வைகோ கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pokiri - Chennai,இந்தியா
05-பிப்-201418:15:22 IST Report Abuse
Pokiri வாழ்த்துக்கள் வைகோ சார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X