பொது செய்தி

தமிழ்நாடு

டாக்டர் பிரதாப் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு

Updated : பிப் 05, 2014 | Added : பிப் 05, 2014 | கருத்துகள் (3)
Advertisement
டாக்டர் பிரதாப் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு

சென்னை: ""அப்பல்லோ குழுமம் வளர்ந்து, இந்திய சுகாதார அமைப்பின் ஒரு பகுதியாக விளங்குவது, திருப்தி அளிக்கிறது. மன உறுதி, கடும் உழைப்பு, தன்னம்பிக்கை இருந்தால், கனவை நனவாக்க முடியும்,'' என, அப்பல்லோ குழும தலைவர், டாக்டர் பிரதாப் ரெட்டி பேசினார்.

அப்பல்லோ மருத்துவமனைக் குழுமத் தலைவர், டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், "பென்குவின்' பதிப்பகம், 600 பக்க அளவில், "ஹீலர் - டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி அண்ட் தி டிரான்ஸ்பார்மேஷன் ஆப் இந்தியா' என்ற நூலை வெளியிட்டுள்ளது. பிரதாப் ரெட்டியின், 80வது வயது மற்றும், அப்பல்லோ மருத்துவமனையின், 30வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், இந்நூல் வெளியாகி உள்ளது. இதன் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.

இதில், டாக்டர் பிரதாப் ரெட்டி பேசியதாவது: பல்வேறு சவால்கள், கடும் உழைப்பின் பலனாக, உலகத் தரமான மருத்துவமனையை இந்தியாவில் நிறுவ வேண்டும் என்ற என் கனவு, 30 ஆண்டுகளுக்கு முன் நிறைவேறியது. என் உழைப்புக்கான பலன் கிடைத்துள்ளதாகவே நம்புகிறேன். அப்பல்லோ குழுமம் வளர்ந்து, இந்திய சுகாதார அமைப்பின் ஒரு பகுதியாக விளங்குவது, முழு திருப்தி அளிக்கிறது. மன உறுதி, கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை இருந்தால், இந்தியாவிலும் கனவு கண்டு, அதை நனவாக்கலாம் என்பதே, என் வாழ்க்கை வரலாற்று நூல் உணர்த்தும் உண்மை. இவ்வாறு, அவர் பேசினார்.

நூலாசிரியர் பிரணாய் குப்தா பேசுகையில், ""இரண்டு ஆண்டுகள், கடுமையான உழைப்பின் காரணமாக, இந்நூல் வெளிவந்துள்ளது. இது அரிய பொக்கிஷம்,'' என்றார்.டாக்டர் பிரதாப் ரெட்டியின் மனைவி சுசரிதா ரெட்டி, மகளும் அப்பல்லோ மருத்துவமனை மேலாண் இயக்குனருமான பிரீத்தா ரெட்டி, இணை இயக்குனர் சுனிதா ரெட்டி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Durairaj - Kuwait,குவைத்
06-பிப்-201417:37:11 IST Report Abuse
Durairaj What Appello is doing for medical service?. They are doing good business. Please Pratab do not take credit. Think what you have done poor and needy. Maintaining a corporate hospital is not service to society or Inia
Rate this:
Share this comment
Cancel
muthuppandy pandian - chennai,இந்தியா
06-பிப்-201410:11:03 IST Report Abuse
muthuppandy pandian வாழ்த்துக்கள் . உங்கள் பணி மேழும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Kurangu Kuppan - usapuram,இந்தியா
06-பிப்-201408:11:14 IST Report Abuse
Kurangu Kuppan Apollo Hospital ஒரு மருத்துவமனை இல்லை, பிரதாப் ரெட்டிக்கு அது ஒரு பணம் கொழிக்கும் machine. ஊரில் உள்ள எல்லா பயிற்சி மருத்துவர்களும் அங்கே தான் பயிற்சி எடுக்கிறார்கள். மத்திய தர வகுப்பினர் யாராவது அங்கே வைத்தியம் பார்க்க சென்றார்கள் என்றால் அவர்களிடம் உள்ள சொத்தை விற்று தான் பணம் கட்ட முடியும். அவ்வளவு குறைவான கட்டணத்தில் சிகிச்சை கிடைக்கும். 1984 ல் ஓபுல் ரெட்டி மற்றும் அவர்களது நெருங்கிய அரசியல் வாதிகள் தங்கள் கருப்பு பணத்தை அங்கே முதலிடு செய்து விட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X