பா.ஜ., தலைவர்களிடம் பிடிகொடுக்காத ராமதாஸ்: அன்புமணிக்கு ராஜ்யசபா 'சீட்' உறுதி கேட்டு அடம்

Added : பிப் 06, 2014 | கருத்துகள் (57)
Share
Advertisement
'பா.ஜ., கூட்டணியில் சேர வேண்டும் எனில், பா.ம.க.,வுக்கு ஒன்பது தொகுதிகளை ஒதுக்க வேண்டும்; அன்புமணிக்கு ராஜ்யசபா, 'சீட்' வேண்டும்' என, அந்தக் கட்சியின் தலைவர், ராமதாஸ் அடம் பிடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.'தேசிய கட்சிகளுடனும், திராவிட கட்சிகளுடனும் கூட்டணி இல்லை' என்ற முடிவில், பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் இருந்தார். ஆனால், அவரின் மகனும், கட்சியின் இளைஞர் அணி தலைவருமான,
பா.ஜ., தலைவர், ராமதாஸ்,அன்புமணி,ராஜ்யசபா சீட்

'பா.ஜ., கூட்டணியில் சேர வேண்டும் எனில், பா.ம.க.,வுக்கு ஒன்பது தொகுதிகளை ஒதுக்க வேண்டும்; அன்புமணிக்கு ராஜ்யசபா, 'சீட்' வேண்டும்' என, அந்தக் கட்சியின் தலைவர், ராமதாஸ் அடம் பிடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

'தேசிய கட்சிகளுடனும், திராவிட கட்சிகளுடனும் கூட்டணி இல்லை' என்ற முடிவில், பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் இருந்தார். ஆனால், அவரின் மகனும், கட்சியின் இளைஞர் அணி தலைவருமான, அன்புமணி, 'நீங்கள், இந்த முடிவில் இருந்தால், வரும் தேர்தல்களில், டெபாசிட் கூற முடியாது; விரைவில் கட்சியே காணாமல் போய் விடும்' என, ராமதாசை எச்சரித்ததோடு, லோக்சபா தேர்தலில், பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, வலியுறுத்தினார் அதனால், பா.ஜ., உடன் கூட்டணி அமைக்கும் முடிவுக்கு, பா.ம.க., இறங்கி வந்தது. இதையடுத்து, பா.ஜ., தலைவர்கள் - ராமதாஸ் இடையேயான சந்திப்பு, சென்னையில் சமீபத்தில் நடந்தது. அப்போது, 'பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., சேர வேண்டும் எனில், லோக்சபா தேர்தலில், பா.ம.க.,விற்கு, ஒன்பது தொகுதிகளை ஒதுக்க வேண்டும்; அன்பு மணிக்கு ராஜ்யசபா, 'சீட்' பெற்றுத்தர வேண்டும்' என, ராமதாஸ் நிபந்தனை விதித்துள்ளார்.இதைக் கேட்ட, பா.ஜ., தலைவர்கள், 'கூட்டணி உறுதியான பின், தொகுதி பங்கீட்டை மேற்கொள்ளலாம்' என, தெரிவித்து உள்ளனர்.அதை ஏற்க மறுத்த ராமதாஸ், 'நாங்கள் கேட்டதை கொடுத்தால் மட்டுமே, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், மோடி பங்கேற்கும், வண்டலூர் பொதுக் கூட்டத்தில், பா.ம.க., பங்கேற்கும்' என, திட்டவட்டமாககூறியுள்ளார்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் நடந்த, பா.ம.க., மகளிர் அணி மாநாட்டிற்கு, நேற்று சென்ற ராமதாசிடம், பா.ஜ., நிர்வாகிகள், மீண்டும் பேசியுள்ளனர். அதிலும், உடன்பாடு எட்டப்படவில்லை. ராமதாஸ் தன் நிலையில், பிடிவாதமாக இருந்து உள்ளார். எனவே, அன்புமணி மூலம் அவரை வழிக்கு கொண்டு வர, பா.ஜ., நிர்வாகிகள் ஏற்பாடு செய்துஉள்ளனர். இந்த முயற்சிக்கு பலன் கிடைக்குமா என்பது, 8ம் தேதி நடக்கும், பொதுக்கூட்டத்தின் போது தெரிந்து விடும்.


ஓரிரு நாளில் கூட்டணி: பா.ஜ., தலைவர் உறுதி:

''லோக்சபா தேர்தலில், பா.ம.க.,வுடன் ஓரிரு நாளில், கூட்டணி உறுதியாகி விடும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை கமலாலயத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:இலங்கை கடற்படையினர், தொடர்ந்து, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதோடு, துன்புறுத்தியும் வருகின்றனர். மத்திய அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, கண்டிக்கத்தக்கது. மோடி பிரதமரானால் தான், மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இலங்கை அரசு, சீனா, பாகிஸ்தான் நாடுகளை நம்பி இருக்கிறது.ராமேஸ்வரத்தில் நடந்த, கடல் தாமரை போராட்டத்தில், சுஷ்மா சுவராஜ் பங்கேற்று பேசுகையில், 'மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைந்தால், மீனவர்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும்' என, தெரிவித்தார்.வண்டலூரில், மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில், ஏ.சி.சண்முகம் பங்கேற்கிறார். கொங்கு நாடு தேசியக் கட்சியும் பங்கேற்கும். பா.ஜ., தொண்டர்கள் ஐந்து லட்சம் பேரும், மற்ற கட்சிகளின் தொண்டர்களும் கலந்து கொள்வர். கூட்டணி தொடர்பாக, பா.ம.க.,வுடன் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாம். ஓரிரு நாளில், கூட்டணி உறுதியாகி விடும். 'கூட்டணி முடிவு குறித்து, தே.மு.தி.க., மாநாட்டில் அறிவிக்கப்படும்' என, விஜயகாந்த் அறிவித்தார். ஆனால், மாநாட்டில் அறிவிக்கவில்லை. அவர் சரியான முடிவை எடுப்பார் என, நம்புகிறோம். தமிழகத்தில், பா.ஜ., கூட்டணி தான், முதல் நிலை கூட்டணியாக திகழ்கிறது.இவ்வாறு, பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Johnson - Kansas  ( Posted via: Dinamalar Android App )
07-பிப்-201405:40:07 IST Report Abuse
Johnson அரசியல் அனாதை ஆக்கப்படவேன்டிய கட்சி
Rate this:
Cancel
shyam nelatur - Oak Brook,IL-60523,யூ.எஸ்.ஏ
06-பிப்-201421:16:37 IST Report Abuse
shyam nelatur I do not understand the outlook of TN wing of BJP party. It is ridiculous to go behind parties of the stature of DMDK and PMK. Both these parties do not have any politician, worth his name. When BJP forms the central cabinet, after 2014 elections, I hate to see any person from these parties to be a part of it.BJP should fight the election on their own strength. This is my wish, if none of my earlier wishes is taken into consideration by the party.
Rate this:
Cancel
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
06-பிப்-201420:58:37 IST Report Abuse
GUNAVENDHAN பாராளுமன்ற தேர்தலில் 9 தொகுதிகள் வேண்டும் என்று அடம் பிடிக்கும் ராமதாஸ் தன்னுடைய மகன் அன்புமணியை அந்த 9 தொகுதிகளில் எங்காவது ஒரு இடத்தில் நிற்க வைக்க வேண்டியது தானே . 9 தொகுதிகள் கேட்டு வாங்கினாலும் ஒன்றில் கூட வெற்றிபெறப்போவதில்லை என்று முடிவு செய்துவிட்டாரே , எதற்க்காக ராஜ்யசபா சீட்டை தன்னுடைய மகனுக்கு கெட்க்கின்றார், அரசியல் தலைவர்கள் எல்லோருமே தன்னுடைய வாரிசுகளை கஷ்டப்படாமல் ராஜ்யசபாவுக்கு அனுப்புவதிலேயே குறியாக உள்ளார்கள் . பாட்டாளி மக்கள் கட்சிக்கு இன்று தமிழகத்தில் உள்ள செல்வாக்குக்கு 3 தொகுதிகள் தான் கொடுக்கவேண்டும், இவருக்கு அதற்க்கு மேலாக எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் அது அதிகம் தான் , தனியே நின்றால் ஒரு தொகுதியில் கூட டிபாசிட் கூட வாங்கமுடியாது என்பது தான் உண்மை . ஒரு தொகுதியில் கூட டிபாசிட்டையே வாங்க யோக்கியதையில்லாத கட்சிக்கு பாஜக எக்காரணம் கொண்டும் ராஜ்யசபா சீட்டுக்கெல்லாம் ஒப்புக்கொள்ளக்கூடாது . ராமதாஸ் பையன் அன்புமணி என்ன அகில இந்திய தலைவரா ?, தமிழகத்தில் நின்று வெற்றிபெற யோக்கியதை இல்லாதவருக்கு பாஜக தன்னுடைய செல்வாக்கால் அடுத்த மாநிலத்தில் இவருக்கு ராஜ்யசபா சீட்டை கொடுத்து இவரை கொல்லைப்புற வழியாக உள்ளே அனுப்ப வேண்டுமா ?, எப்படி இப்படியெல்லாம் கேட்க மனம் வருகின்றதோ ?, இப்படிப்பட்ட குடும்ப கட்சியை பாஜக கிட்டவே சேர்க்கக்கூடாது . தனியே நிற்ப்பேன் , தனியே நிற்ப்பேன் என்று பல மாதங்களாக ராமதாஸ் வாய் கிழிய கத்திக்கொண்டிருந்தாரே , அவரை தனியே நிற்க விடுங்கள் , அவர் யோக்கியதை இந்த தேர்தலில் வெட்ட வெளிச்சமாகிவிடும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X