அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதில் உரையா; பழி உரையா?கருணாநிதி கேள்வி

Added : பிப் 06, 2014 | கருத்துகள் (76)
Share
Advertisement
சென்னை : கவனர் உரையில், முதல்வர் ஜெயலலிதா அளித்திருப்பதற்குப் பெயர் பதில் உரையா; பழி உரையா என்பதை, தமிழக மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: 'தமிழகத்தில், விரைவில் மின்வெட்டு இருக்காது' என, முதல்வர் ஜெயலலிதா பேசியிருக்கிறார். இந்த ஆட்சியில், பல கோடி ரூபாய் முதலீட்டில், துவங்கப் போவதாக அறிவித்த, பல மின்
பதில் உரையா; பழி உரையா?கருணாநிதி கேள்வி

சென்னை : கவனர் உரையில், முதல்வர் ஜெயலலிதா அளித்திருப்பதற்குப் பெயர் பதில் உரையா; பழி உரையா என்பதை, தமிழக மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: 'தமிழகத்தில், விரைவில் மின்வெட்டு இருக்காது' என, முதல்வர் ஜெயலலிதா பேசியிருக்கிறார். இந்த ஆட்சியில், பல கோடி ரூபாய் முதலீட்டில், துவங்கப் போவதாக அறிவித்த, பல மின் திட்டங்களும், சர்வதேச ஒப்பந்தப் புள்ளி என்று கூறப்பட்டு, எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.இந்த அழகில் தான் முதல்வர், 'தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு இருக்காது' என, திசை திருப்பும் வகையில், சட்டசபையில் கூறியிருக்கிறார்.

வேளாண்மை பற்றியும், கால் நடைகள் பற்றியும் ஜெயலலிதா, தன் உரையில் படித்திருக்கிறார். வேளாண்மை, கடந்த மூன்றாண்டு காலமாக, இந்த ஆட்சியில் முறையான பலனைத் தரவில்லை. அவர்களுக்கு அரசு சார்பில் தருவதாகக் கூறிய, நிவாரணத் தொகையும் முறையாக வழங்கவில்லை. கோமாரி நோயினால், கால்நடைகள் இறந்ததற்கான நிவாரணத் தொகை கூட, இந்த அரசால் வழங்கப்படவில்லை.இவ்வாறு வேளாண் பெருங்குடி மக்களுக்கும், சமுதாயத்தின் ஏனெய பிரிவினருக்கும், அடுக்கடுக்கான தொல்லைகளையும், துயரங்களையும், வேதனைகளையும், விபரீதங்களையும் இழைத்து வரும், அ.தி.மு.க., அரசின் முதல்வர், கவர்னர் உரையில் அளித்திருப்பதற்குப் பெயர், பதில் உரையா; பழி உரையா என்பதை, தமிழக மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vidhya - mumbai,இந்தியா
06-பிப்-201419:38:44 IST Report Abuse
vidhya சட்டசபைக்கு வராத ஒரு MLA க்கு ஏன் இந்த கவலை?
Rate this:
Cancel
Anand Rao.v - Chennai,இந்தியா
06-பிப்-201417:33:04 IST Report Abuse
Anand Rao.v அண்ணே மிசார நிலைமை தற்போது அதிக அளவில் சீரடைந்திருக்கிறது தி மு க ஆட்சில் இருந்து இறங்கிய பொது இருந்ததைவிட சீரடைந்திருக்கிறது. தடை படபாத மின்சாரம் சாத்தியமானதே அல்ல. ஆனால் பராமரிப்பு மற்றும் சில காரணங்களினால் தாற்காலிக மின் நிறுத்தம் செய்தே ஆகவேண்டும். ஆனாலும் பற்றாக்குறை மிகவும் குறைந்து, விநியோகம் நன்கு கையாளப்படுகிறது. ஓய்வு பெற்ற மிவாரிய அதிகாரி அன்கிரமுரையில் சொல்கிறேன்.என்ன மின்கட்டணத்தை வீடுகளுக்கு 2 மாத நுகர்வுக்கு 400 யூனிட் வரை சீராக 1.50 ஆக நிர்ணயம் செய்யலாம். இதனால் மின் நுகர்வு குறையும்..
Rate this:
Cancel
தமிழ்நிலா - வந்தவாசி,இந்தியா
06-பிப்-201417:25:44 IST Report Abuse
தமிழ்நிலா தலைவர் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை..தலைவர் காலடி பட்டால் மீண்டும் மின்வெட்டு பிரச்சனை சரியாகிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X