தமிழ்நாடு

பா.ஜ., கூட்டணியில் கரூர் தொகுதியில் போட்டி :கைவினைஞர் முன்னேற்ற சங்கம் அறிவிப்பு

Added : பிப் 06, 2014
Share
Advertisement
விழுப்புரம் : லோக்சபா தேர்தலில் அகில இந்திய கைவினைஞர் முன்னேற்ற கழகம், பா.ஜ.,வோடு கூட்டணி வைத்துள்ளதாக மாநில பொதுசெயலாளர் விசு சிவக்குமார் தெரிவித்துள்ளார்.கோவையில் வரும் 16ம் தேதி நடக்கும் அகில இந்திய கைவினைஞர் முன்னேற்ற கழகத்தில் விஸ்வகர்ம இளைஞர் எழுச்சி மாநாட்டையொட்டி விழுப்புரத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மாநில பொதுச் செயலாளர் விசு சிவக்குமார்

விழுப்புரம் : லோக்சபா தேர்தலில் அகில இந்திய கைவினைஞர் முன்னேற்ற கழகம், பா.ஜ.,வோடு கூட்டணி வைத்துள்ளதாக மாநில பொதுசெயலாளர் விசு சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கோவையில் வரும் 16ம் தேதி நடக்கும் அகில இந்திய கைவினைஞர் முன்னேற்ற கழகத்தில் விஸ்வகர்ம இளைஞர் எழுச்சி மாநாட்டையொட்டி விழுப்புரத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மாநில பொதுச் செயலாளர் விசு சிவக்குமார் அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் 70 லட்சம் விஸ்வகர்மா தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இதற்காக கைவினைஞர் முன்னேற்ற கழகம் தமிழகம் முழுவதும் குரல் கொடுக்க வேண்டிய நிலையுள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வோடு கூட்டணியாக செயல்படுவோம்.
மக்களை முன்னேற்றுவது மட்டுமின்றி, விஸ்வகர்ம இளைஞர்களுக்கு வழிவகுக்கவும் நாங்கள் பா.ஜ.,வோடு கூட்டணி வைத்துள்ளோம். 40 தொகுதிகளில் நாங்கள்(கைவினைஞர் முன்னேற்ற கழகம்) கரூர் தொகுதியை கேட்டு, அவர்களும் (பா.ஜ.,) ஒப்பு கொண்டுள்ளனர்.
எங்கள் தொழிலாளர்களின் நிலை பற்றி சட்டசபை மட்டுமின்றி பாராளுமன்றத்திலும் குரல் கொடுக்க முதலில் நாங்கள் தேர்தலில் வென்று பிரதிநிதிகளாக கால்பதிக்க உள்ளோம். 15 லட்சம் நகை தொழிலா ளர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகவே உள்ளது.
விஸ்வகர்மா தொழிலாளர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தர வேண்டும். இதை வலியுறுத்தி கோவை, திருச்சியில் பல போராட்டங்களை நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் 40 தொகுதிகளில் நாங்கள் பா.ஜ., கூட்டணிக்கு பாடுபடுவோம்.
கரூர் தொகுதியில் எங்களின் வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடிவு செய்துள்ளோம். வரும் 16ம் தேதி கோவையில் நடக்கும் மாநாட்டில் எங்களின் பலத்தை காட்டவுள்ளோம். இந்த பலம் மூலம் பா.ஜ.,வின் வெற்றி கூட்டணி பிரகாசமாக தெரியும்.
இவ்வாறு மாநில பொது செயலாளர் விசு சிவக்குமார் கூறினார்.
இளைஞரணி செயலாளர் உமாபதி, துணை செயலாளர் மணி, மாவட்ட செயலாளர் ராஜவேல், பிரதிநிதி கணேசன், துணை செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X