கேபிள் பதிப்பதில் அத்துமீறல் அதிகாரிகள் உடந்தையா?

Added : பிப் 07, 2014 | |
Advertisement
கோவை : கோவை மாநகர எல்லைக்குள், தொலைத்தொடர்பு கேபிள் பதிக்கும் பணியில், அனுமதி அளவில் விதிமீறல் நடப்பதாக புகார் கிளம்பியுள்ளது. 'கோவை மாநகர எல்லைக்குள் அனுமதி பெற்று, ரோட்டில் குழி தோண்டும் போது, ஒப்பந்ததாரர் பெயர், கேபிள் பதிக்கும் தொலைவு, மாநகராட்சி அனுமதி எண் போன்றவை வைக்க வேண்டும். 'மாநகர எல்லைக்குள் அனுமதியின்றி குழி தோண்டினால், அவர்களை கைது செய்யும் வகையில்,

கோவை : கோவை மாநகர எல்லைக்குள், தொலைத்தொடர்பு கேபிள் பதிக்கும் பணியில், அனுமதி அளவில் விதிமீறல் நடப்பதாக புகார் கிளம்பியுள்ளது. 'கோவை மாநகர எல்லைக்குள் அனுமதி பெற்று, ரோட்டில் குழி தோண்டும் போது, ஒப்பந்ததாரர் பெயர், கேபிள் பதிக்கும் தொலைவு, மாநகராட்சி அனுமதி எண் போன்றவை வைக்க வேண்டும். 'மாநகர எல்லைக்குள் அனுமதியின்றி குழி தோண்டினால், அவர்களை கைது செய்யும் வகையில், குற்றவியல் நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் கொடுக்கப்படும். உபகரணங்கள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்' என, மாநகராட்சி கமிஷனர் லதா எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, கோவை அவிநாசி ரோட்டில், அனுமதியின்றி தொலைத்தொடர்பு கேபிள் பதித்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கேபிள் பதிக்க பயன்படுத்தி வாகனங்களை பறிமுதல் செய்து, தனியார் நிறுவன அதிகாரிகள் மீது போலீசில் புகார் கொடுத்தனர். அதையடுத்து, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தினர், கேபிள் பதிக்கும் இடத்தில், 'மாநகராட்சி அனுமதி பெற்று கேபிள் பதிக்கப்படுகிறது' என, அறிவிப்பு வைக்கத் துவங்கியுள்ளனர். ஒருசில இடங்களில், கேபிள் பதிக்கும் நிறுவனத்தின் பெயர், ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளர் பெயர், மொபைல்போன் எண்கள் போன்ற விபரங்களை எழுதி வைத்துள்ளனர். இந்நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மாநகராட்சியில் பெற்றுள்ள அனுமதி அளவை விட கூடுதலாக, கேபிள் பதிப்பதாக புகார் கிளம்பியுள்ளது. உதாரணத்துக்கு மூன்று கி.மீ.,க்கு கேபிள் பதிக்க அனுமதி பெற்று, பல கி.மீ.,க்கு கேபிள் பதித்துள்ளனர். ரேஸ்கோர்ஸ் போன்ற பகுதிகளில், குடிநீர் குழாய் பதிக்கக்கூட ரோட்டில் குழி தோண்ட மாநகராட்சி அனுமதி வழங்குவதில்லை. இந்நிலையில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் கேபிள் பதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும், அனுமதி அளவைவிட கூடுதாக கேபிள் பதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் ஐந்து மண்டலத்திலும், இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு, கேபிள் பதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேபிள் பதிக்கும் போது, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. அனுமதி மீறலை தடுக்க, பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் அனுமதி அளவுக்கு கேபிள் பதித்துள்ளனரா; அனுமதி அளவை மீறி கேபிள் பதிக்கப்பட்டுள்ளதா
என்பதை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். கேபிள் துண்டிக்கப்படும்!
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது இரண்டு நிறுவனங்களுக்கு, ௨௫௦ கி.மீ.,க்கு கேபிள் பதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு கி.மீ.,க்கு கேபிள் பதிக்கப்படுகிறது என, பிரித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு ஆண்டுக்கு ஒரு கி.மீ.,க்கு ௬,௩௦௦ ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் தவறு இருந்தால், ஆய்வு செய்து,
நடவடிக்கை எடுக்கப்படும், அனுமதியின்றி பதிக்கப்பட்ட கேபிள் துண்டிக்கப்படும்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X