முஸ்லிம் தொழிலதிபர்கள் மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்பு

Added : பிப் 08, 2014 | கருத்துகள் (44)
Share
Advertisement
ஆமதாபாத்: ''எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என, விரும்புகின்றன. ஆனால், பா.ஜ., மட்டும் தான், மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என விரும்புகிறது,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி கூறினார்.சம உரிமை கொண்ட சமுதாயம்:குஜராத்தின், ஆமதாபாத் நகரில், முஸ்லிம் தொழில் துறையினர் ஏற்பாடு செய்துள்ள, மூன்று நாள் கண்காட்சி மற்றும்
Narendra Modi,r equality-centric growth model,Muslim business meet,முஸ்லிம் தொழிலதிபர்கள்,குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்பு

ஆமதாபாத்: ''எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என, விரும்புகின்றன. ஆனால், பா.ஜ., மட்டும் தான், மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என விரும்புகிறது,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி கூறினார்.


சம உரிமை கொண்ட சமுதாயம்:


குஜராத்தின், ஆமதாபாத் நகரில், முஸ்லிம் தொழில் துறையினர் ஏற்பாடு செய்துள்ள, மூன்று நாள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை, முதல்வர், நரேந்திர மோடி நேற்று, துவக்கி வைத்து, மேலும் பேசியதாவது:ஆரோக்கியமான சமுதாயத்தை படைப்பதே, எங்கள் லட்சியம். அனைத்து சமுதாயங்களும் இணைந்த, சம உரிமை கொண்ட சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான், எங்கள் குறிக்கோள். எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதை, நாங்கள் பார்ப்பதில்லை. அனைத்து சமுதாயங்களுக்கும் பாதுகாப்பு, சம உரிமை, முன்னேற்றம், செயல்பாடு ஆகிய, இந்த நான்கு அம்சங்கள் தான், குஜராத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றன.


ஏராளமான திறமைகள் உள்ளன:


முஸ்லிம் இளைஞர்களிடம், ஏராளமான திறமைகள் உள்ளன. தொழில் மற்றும் வர்த்தகத்தில், முஸ்லிம் பெண்களும் ஈடுபட வேண்டும்; மாநிலத்தை முன்னேற்ற வேண்டும். வேலை தேடுபவர்களாக இருப்பதற்குப் பதில், வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். எந்தத் துறையில், முஸ்லிம் இளைஞர்களுக்கு திறமை இருக்கிறதோ, அதில் அவர்களை முன்னேற்ற தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, பட்டம் தயாரித்தல், ஜவுளி போன்ற துறைகளில், முஸ்லிம்கள் தங்கள் திறமையை காட்டி வருகின்றனர்.மேலும், குறைந்த விலையில் வீடுகள் கட்டும் திட்டத்தில், அதிக அளவில் முஸ்லிம்கள் ஈடுபட வேண்டும். இவ்வாறு, மோடி பேசினார்.

இந்த கண்காட்சியில், ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், கைவினைப் பொருட்கள் என, பல துறைகளின் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
modism - sg  ( Posted via: Dinamalar Android App )
09-பிப்-201400:38:56 IST Report Abuse
modism @faith ooreen அதை அப்படியே தலிபான் மற்றும் அல் கொய்தா நண்பர்களுக்கு சொன்னீர்கள் என்றால் புண்ணியமா போகும்
Rate this:
Cancel
Murali P - Tamilnadu, India,இந்தியா
08-பிப்-201415:59:12 IST Report Abuse
Murali P முஸ்லிம்களும் நம் நாட்டின் நம் சகோதரர்கள், இவர்களை மதத்தாலோ பிரிக்ககூடாது .........மோடி அந்த நிலையில் தான் இருக்கிறார் என்பதை இதன் மூலமாகவும் தெரிய வருகிறது
Rate this:
Cancel
இந்தியன் - bandora,அன்டோரா
08-பிப்-201415:42:52 IST Report Abuse
இந்தியன் கசாப்பு கடைக்காரன் வீட்டு தோட்டத்தில் மேயும் ஆடுகள் இவர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X