கேப்டன் உறவே வேண்டாம்: தி.மு.க., மாவட்ட செயலர்கள் கடுப்பு| DMK district secretaries oppose DMDK alliance | Dinamalar

'கேப்டன் உறவே வேண்டாம்': தி.மு.க., மாவட்ட செயலர்கள் கடுப்பு

Added : பிப் 08, 2014 | கருத்துகள் (57)
Share
'தி.மு.க.,வின் கூட்டணி அழைப்பை உதாசீனப்படுத்தி வரும், தே.மு.தி.க.,வுடன், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தத் தேவையில்லை. அவரின் கூட்டணி உறவே வேண்டாம்' என, தி.மு.க.,வில், 16 மாவட்ட செயலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.தி.மு.க., கூட்டணியில் சேர்வதற்கு, விஜயகாந்தின் தே.மு.தி.க.,வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கருணாநிதியும், ஸ்டாலினும் வெளிப்படையாக விடுத்த அழைப்புக்கு,
கேப்டன் உறவே வேண்டாம், தி.மு.க., மாவட்ட செயலர்கள் கடுப்பு

'தி.மு.க.,வின் கூட்டணி அழைப்பை உதாசீனப்படுத்தி வரும், தே.மு.தி.க.,வுடன், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தத் தேவையில்லை. அவரின் கூட்டணி உறவே வேண்டாம்' என, தி.மு.க.,வில், 16 மாவட்ட செயலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தி.மு.க., கூட்டணியில் சேர்வதற்கு, விஜயகாந்தின் தே.மு.தி.க.,வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கருணாநிதியும், ஸ்டாலினும் வெளிப்படையாக விடுத்த அழைப்புக்கு, விஜயகாந்திடம் இருந்து, இதுவரை எந்த பதிலும் வரவில்லை. 'பரிசீலிக்கிறோம்' எனக் கூட, அவர் வாய் திறந்து சொல்லவில்லை.அதற்கு மாறாக, தே.மு.தி.க., பொதுக்குழுவிலும், மாநாட்டிலும், அழைப்பு விடுத்த, தி.மு.க.,வையே, தே.மு.தி.க.,வினர் விமர்சித்துப் பேசியுள்ளனர். இதனால், கடும் கோபம் அடைந்துள்ள, தி.மு.க., முன்னணி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்கள், தே.மு.தி.க., கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:தமிழகத்தில், தே.மு.தி.க.,வை விட, பல மடங்கு பெரிய கட்சி, தி.மு.க., அப்படியிருக்கும்போது, எதற்காக நாம் இறங்கிப் போக வேண்டும். தனித்து நிற்கும் அளவுக்கு, தொண்டர்கள் பலமும், மக்கள் ஆதரவும் பெற்றுள்ள கட்சியாக இருந்து கொண்டு, தொடர்ந்து உதாசீனப்படுத்தும் தே.மு.தி.க.,விடம், கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டுமா?அதனால், தே.மு.தி.க.,விடம் இனிமேலும் கூட்டணி பற்றி பேச வேண்டாம் என, தலைமையிடத்தில் வலியுறுத்தி உள்ளோம். பொன்முடி, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட, 16 மாவட்ட செயலர்கள், இந்த கருத்தை ஆதரித்து, தலைவரிடம் தெரிவித்து உள்ளனர்.அதை கருணாநிதியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.அதனால், தே.மு.தி.க.,வுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சு நடத்தப்பட மாட்டாது; அவர்களாக வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என, கருணாநிதி கூறிவிட்டார். அதேநேரத்தில், தே.மு.தி.க., எந்த அணிக்கு போகிறது என்பது தெரியும் வரையில், அக்கட்சியை பற்றி எந்த விமர்சனமும் செய்ய வேண்டாம் என்றும், தடை விதித்துள்ளார்.அதன் காரணமாகவே, உளுந்தூர்பேட்டை தே.மு.தி.க., மாநாட்டில், பிரேமலதா பேசிய பேச்சுக்கு, தி.மு.க.,வில் இருந்து எந்த பதிலும் தரப்படவில்லை. இவ்வாறு, தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.
.
.- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X