பொது செய்தி

தமிழ்நாடு

செங்கல்பட்டு- விழுப்புரம் இரட்டை பாதை: மார்ச் 2015க்கு மேல் ரயில்கள் இயங்க வாய்ப்பு

Updated : பிப் 10, 2014 | Added : பிப் 10, 2014 | கருத்துகள் (21)
Advertisement
செங்கல்பட்டு- விழுப்புரம் இரட்டை பாதை: மார்ச் 2015க்கு மேல் ரயில்கள் இயங்க வாய்ப்பு

செங்கல்பட்டு - விழுப்புரம் இரட்டை வழி ரயில் பாதை பணிகள், 80 சதவீத அளவில் முடியும் நிலையில் உள்ளன. மீதமுள்ள பணி முடிந்து, 2015 மார்ச்சுக்குப் பின், இந்த மார்க்கத்தில் ரயில்கள் இயக்க வாய்ப்பு உள்ளது.

தெற்கு ரயில்வே பிரதான பாதையாக உள்ள திருச்சி மார்க்கத்தில், சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை, இருவழிப் பாதையில், ரயில்கள் இயக்கப்படுகின்றன. செங்கல்பட்டிலிருந்து ஒரு வழிப்பாதை தான் உள்ளது.அதிகரித்து வரும் போக்கு வரத்து தேவையைக் கருத்தில் கொண்டு, முதல்கட்டமாக, செங்கல்பட்டில் இருந்து விழுப்புரம் வரை, இரட்டை ரயில்பாதையும், இரண்டாம் கட்டமாக, விழுப்புரத்தில்இருந்து, திண்டுக்கல் வரையும் பாதை அமைக்க, ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.செங்கல்பட்டு -- விழுப்புரம் வரை, இரட்டை ரயில் பாதை, 2009ல், 700 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டது. 102 கி.மீ., தூரமுள்ள இந்தப் பாதையில், செங்கல்பட்டு அடுத்த பாலாற்றில், மேம்பாலம் கட்டும் பணியே முக்கியமானது. ஐந்து ஆண்டுகள் கடந்தும், 80 சதவீத பணிகளே தற்போது முடிந்துள்ளன.இதில், மதுராந்தகம் -- தொழுப்பேடு வரை, 22 கி.மீ., மற்றும் பேரணி துவங்கி, விழுப்புரம் வரை, 20 கி.மீ., சேர்த்து, 42 கி.மீ., தூரம் பணிகள் முடிந்து, ரயில்கள் இயக்கப்படுகின்றன. மீதமுள்ள, 60 கி.மீ., தூரத்திற்குப் பணிகள் நடக்கின்றன.இதில், செங்கல்பட்டு -- மதுராந்தகம் வரையுள்ள, 22 கி.மீ., தூரத்திற்கும், தொழுப்பேடு, -பேரணி வரை, 38 கி.மீ., தூரத்திற்குப் பணிகள் முடியவில்லை.


பாலங்கள்:

செங்கல்பட்டு- - விழுப்புரம் இடையே, 17 உயர்மட்ட பாலங்கள் உள்ளன. இவற்றில், 12 பாலப் பணிகள் முழுவதும் முடிந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மிகப் பெரிய, 700 மீட்டர் நீளமுள்ள பாலாறு உள்ளிட்ட, ஏழு இடங்களில், பாலப் பணிகள் வேகமாக நடக்கின்றன.பாலாற்றின் மீது, பாலம் கட்டி முடிந்து, இருபுறமும் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாலத்தின் இருபுறமும், பழைய ரயில் பாதை உயரத்திற்கு இணையாக, மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தண்டவாள இடைக்கட்டைகள் தயார் நிலையில் உள்ளன.


நிலுவை பணி:

செங்கல்பட்டு - ஒத்தி வாக்கம் இடையே, தண்டவாளம் பொருத்தப்பட்டுள்ளது. ஒத்திவாக்கத்தில் ரயில் நிலைய பணிகள் முடியவில்லை. இங்கு, பழைய அலுவலக கட்டடத்தை இடித்து அகற்றிய பின், புதிய பாதை அமைக்கப்படும். ஒத்திவாக்கத்திலிருந்து படாளம் வரை, தண்டவாளம் பொருத்தும் பணி முடியவில்லை.கருங்குழியிலிருந்து படாளம் வரை, 2 கி.மீ., தூரத்திற்கு தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் இன்னும், ஜல்லிகள் நிரப்பப்படவில்லை. கருங்குழியிலிருந்து மதுராந்தகம் வரை, 3 கி.மீ., தூரத்திற்கு, தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியிலும் ஜல்லிகள் நிரப்பப்படவில்லை. மதுராந்தகத்திலிருந்து தொழுப்பேடு வரை பணி கள் முடிந்து, ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொழுப்பேடு -- ஒலக்கூர் வரை, தண்டவாளங்கள் பொருத்துகின்றனர். ஒலக்கூரிலிருந்து திண்டிவனம் வரை தண்டவாளம் அமைத்து, ஜல்லி கள் நிரப்பியுள்ளனர்; அதை பரப்பும் பணி, நிலுவையில் உள்ளது.


அதிகாரி கருத்து:

அதே போல் திண்டிவனத்திலிருந்து, பேரணி வரை பணிகள் முடியவில்லை. திண்டிவனம் மற்றும் ஒலக்கூர் ரயில் நிலையங்களில் கட்டுமானப் பணி, 70 சதவீதம் வரை முடிந்துள்ளது.ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:செங்கல்பட்டு- - விழுப்புரம் இருவழிப்பாதை பணியில், 80 சதவீதம் முடிந்துள்ளது. நடக்கும் பணிகள் அனைத்தும், வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் முடியும். அதிக மழை பெய்தால், பணிகளில் தொய்வு ஏற்படும். இருப்பினும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து உள்ளோம்.இத்திட்டத்திற்குத் தேவையான நிதி உள்ளது. தேவை ஏற்பட்டால், பிற பணிகளுக்கு ஒதுக்கிய நிதியை இதற்குப் பயன்படுத்தி, பணிகள் முடிக்கப்படும். விழுப்புரத்திலிருந்து திண்டிவனம் வரை, இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி, வரும் மார்ச் மாதத்திற்குள் முடிந்து, ரயில்கள் இயக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

'செங்கல்பட்டு -- விழுப்புரம் மார்க்கத்தில், 20 சதவீதம் பணிகள் மீதமுள்ளன. போதிய நிதி பற்றாக்குறை காரணமாக, பணிகள் மந்தமாக நடக்கின்றன. தேவை ஏற்பட்டால், பிற இடங்களுக்கு ஒதுக்கும் நிதியை, இதற்கு ஒதுக்கீடு செய்வோம்' என, அதிகாரிகள் தரப்பில் கூறினாலும், பற்றாக்குறை உள்ளது.


பணிகள் முடியுமா?:


லோக்சபா தேர்தல் நடக்க இருப்பதால், புதிய நிதி ஒதுக்கீடு இருக்காது. புதிய ஆட்சி அமைந்து, ஜூன் அல்லது ஜூலை மாதத்தில், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய பின், பணிகள் விரைவாக நடக்க வாய்ப்பு உள்ளது. ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை, மழை வாய்ப்பு இருப்பதால், அந்த மாதங்களில் பணிகள் மந்தமாகவே நடக்கும்.இதனால் வரும், 2015ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், மொத்த பணிகள் முடிந்து, ஆய்விற்கு பின், மார்ச் மாதத்திற்குப் பின், ரயில்கள் இயக்க வாய்ப்பு உள்ளது.


பணி முடிந்தது எவ்வளவு?


'செங்கல்பட்டு - விழுப்புரம் இரண்டாவது அகல ரயில் பாதை அமைக்கும் பணி, வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும். ஜூன் மாதத்திலிருந்து, ரயில் போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட திட்டம் உள்ளது' என, ரயில்வே உயர் அதிகாரி தெரிவித்து உள்ளார்.இப்பாதை பணிகள் குறித்து, அகல ரயில் பாதை திட்டப் பிரிவு உயர் அதிகாரி தெரிவித்துள்ளதாவது:செங்கல்பட்டு - விழுப்புரம் இடையே, 103 துாரம் பாதையில், எட்டு பிரிவுகளாக பணிகள் நடந்து வந்தன. இதில், 75 கி.மீ., துாரம் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள, 28 கி.மீ., துாரம் பாதை, வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட்டுவிடும். இப்பாதையில் வரும், ஜூன் மாதம் பயணிகள் ரயில் போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட திட்டமிடப்பட்டு உள்ளது.விழுப்புரம் - திண்டுக்கல் இடையே, 273 கி.மீ., துாரம் பாதை, ஆயிரத்து 250 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது. இதில், அரியலுார் - வாலாடி உட்பட, ஒன்பது கட்டங்களாக இப்பணி நடந்து வருகின்றன. இதில், 240 கி.மீ., துாரம், புதிய பாதை அமைக்கப்படுவதற்கு, ஆய்வு செய்யப்பட்டு, அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அதிகாரி தெரிவித்தார்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shahul Hameed - Jeddah,சவுதி அரேபியா
10-பிப்-201423:15:50 IST Report Abuse
Shahul Hameed செங்கல்பட்டு- விழுப்புரம் இரட்டை பாதை: மார்ச் 2015க்கு மேல் ரயில்கள் இயங்க வாய்ப்பு - ஏன் அவசரம் 2025 - 2050 வருடங்களும் இருக்கிறது அப்போதும் மார்ச் மாதம் வரும்.
Rate this:
Share this comment
Cancel
SEETHARAMAN - chennai,இந்தியா
10-பிப்-201420:03:42 IST Report Abuse
SEETHARAMAN கடந்த 20 ஆண்டுகளாக ரயில்வே அமைச்சர்கள் வட இந்தியர்கள் உயர் அதிகாரிகளில் பெரும்பான்மையோர் வடஇந்தியர்கள் தென்னகம், குறிப்பாக தமிழகம் பெற வேண்டிய பாதை வளர்ச்சி நிதிகள் வடக்கிற்கு திருப்பப்பட்டன. ஆனால் , 20 ஆண்டுகளில் 3 மற்றும் 4 ம் நிலைப் பணிகளில் வட இந்தியர்கள் மட்டுமே பல ஆயிரம்பேர் அமர்த்தப் பட்டார்கள். தமிழகம் பாதை விரிவாக்கம் இழந்தது தமிழக மண்ணின் மைந்தர்கள் தென். ரயில்வேயில் தாமே பெற்றிருக்க வேண்டிய வேலைகளை இழந்தனர். இதில் வேதனை என்னவென்றால், மத்திய ஆட்சியில் பங்குபெற்ற , பங்குபெறாத தமிழகக் கட்சிகளின் தலைவர்கள் எவரும் குரல் எழுப்பாமல் மௌனமாய் இருந்தனர். பாவம், அவர்களுக்கு எத்தனையோ வேலைகள் , தமிழகம் எக்கேடு கேட்டால் என்ன?
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
10-பிப்-201418:35:00 IST Report Abuse
Subburamu Krishnaswamy Very poor development works in Tamil Nadu railways net work. It will take another 25 to 30 years if the p[resent tr continues. Tamil Nadu politicians are worst beggars of vote bank politics, they never work for development of the state.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X