காங்., அல்லாத ஆட்சியே எங்கள் கொள்கைதேவர் நினைவிடத்தில் முழங்கிய ஜெயலலிதா

Added : பிப் 10, 2014 | கருத்துகள் (29)
Share
Advertisement
'காங்கிரஸ் அல்லாத ஆட்சியே, முத்துராமலிங்க தேவரின் முக்கிய கொள்கையாக இருந்தது; அதுவே, அ.தி.மு.க.,வின் கொள்கை. தேவரின் கொள்கைகளை, வென்றெடுக்கும் காலம், வெகுதூரத்தில் இல்லை,'' என, பசும்பொன். முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், முதல்வர், ஜெயலலிதா பேசினார்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில், முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. 2010, அக்டோபர், 30ல் நடந்த,
 காங்., அல்லாத ஆட்சியே எங்கள் கொள்கைதேவர் நினைவிடத்தில் முழங்கிய ஜெயலலிதா

'காங்கிரஸ் அல்லாத ஆட்சியே, முத்துராமலிங்க தேவரின் முக்கிய கொள்கையாக இருந்தது; அதுவே, அ.தி.மு.க.,வின் கொள்கை. தேவரின் கொள்கைகளை, வென்றெடுக்கும் காலம், வெகுதூரத்தில் இல்லை,'' என, பசும்பொன். முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், முதல்வர், ஜெயலலிதா பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில், முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. 2010, அக்டோபர், 30ல் நடந்த, ஜெயந்தி விழாவிற்கு, ஜெ., வந்த போது, தேவர் சிலைக்கு, தங்கக் கவசம் அணிவிப்பதாக அறிவித்தார். அதன்படி, நேற்று, நினைவிடத்திற்கு வந்த, முதல்வர் ஜெ., தேவர் சிலைக்கு, தங்கக் கவசம் அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


லட்சியம்:


பின், அவர் பேசியதாவது:இன்று (நேற்று), முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, 13 கிலோ தங்கக் கவசத்தை, அ.தி.மு.க., சார்பில், அணிவித்ததில், மகிழ்ச்சி அடைகிறேன். தேசியத்தையும், தெய்வீகத்தையும், இரு கண்களாக கொண்டு செயல்பட்ட தேவர்; நாட்டின் சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டவர். ஏகாதிபத்திய எதிர்ப்பு, காங்., அல்லாத ஆட்சி ஆகியவை, அவருடைய கொள்கைகள்.இக்கொள்கைகளையே, நாங்கள் பின்பற்றி வருகிறோம். மக்கள் ஆதரவுடன், தேவரின் கொள்கைகளை வென்றெடுக்க வேண்டிய காலம், வெகு தூரத்தில் இல்லை. அதற்கான காலம், கனிந்து விட்டது. அந்த லட்சியத்தை அடைய, என்றென்றும் நீங்கள், துணை நிற்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.


ஏழு நிமிடங்கள் பேச்சு:


மதுரையிலிருந்து, ஹெலிகாப்டர் மூலம் மதியம், 1:05 மணிக்கு, கிளம்பிய ஜெயலலிதா, 1:30 மணிக்கு, பசும்பொன் வந்தார். 'ஹெலிபேடில்' இருந்து, கார் மூலம், தேவர் நினைவிடத்திற்கு சென்றார்.தேவர் நினைவிடத்திற்கு, முதல்வர் ஜெ., வந்த போது, நினைவிட பொறுப்பாளர், காந்தி மீனாள், கோவை காமாட்சி புரி ஆதீனம் ஆகியோர் வரவேற்றனர். தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட, 13 கிலோ, தங்கக் கவசத்தின் மதிப்பு, 4.5 கோடி ரூபாய். அங்கிருந்து வெளியே வந்த பின், மேடையில், ஏழு நிமிடங்கள் பேசினார்.மதியம், 1:45 மணிக்கு, ஹெலிகாப்டர் மூலம், மதுரை புறப்பட்டு சென்றார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu Selvam - madurai ,இந்தியா
11-பிப்-201415:37:38 IST Report Abuse
Muthu Selvam கடைசியில் ஓட்டுக்காக இந்த அரசு எடுத்திருக்கும் ஆயுதம் ஜாதிய அஸ்திரம்
Rate this:
Cancel
Muthu Selvam - madurai ,இந்தியா
11-பிப்-201415:35:37 IST Report Abuse
Muthu Selvam இனிமே இது அதிமுக இல்லை அதிதேமுக ( அனைத்து இந்திய தேவர் முன்னேற்ற கழகம் )
Rate this:
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
10-பிப்-201407:41:15 IST Report Abuse
தங்கை ராஜா சாதீய வோட்டுகளுக்காக படையெடுக்கும் நிலையில் தான் ஜெயாவின் ஆட்சி சாதனை. இதெல்லாம் இந்த முறை கைகொடுக்காது என்பது தேர்தல் முடிவு வரும் போது தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X