'ஆம்,நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்'- இளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜா

Added : பிப் 10, 2014 | கருத்துகள் (452) | |
Advertisement
சென்னை: பிரபல இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா, விரைவில் முஸ்லிம் மதத்தில் இணையவிருப்பதாக அவரது நண்பர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது. இவர் முஸ்லிம் மதத்தில் சேர்ந்து விட்டார் என கடந்த ஒரு வருட காலமாக அரசல், புரசலாக பேசப்பட்டு வந்தது. இதனை உறுதி செய்யும் வகையில், யுவன் தனது டுவிட்டரில், ஆம் நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன் என அவரே இன்று உறுதி செய்துள்ளார்.
' ஆம்., நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்'- இளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜா

சென்னை: பிரபல இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா, விரைவில் முஸ்லிம் மதத்தில் இணையவிருப்பதாக அவரது நண்பர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது. இவர் முஸ்லிம் மதத்தில் சேர்ந்து விட்டார் என கடந்த ஒரு வருட காலமாக அரசல், புரசலாக பேசப்பட்டு வந்தது.


இதனை உறுதி செய்யும் வகையில், யுவன் தனது டுவிட்டரில், ஆம் நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன் என அவரே இன்று உறுதி செய்துள்ளார். இதனையடுத்து இவரது பெயரும் மாற்றம் பெறும் என தெரிகிறது.


இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டரில் , கூறியிருப்பதாவது: மீண்டும் 3 வது முறை திருமணம் செய்யும் எண்ணம் எனக்கில்லை. இது போலியான செய்தி. " ஆம்., நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்” இதனால் நான் பெருமை கொள்கிறேன். எனது இந்த முடிவினால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், குறிப்பாக எனது தந்தைக்கும் இடையே எந்த வொரு கருத்து வேறுபாடும் இல்லை . எனது குடும்பத்தினர் ஆதரவு அளித்துள்ளனர். அல்ஹம்துலில்லா ! ( இறைவனுக்கு நன்றி !) இவ்வாறு யுவன்சங்கர் ராஜா கூறியுள்ளார்.


சமீப காலமாக யுவன்சங்கர் ராஜா, இஸ்லாமில் சேர்ந்து விட்டதாக பேசப்பட்டது. ஆனால் இவர் இது குறித்து எந்தவொரு பதிலும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் இவர் தனது டுவிட்டரில் இஸ்லாமில் சேர்ந்ததை உறுதி செய்துள்ளார். இது இவரது தனிப்பட்ட விருப்பம் என்பதால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அவரது நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.


Advertisement
வாசகர் கருத்து (452)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Durai - dallas,யூ.எஸ்.ஏ
26-மார்-201517:09:48 IST Report Abuse
Durai மதங்கள் மனிதனை நல்வழியில் கொண்டு செல்லத் தானே உள்ளன. நம் இசைஞானி இதனை புரிந்து ஏற்றுக்கொண்டுள்ளார். அவரின் மரியாதைக்கு நாமும் யுவனை வாழ்த்துவோம். யுவன், உங்களின் நல்ல இசை தான் எங்களுக்குத் தேவை,
Rate this:
Cancel
Arumugam - Paris,பிரான்ஸ்
12-பிப்-201414:24:47 IST Report Abuse
Arumugam ஒழுக்கமில்லாதவன் எத்தனை மனைவிகளை மணந்தாலும் நிம்மதியாக வாழ முடியாது. மதம் ஒரு மாற்று மருந்தல்ல.
Rate this:
Cancel
Sulaiman Badsha - Muscat,ஓமன்
11-பிப்-201423:38:17 IST Report Abuse
Sulaiman Badsha காசுக்காக மதம் மாறினார் இளையராஜாவிடம் இல்லாதது யுவனால் சம்பாரிக்க முடியாதா இந்த மத மாற்றம் தரப்போகிறது, மூன்றாம் திருமணம் செய்வதற்காகத்தான் இந்த மத மாற்றம் மூன்றாம் திருமணம் செய்ய வேண்டுமெனில் மதம் மாரிதான் செய்ய வேண்டுமா என்ன ????????? அதுவும் சினிமா துறையில் இருக்கும் ஒருவருக்கு பெண் ..................... ஹிந்தி திரைப்பட உலகில் வாய்ப்பு பெறுவதற்காகதான் அப்போ ஹிந்தி திரை உலகில் வாய்ப்பு பெறுவதற்கு மத அங்கீகாரம் ஒன்று போதும் என்பதா உங்கள் வாதம்????????? ஆஸ்கார் அவருக்கு கிடைக்கும்னு மாறிட்டாரு காமெடியா இருக்கு ஆஸ்கார் கிடக்கா இதுதான் தகுதியா நீங்க சொல்லிட்டீங்க அவருக்கு என்ன என்ன கிடைக்கும்னு நான் சொல்றேன் கேளுங்க நீ போன மதம் வன்முறையை போதிக்கும் மதம்னு தூற்றப்படும் அவர் பெயரை கேட்டவுடன் ( மாற்றினால் ) தீவிரவாதியாக பார்க்கப்படுவார், பன்னாட்டு விமான நிலையங்களில் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்படுவார், இந்த மத மாற்றத்தை விரும்பாத உறவினர்களும் நண்பர்களும் இவரை ஒதுக்கி வைப்பார்கள், இத்தனையும் தெரிந்து அவர் மாறி இருக்காருன்னா கொஞ்சம் புரிஞ்சுக்குங்க அவர் மாறிய மதத்துக்கு மரியாதை தரலென்னாலும் இத்தனையும் தெரிஞ்சு மாறி இருக்கானப்பான்னு அவருக்காவது மரியாதை கொடுங்க அதுவும் இல்லன்னா அவருக்கு சிறந்த நேரான இறைவனை( உங்கள் பார்வையில் எதோ ) காண கடவுளிடம் பிரார்த்தியுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X