பொது செய்தி

தமிழ்நாடு

இஸ்லாமுக்கு மதம் மாறியது ஏன் ? யுவன்சங்கர்ராஜா குறித்து புதிய தகவல்

Added : பிப் 10, 2014 | கருத்துகள் (272)
Advertisement
இஸ்லாமுக்கு மதம் மாறியது ஏன் ? யுவன்சங்கர்ராஜா குறித்து புதிய தகவல்

சென்னை: இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறியது தொடர்பாக பல்வேறு புதிய தகல்கள் கிடைத்துள்ளன. இளையராஜா, சகோதர , சகோதரிகள் மற்றும் சினிமா துறை நண்பர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தும் இந்த முடிவில் இருந்து அவர் பின்வாங்க மறுத்து விட்டார் என்றும் சென்னை வட்டாரம் தெரிவிக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மானை போன்று பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் 2வது மகன் யுவன் ஷங்கர் ராஜா, இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதனை அவரே, ஆம் நான் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். 'அரவிந்தன்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் ஷங்கர் ராஜா, தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். சமீபத்தில் அவர் இசையமைப்பில் வெளிவந்த 'பிரியாணி' படம் தான் அவரது 100வது படமாகும். அப்பாவை போன்று இவரும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார்.

இந்நிலையில் முதல் மனைவியுடன் விவாகரத்து, பிறகு அம்மாவின் மரணம், இரண்டாவது மனைவியுடன் மனக்கசப்பு என்று ஏகப்பட்ட மனக்குழப்பத்தில் இருந்தார் யுவன். இதற்கிடையே அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக ஏற்கனவே தவகல்கள் வெளியான நிலையில் இப்போது அவரே தான் மதம் மாறியதை உறுதி செய்துள்ளார்.


இதுகுறித்து யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டரில் , கூறியிருப்பதாவது: நான் இஸ்லாமை பின்பற்றுகிறேன்” இதனால் நான் பெருமை கொள்கிறேன். எனது இந்த முடிவினால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், குறிப்பாக எனது தந்தைக்கும் இடையே எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை . எனது குடும்பத்தினர் ஆதரவு அளித்துள்ளனர். அல்ஹம்துலில்லா ! ( இறைவனுக்கு நன்றி !) இவ்வாறு யுவன்சங்கர் ராஜா கூறியுள்ளார்.
கசந்த இல்லற வாழ்வு:

யுவன் மதம் மாறிய பின்னணி பற்றி அவரது நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது நமக்கு கிடைத்த சில தகவல்கள் இதோ...

சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் இல்லற வாழ்வு யுவனுக்கு சோகமாக அமைந்தது என்று தான் கூற வேண்டும். 2005ம் ஆண்டு தனது நீண்டகால தோழியான சுஜாயா என்ற பெண்ணை மணந்து கொண்டார் யுவன். ஆனால் இந்த வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் தான் நீடித்தது. 2007ம் ஆண்டே இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பிறகு 2011ம் ஆண்டு ஷில்பா என்ற பெண்ணை மணந்து கொண்டார். இவர்களது திருமண வாழ்வு நன்றாக சென்று கொண்டு இருந்தது. இப்போது அந்த திருமண உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப்பெண் இப்போது தனது அம்மாவுடன் லண்டன் சென்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே யுவனின் தாயாரும் மரணம் அடைய, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் சினிமாவில் கூட முன்பு போல் அவரால் சரியாக பாடல்களை கூட கொடுக்க முடியாமல் போனது.

3வது திருமணத்திற்காக மதம் மாற்றம்? இந்த நிலையில் யுவன், சமீபத்தில் சிங்கப்பூரிலோ, மலேசியாவிலோ ஒரு பெரிய பணக்கார இஸ்லாம் வீட்டை பெண்ணை பார்த்ததாகவும், அவர்கள் இருவருக்கும் பிடித்து போக, திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், மூன்றாவது திருமணம் செய்யபோகும் பெண்ணிற்காகத்தான் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.


வீட்டில் எதிர்ப்பு! யுவனின் இந்த செயலுக்கு அவரது அப்பா இசைஞானி இளையராஜா, அவரது சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள், சினிமா மற்றும் பிறதுறை நண்பர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நமக்கும், நமது குடும்பத்திற்கு இது சரிப்பட்டு வராது என்று எவ்வளவோ சொல்லியும் யுவன் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்துள்ளார்.


இளையராஜா வெளியேற்றம்? எவ்வளவு சொல்லியும் யுவன் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்ததால் ஒருகட்டத்தில் இளையராஜா வெறுப்படைந்து தி.நகரில் உள்ள தனது சொந்த வீட்டை விட்டு வெளியேறி சிலகாலம் தனது மூத்தமகன் கார்த்திக் ராஜாவின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். பிறகு யுவன் வந்து பேச, தான் மட்டும் வரமாட்டேன் என்று சொல்லி கார்த்திக்கையும் தன்னோடு அழைத்து வந்து பிறகு எல்லோரும் தற்போது ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.


இதேப்போன்று இளையராஜா ஒவ்வொரு முறையும் தனது வீட்டில் கொலு வைத்து பிரபல பின்னணி பாடகர்களை எல்லாம் அழைத்து தன் வீட்டில் பாட வைப்பார். ஆனால் சென்றாண்டு கொலு நடத்த கூடாது என்று யுவன் தெரிவித்துள்ளார். பின்பு கொலுவை தவிர்க்கும் நோக்கோடு அவசரமாக மும்பை கிளம்பி சென்றுள்ளார். ஆனால் இளையராஜா போனில் சத்தம் போட பிறகு அவசரஅவசரமாக மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.


குரான் பரிசளித்த அமீர்? ; யுவன் மதம் மாறிய பின்னர், அவருக்கு இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை பிரபல இயக்குநர் அமீர் பரிசளித்துள்ளதாகவும், தற்போது அந்த குரானை தான் யுவன் தினமும் படித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. யுவன் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாகவே இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருகிறாராம். அவர்கள் மத வழக்கப்படி தினமும் 5 வேளை தொழுகை செய்தவதையும் கடைபிடித்து வருகிறாராம்.

Advertisement
வாசகர் கருத்து (272)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - delhi,இந்தியா
11-பிப்-201420:36:01 IST Report Abuse
Krish ஹரியானா முன்னாள் காங்கிரஸ் தலைவர் பஜன்லால் மகன் இப்படித்தான்..... ஹரியானாவின் துணை முதல்வராக இருந்த அவர் ஒரு முஸ்லிம் பெண் வக்கீலை திருமணம் செய்து கொள்ள முஸ்லிமாக மாறினார்....அதனால் தனது பதவியை இழந்தார்...சில காலம் கழித்து அந்த முஸ்லிம் பெண்ணை பிரிந்தார்...சமிபத்தில் கணவரை பிரிந்த அந்த முஸ்லிம் வக்கீல் தற்கொலை செய்து கொண்டார்...
Rate this:
Share this comment
Cancel
vhp - Pondi,இந்தியா
11-பிப்-201414:55:02 IST Report Abuse
vhp அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால், நபியே உமக்கு உதவி செய்து விட்டதாகக் கருதுகிறார்கள் "நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதை எனக்கு செய்த உபகாரமாகக் கருதாதீர்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வே நம்பிக்கைக் கொள்ள உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு உபகாரம் புரிந்துள்ளான்" என்று கூறுவீராக குர்ஆன் : 49:17 ஆம். இதைத்தான் யுவன் சங்கர் ராஜாவும் 'இறைவன் என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டான்' என்று அழகாக தனது பேட்டியில் சொல்லியுள்ளார். இந்த குர்ஆன் வசனத்தின்படி ஏ ஆர் ரஹ்மானோ, யுவன் சங்கர் ராஜாவோ, மைக்கேல் ஜாக்ஸனோ யார் இஸ்லாத்திற்குள் வந்தாலும் அதனால் இஸ்லாம் எந்த வகையிலும் நன்மையை அடையப் போவதில்லை. மாறாக மாறிய அந்த நபர்கள் சிறந்த வாழ்வு முறையை பெற்றுக் கொள்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
R.சுதாகர் - Jeddah,சவுதி அரேபியா
11-பிப்-201414:05:06 IST Report Abuse
R.சுதாகர் இது அவரது சொந்த முடிவு தான்... யாரும் இல்லை என்று சொல்லவில்லை. யாரோ ஒரு பரிச்சயமில்லாதவர் இந்த முடிவை எடுத்திருந்தால் இங்கே ஒருவரும் அவரை ஒரு பொருட்டாக மதித்திருக்க மாட்டார்கள். ஒரு அந்தஸ்த்தில் / பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் அர்த்தம் நிறைந்ததாகவும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் புரிந்துகொள்ளப்படும். இதுவே அவரைச் சேர்ந்தவர்கள் கூட அவரைச் சாடுவதற்கு காரணம். இசையில் வேண்டுமானால் அவர் திறமை பெற்றவராக இருக்கலாம். அதற்காக அவர் நன்கு சிந்திக்கத் தெரிந்தவர் என்று அர்த்தமில்லை. இரண்டாவது பெண்ணிடமும் தன் வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்ள முடியாதவரால் எப்படி நிதர்சனமாக சிந்திக்க முடியும் என்பதே நம் கேள்வி. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போன்ற ஒரு குழப்ப நிலையில் இருப்பவரிடம் பைபிளை கொடுத்திருந்தால் அவர் கிறித்துவத்துக்கு மாறி இருக்கப் போகிறார்... எனவே, இது ஏதோ அனைத்து மார்க்கங்களையும் கற்றுத் தேர்ந்து இறுதி முடிவாக மற்ற மதத்துக்கு மாற முடிவெடுத்தார் என்பதெல்லாம் இல்லை. - வசியம் செய்யும் தன்மை எல்லா மத நூல்களுக்கும் உண்டு. தொலைக்காட்சியில் அரசியல் விவாதங்களைப் பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் கடைசியில் பேசியவர் சொல்வது தான் சரி என்பது போலத் தோன்றும். அதே போல யார் சரியான தருணத்தில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு சாதகமாக நிகழ்வுகள் அரங்கேறும். கிறித்துவ மிஷன்கள் பல இதை ஒரு லாபம் ஈட்டும் தொழிலாகவே வைத்திருக்கின்றன. கட்டுகோப்பான நடைமுறைகள் இல்லாத எந்த மதத்திலும் இந்த மதமாற்ற நிகழ்வுகள் சுலபமாக நடைபெறும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X