மணமாகாத ஒருவரே பிரதமராகும் வாய்ப்பு

Added : பிப் 11, 2014 | கருத்துகள் (103)
Share
Advertisement
பா.ஜ., தன் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை முன்னிறுத்தியுள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சி, தங்களின் பிரதமர் வேட்பாளராக, ராகுலை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கிறது. ஆனால், அதை வெளிப்படையாகஅறிவிக்கவில்லை. தேர்தலில், காங்., வெற்றி பெற்றால், அடுத்த பிரதமர், ராகுல் தான் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை.மொத்தம், 80 லோக்சபா தொகுதிகளை உடைய, உத்தர பிரதேச
மணமாகாத ஒருவரே பிரதமராகும் வாய்ப்பு

பா.ஜ., தன் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை முன்னிறுத்தியுள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சி, தங்களின் பிரதமர் வேட்பாளராக, ராகுலை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கிறது. ஆனால், அதை வெளிப்படையாகஅறிவிக்கவில்லை. தேர்தலில், காங்., வெற்றி பெற்றால், அடுத்த பிரதமர், ராகுல் தான் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை.

மொத்தம், 80 லோக்சபா தொகுதிகளை உடைய, உத்தர பிரதேச மாநிலத்தின் பிரதான கட்சியான, பகுஜன் சமாஜும், பிரதமர் பதவியை குறிவைத்தே, லோக்சபா தேர்தலில் தனித்து போட்டி என, அறிவித்துள்ளது. அக்கட்சி சார்பில், பிரதமர்வேட்பாளராக முன்னிறுத்தப்படுபவர் முன்னாள் முதல்வர் மாயாவதி.தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், 40 இடங்களில் வெற்றி பெற்று விட்டால், தனக்கு பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாக நம்புகிறார். மற்றொரு மாநில கட்சியான, திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான, மம்தா பானர்ஜியும், பிரதமர் பதவி மீது கண் வைத்துள்ளார்.

தேசிய கட்சிகளால், பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடி, ராகுல், மாநில கட்சிகளால், பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும், ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகிய, ஐந்து பேரும், திருமணம் செய்து கொள்ளாதவர்கள்.மொத்தத்தில், வரும் லோக்சபா தேர்தல் மூலம், மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவை, திருமணம் செய்து கொள்ளாத ஒருவரே, ஆளப்போகிறார் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. இருந்தாலும், இதுமாற்றத்துக்கு உட்பட்டது.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (103)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா
12-பிப்-201401:00:43 IST Report Abuse
தங்கவேல்  திருமணம் ஆகாதவர்கள் என்பதைவிட இவர்கள் பிரமச்சாரிகள் என்பதே ஒத்துவரும்..
Rate this:
Cancel
தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா
12-பிப்-201400:47:30 IST Report Abuse
தங்கவேல்  தாலி கட்டவில்லை அல்லது கழுத்தில் தாலி இல்லை என்றால் திருமணம் ஆகவில்லை என்று பொருளா ?
Rate this:
Cancel
mcspandian - Madurai,இந்தியா
11-பிப்-201422:48:42 IST Report Abuse
mcspandian மோடிக்கு கல்யாணம் ஆகவில்லையா ? அவர் தாலிகட்டிய மனைவி இன்னும் உயிரோட இருக்காங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X