கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பீர் பாட்டிலில் துருப்பிடித்த இரும்பு : ரூ. 30 ஆயிரம் இழப்பீடு தர உத்தரவு

Added : பிப் 11, 2014 | கருத்துகள் (2)
Advertisement

கோவை: திருப்பூர் மாவட்டம், அவிநாசி, மங்கலம் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ்,37. மங்கலம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில், கடந்த 2012, ஜூன் ., 16ல், ரூ.180 கொடுத்து பீர்
வாங்கினார். அதை அருந்தியபோது, பாட்டலுக்குள் இரும்பு துண்டு துருப்பிடித்த நிலையில் கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர், டாஸ்மாக் ஊழியர்களிடம் கேட்ட போது, முறையான பதில் அளிக்கவில்லை.
ஆனால், பீர் குடித்த சிறிது நேரத்தில் நாகராஜூக்கு வயிற்று வலி ஏற்பட்டது. குடும்ப டாக்டரிடம் சிகிச்சை பெற்றார். பாதிக்கப்பட்ட அவர், டாஸ்மாக் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் பதில் வரவில்லை. இதனால் கோவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட் தலைவர் தண்டபாணி, சென்னை டாஸ்மாக் நிர்வாக இயக்குனர், மாவட்ட மேலாளர், டாஸ்மாக் கடை சார்பில், தலா ரூ.10 ஆயிரம் வீதம், பாதிக்கப்பட்ட நாகராஜூக்கு இழப்பீடும், ரூ.1000 செலவுத் தொகையும் வழங்க உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணிமேகலை - ரோம் ,இத்தாலி
11-பிப்-201414:42:12 IST Report Abuse
மணிமேகலை  மது குடிக்க ஊக்கத்தொகை பலே பலே ,
Rate this:
Share this comment
Cancel
அறிவா லயதாத்தா - Chennai,இந்தியா
11-பிப்-201412:35:33 IST Report Abuse
அறிவா லயதாத்தா சத்தற்ற பீருடன் இரும்பு சத்துள்ள துருவை டாஸ்மாக் இலவசமாகக் கொடுத்தது தவறில்லை குடிகாரானுக்கு கோர்ட் ஆதரவா? ஸ்டெடியான தீர்ப்பல்ல இது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X