மத ரீதியான இடஒதுக்கீடு சரியா, தவறா?

Added : பிப் 11, 2014 | கருத்துகள் (13)
Share
Advertisement
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், இடஒதுக்கீடு, 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும், முஸ்லிம்களுக்கு, 18 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கோரி வருகின்றன. இந்த இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் எனில், பிற்பட்ட வகுப்பினருக்கான, இடஒதுக்கீட்டில் தான், கை வைக்க வேண்டும். மேலும்,
மத ரீதியான இடஒதுக்கீடு சரியா, தவறா?

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், இடஒதுக்கீடு, 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும், முஸ்லிம்களுக்கு, 18 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கோரி வருகின்றன. இந்த இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் எனில், பிற்பட்ட வகுப்பினருக்கான, இடஒதுக்கீட்டில் தான், கை வைக்க வேண்டும். மேலும், மத
ரீதியாக இடஒதுக்கீடு அளிப்பது, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என, பா.ஜ., பொதுச் செயலர், அமீத் ஷா கூறியுள்ளார். அவரின் கருத்து தொடர்பாக, இரு தரப்பைச் சேர்ந்த தலைவர்கள், முன்வைத்த வாதங்கள் இதோ:

நாட்டின் பெரும்பான்மை வாக்காளர்கள் இந்துக்கள். அவர்களே, எந்த தேர்தலாக இருந்தாலும், வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர். இருந்தும், இந்த சக்தியை உணரும் விழிப்புணர்வு, இந்துக்கள் மத்தியில் இல்லை. சிறுபான்மை மக்களை மகிழ்வித்து விட்டால் போதும், தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற, முடிவுக்கு வந்து, அந்த பிரிவினருக்கான சலுகைகளை அளிக்கின்றனர். இந்த அடிப்படையில் தான், கல்வி, வேலை வாய்ப்பில், 18 சதவீத இடஒதுக்கீடு, முஸ்லிம்களுக்கு அளிக்கப்படும் என்ற, வாக்குறுதியை காங்கிரஸ் அளிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல. சிறுபான்மையினரின் மனதை குளிர வைத்தால் போதும் என, நினைக்கின்றனர். இதிலிருந்து வேறுபட்டவர், குஜராத் முதல்வர் மோடி. அவரிடம், குஜராத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே, என, கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், குஜராத்தில் உள்ள சிறுபான்மையினருக்கும் சரி, பெரும்பான்மையின ருக்கும் சரி, நான் எதுவும் செய்ய வில்லை. ஆனால், ஆறு கோடி குஜராத்தி களுக்கு செய்துள்ளேன், என்றார். இதன்மூலம், குஜராத்தில், சிறுபான்மை
யினர், பெரும்பான்மையினர் என்ற வேறுபாடில்லை, அனைவரும் குஜராத்திகள் என, தெளிவுபடுத்தினார்.
அதுபோல, இந்தியாவில், சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என, யாருமில்லை. அனைவரும் இந்தியர்கள். அவர்களின் நலனுக்காகவே, அரசுகள் அமைய வேண்டும். அதற்கு, காங்கிரசை தோற்கடிக்கும் காலம் நெருங்கி விட்டது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது, அனைத்து இந்தியர்களும் முன்னேறுவதில் தான் உள்ளது. அதன் மூலமே, வல்லரசை உருவாக்க முடியும். இங்கு, ஜாதி, மதம் ஆகியவற்றுக்கு வேலையில்லை. குறிப்பிட்ட ஒரு சாராரை, ஓட்டுக்காக மகிழ்விக்க வேண்டிய வேலையும் இல்லை என்ற நிலை உருவாகும்.

ராமகோபாலன், இந்து முன்னணி அமைப்பாளர்

கல்வி, வேலைவாய்ப்பில் பின் தங்கியுள்ள, மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும் என, இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, இடஒதுக்கீடு என்பது,
சலுகையல்ல; உரிமை. மத மற்றும் மொழி சிறுபான்மையின ரின், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிலையை ஆய்வு செய்ய, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, ரங்கநாத் மிஸ்ரா தலைமையில், தேசிய மத மற்றும் மொழி வழி சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், விரிவான ஆய்வை மேற்கொண்டு, 2007 மே, 21ம் தேதி, பிரதமரிடம், அறிக்கையை சமர்பித்தது.
அந்த அறிக்கையில், மத மற்றும் மொழி வழி சிறுபான்மையினருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 15 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். அதில், 10 சதவீதம், முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும். இல்லையேல், 27 சதவீத பிற்பட்டோருக்கான ஒதுக்கீட்டில், 8 சதவீத ஒதுக்கீட்டை, முஸ்லிம்
களுக்கு அளிக்க வேண்டும் என, பரிந்துரைத்து உள்ளது. எனவே, பா.ஜ., பொதுச் செயலர் அமித் ஷா கூறுவது போல், முஸ்லிம்களுக்கு, 18 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் பரிந்துரைகள், அரசிடம் இல்லை. தமிழகத்தில், 50 சதவீத ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு அளிக்கப்பட்டது. இதில், 20 சதவீதத்தைப் பிரித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அளித்தனர். அதனால், அவ்விரு சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்படவில்லை. ஆனால், பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்து, பிற்படுத்தப்பட்டோரின் ஒதுக்கீட்டை பறிக்கின்றனர் என, அமித் ஷா போன்றவர்கள், இந்து, முஸ்லிம் இடையே மோதலை ஏற்படுத்தி, அதில், அரசியல் செய்ய முனைகின்றனர்.
ஒரு சமூகத்துக்கு அதன் உரிமையை அளிக்கும்போது, மற்றொரு சமூகத்தின் உரிமை பறிக்கப்படுகிறது என்ற அர்த்தமில்லை. இதை, முஸ்லிம்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் நன்கு புரிந்துள்ளனர்.

ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ., மனிதநேய மக்கள் கட்சி

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajarajan - Thanjavur,இந்தியா
14-பிப்-201410:20:43 IST Report Abuse
Rajarajan மனசாட்சி தொட்டு சொல்லுங்க. இடவொதுக்கெடு என்பது, பொருளாதாரரீதியில் அடித்தட்டுமக்கள் / மாற்றுதிரனாளிகள் / திருநங்கைகள் போன்ற இயற்கையால் பாதிக்கப்பட்டவர்கள் பெறவேண்டியது மட்டும் தானே ???? கை / கால் / மூளைவளர்ச்சி நன்றாக இருப்பவர்கள் கேட்டு பெறுவது கௌரவ குறைச்சல் தானே ??? நாம் பிச்சை அளிக்கும்போது கூட, இதைத்தானே சொல்கிறோம் ??? கை கால் நன்றாக இருக்கிறது, உழைத்து சாப்பிடு என்று இந்த சொல்லடி குறுக்குவழியில் இடவொதுக்கீடு பெரும் நமக்கும் பொருந்தும்தானே ???? அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காக, நம் சுய கவுரவத்தை விட்டுகொடுத்து, சமூகத்தின் ஏளன பார்வைக்கு இலக்க்காகவேன்டுமா ?? சுயமாக சிந்திக்கலாமே / உழைக்கலாமே ????? இடவொதுக்கீடு பெரும் குறுப்பிட்ட சமுதாயத்தினர் ஒருவர் ஒரு தொழிற்சாலை தொடங்கினால், அதில் அவர் இனத்தை சேர்ந்தவர் என்றாலும் மடையர்களை வைத்துக்கொண்டு நஷ்டத்தில் இயக்குவாரா, அல்லது ஜாதி முக்கியமில்லாமல் மற்ற சமூகத்தினரை சேர்த்து, தொடர்ந்து லாபத்தில் இயக்குவாரா ??? அப்போது அவர் மனநிலை மட்டும் மாற்றிக்கொள்வது ஏன் ??? ஏனெனில், தன் தொழிற்சாலைநஷ்டம் தன் கையை சுடும். ஆனால், அரசாங்க நஷ்டம் அரசாங்கத்தை சுடும். இது தெரிந்தே செய்யும் சுயநலம் தானே ???
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
14-பிப்-201410:07:26 IST Report Abuse
Rajarajan மக்கள் மனதில் இருந்து ஜாதி போகவில்லை என்பது ஒரு சாக்கு தான். இதை வைத்து, தொடர்ந்து குறிப்பிட்ட சமூகதிருக்கு தாங்கள் இடவொதுக்கிடு பெற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்று தான் இதன் பொருள். தலைமுறை தலைமுறையாக, ஜாதி ரீதியில் எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று வெக்கபடாமல் வெளிபடையாக கேட்கலாமே ??? ஆசை யாரை விட்டது ???? முழுதும் நனைந்தபின் முக்காடு எதற்கு ??? உழைக்காமல் ஒரு தடவை பட்டமோ, பதவியோ அல்லது சுகமோ ருசித்துவிட்டால், பின்னர் அதை விட்டுவிட யாருக்கு தான் மனம் வரும். தங்கள் வாரிசுகளும் இந்த சுகத்தை வருதிக்கொள்ளாமல் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஆகமொத்தம், ஒதுக்கீடு பற்றி தங்களுக்கு தாங்களே சப்போர்ட் செய்து நியாயபடுதுகிறார்களே தவிர, தங்களது திறமை / போட்டி மனப்பான்மை / தகுதி திறன் வளர்ப்பு பற்றி கவலையேபடுவதில்லை. உங்கள் வருத்தம் மனங்களில் இருந்து ஜாதி போகவில்லை என்பது தானே ???? ஒரே தீர்வு. ஜாதி சான்றிதழ்கள் இனிமேல் தகுதி இல்லாதவை என்று அறிவதால் போதுமே ???? ஆனால் உங்கள் மனதிருக்கு ஏது சான்றிதழ்?? இதுவெல்லாம் கிடக்கட்டும். மனசாட்சி தொட்டு சொல்லுங்கள். எத்தனை பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட / சீர்மரபினர் வீட்டில் பெண் கொடுத்து / எடுக்கின்றனர் ???? பிறகு ஏன், முற்படுத்தப்பட்ட சமூகத்தினராக அறிவிக்கபட்டவர்களை மட்டும் குறை சொல்ல வேண்டும் ??? இவர்கள் மனங்களிலேயே இன்னும் பின்தங்கிய / மிக பின்தங்கிய / தாழ்தப்பட்ட என்ற ஏற்ற தாழ்வு பாகுபாடு ஒழியவில்லை. பின்னர் மற்ற வகுப்பினரை எப்படி குறை சொல்ல முடியும் ??? இவர்கள் மனதை முதலில் வளப்படுத்தவேண்டும். பின்னர் அடுத்து மற்றவை தானாகவே வளப்படும்.
Rate this:
Cancel
Nammalwar - Bangalore,இந்தியா
11-பிப்-201420:47:18 IST Report Abuse
Nammalwar எது சிறு பான்மை? காஷ்மீர், மிசோரம், ஆம்பூர், வாணியம்பாடி, ராமநாத புர ஏரியா களில் ஹிந்துக்கள் தான் சிறு பான்மையினர். அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்ததா? சிறுபான்மையினர் என்றால் 10% கு கம்மியாக இருக்க வேண்டும் என அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனால் இந்தியாவில் முஸ்லீம்கள் 16%.. ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ள எந்த முஸ்லீம் மெஜாரிட்டி நாடுகளிலாவது அந்த ஹிந்துக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறதா?. இங்கே ஜனாதிபதி, அவைத்தலைவராக முஸ்லீம்கள் இருப்பது போல் எந்த முஸ்லீம் மெஜாரிட்டி நாடுகளிலாவது ஒரு ஹிந்துவோ, கிறிஸ்டியானோ இருக்க முடியுமா? அமெரிக்காவில் 80% கிறிஸ்டியன்ஸ் 20% மற்றயோர், அங்கே யாருக்கும் இட ஒதுக்கீடு தரப்படுவதில்லை. ஆனால் இந்தியாவில் 80% ஹிந்துஸ் 20% மற்றயோர், இங்கே ஹிந்துக்களின் அதிகமான பொது வரிப்பணத்தில் சிறு பான்மையினருக்கு அதிகமான இட ஒதுக்கீடு வேண்டும்?
Rate this:
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
13-பிப்-201421:05:36 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேஅட நீங்க இன்னமும் முழுமையாக செய்திகள் படிக்க வில்லையா, நேற்று யுவன் சங்கர் முஹம்மத் ராஜ, இன்று டி ராஜேந்தர் லூர்து சாமி ஆகிவிட்டார்கள், எங்கிருந்து இந்துக்கள் 80 சதம், இப்போ அவர்கள் வெறும் ஏட்டு சுரைக்காய்கள் சார், வீட்டில் ஒரு சிலுவை, ஏட்டில் இந்து, அதுதான் இன்றையா கிருத்துவர்களின் நிலை , தமிழ் நாட்டிலும், ஆந்திராவிலும் இந்துக்கள் எப்போதோ சிறுபான்மையினர், கிறுத்துவர்களே இப்போ பெரும் பான்மையினர்,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X