உ.பி.,யில், முசாபர்நகர் கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, முஸ்லிம்களின் ஓட்டுகளை கவரவும், அந்த சமுதாயத்தினரின் ஓட்டுகளை, சமாஜ்வாதியில் தக்க வைத்துக் கொள்ளவும் முடிவு செய்துள்ள, முலாயம் சிங் யாதவ், பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
முக்கிய முடிவுகள் : முதற்கட்டமாக, முஸ்லிம்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதிக்க, முடிவு செய்துள்ள முலாயம், உருது கல்வி நிலையங்கள் மேம்பாட்டிற்கு, பல திட்டங்களை அறிவிக்க வேண்டும் என, மகனும், மாநில முதல்வருமான, அகிலேஷ் யாதவிற்கு உத்தரவிட்டுள்ளார். கட்சித் தலைவர், முலாயம், அவர் மகன், முதல்வர், அகிலேஷ் மற்றும் முன்னணி தலைவர்கள் பங்கேற்ற, சமாஜ்வாதி பார்லிமென்ட் குழு கூட்டம், சமீபத்தில் நடைபெற்றது. அதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சமீபத்தில், லக்னோவில் நடந்த அந்த கூட்டத்தில், ஆம் ஆத்மி யின் சில கொள்கைகளையும் பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. ஆடம்பர கார்களைத் தவிர்த்து, சாதாரண சைக்கிளில், கட்சியின் முன்னணித் தலைவர்கள், ஒவ்வொரு ஊரிலும், நகரிலும், தெரு தெருவாகச் சென்று, மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிவதுடன், கட்சியின் திட்டங்கள், சாதனைகளையும் தெரிவிக்க வேண்டும் என, முலாயம் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு மாற்றாக, மூன்றாவது அணியை, மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தவும், இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த இரு கட்சிகளையும் தவிர்த்து, மூன்றாவது அணியின் சிறப்புகள், அதன் செயல்திட்டங்களை, மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாயையை தகர்க்கணும் : முதற்கட்டமாக, உ.பி.,யில் இந்த பணிகளை முடித்த பிறகு, டில்லியில் கவனம் செலுத்த வேண்டும் என, கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டில்லி
யில், ஆம் ஆத்மிக்கும், பா.ஜ., வுக்கும் தான் ஆதரவு இருக்கிறது என்பது போன்ற மாயை உள்ளது. அதை தகர்க்க வேண்டும் என, தன் கட்சியினருக்கு, முலாயம் சிங் உத்தரவிட்டுள்ளார்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE