அமைச்சர் மொய்லி, முகேஷ் மீது வழக்கு பதிய உத்தரவு!கெஜ்ரிவால் நடவடிக்கையால் டில்லியில் பரபரப்பு

Added : பிப் 12, 2014 | கருத்துகள் (4)
Advertisement
அமைச்சர் மொய்லி, முகேஷ், வழக்கு பதிய உத்தரவு, கெஜ்ரிவால் நடவடிக்கையால் டில்லியில் பரபரப்பு,Delhi CM Arvind Kejriwal, Mukesh Ambani, gas pricing

புதுடில்லி: ''கிருஷ்ணா - கோதவரி ஆற்றுப் படுகையிலிருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவுக்கு, விலை நிர்ணயம் செய்வதில் முறைகேடு செய்த, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, 'ரிலையன்ஸ்' அதிபர் முகேஷ் அம்பானி, முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோரா உள்ளிட்டோர் மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும்,'' என, டில்லி முதல்வரும், 'ஆம் ஆத்மி' கட்சித் தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்து உள்ளார்.இந்த அறிவிப்பு, அரசியல் மற்றும் தொழில் துறை வட்டாரங்களில், அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


காங்., ஆதரவுடன் ஆட்சி:


டில்லியில், காங்., ஆதரவுடன், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. டில்லி போலீசாரை, மாநில அரசின் கட்டுப்பாட்டில் ஒப்படைப்பது, லோக்பால் மசோதாவை, ராம்லீலா மைதானத்தில் நிறைவேற்றுவது ஆகிய விஷயங்களில், காங்கிரசுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே, மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் கெஜ்ரி வால், செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:ஆந்திராவில், கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில், பூமிக்கு அடியில், ஏராளமான இயற்கை எரிவாயு கிடைக்கிறது. இந்த இயற்கை எரிவாயுவை எடுத்து, விற்பனை செய்வதற்கான உரிமத்தை, முகேஷ் அம்பானியின், 'ரிலையன்ஸ்' நிறுவனத்துக்கு, மத்திய அரசு கொடுத்துள்ளது. இந்த இயற்கை எரிவாயுவை, உற்பத்தி செலவை விட, பல மடங்கு அதிக விலைக்கு, ரிலையன்ஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது. விலை நிர்ணயத்தில், பெரும் முறைகேடு நடந்துள்ளது. 1 யூனிட் இயற்கை எரிவாயு, 248 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் மார்ச்சிலிருந்து, இதை, 496 ரூபாய்க்கு விற்பனை செய்ய, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. விலையை உயர்த்த வேண்டும் என்பதற்காக, அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், இயற்கை எரிவாயுக்கு, செயற்கையான தட்டுப்பாட்டை, ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்படுத்துகிறது.

இயற்கை எரிவாயுவுக்கான விலை ஏற்றம், சாதாரண மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். போக்குவரத்து, மின் உற்பத்தி, உரம், உணவு பொருட்கள் ஆகியவற்றுக்கான விலைகள், பல மடங்கு அதிகரிப்பதற்கு, இந்த விலை உயர்வு, வாய்ப்பை ஏற்படுத்தி விடும். இயற்கை எரிவாயு விலை உயர்வின் மூலம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு, ஆண்டுக்கு, 54 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமும், இந்த முறைகேட்டை சுட்டிக் காட்டியுள்ளது. உற்பத்தி செலவை விட, மிக அதிக விலை வைத்து விற்பனை செய்ததில், மத்திய பெட்ரோலிய அமைச்சகமும், ரிலையன்ஸ் நிறுவனமும், முறைகேடு செய்துள்ளன. 'இயற்கை எரிவாயுக்கான விலை, சர்வதேச சந்தை நிலவரத்தை அடிப்படையாக வைத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது; உற்பத்தி செலவை அடிப்படையாக வைத்து, நிர்ணயம் செய்யப்படுவது இல்லை' என்ற மத்திய அரசின் வாதத்தை, ஏற்க முடியாது.

எனவே, இந்த முறைகேடு தொடர்பாக, விசாரணை நடத்தும்படி, டில்லி, ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு, மாநில அரசு சார்பில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலர், டி.எஸ்.ஆர்., சுப்ரமணியன், முன்னாள் கடற்படை தளபதி, தகிலானி, சட்ட நிபுணர், காமினி ஜெய்ஸ்வால் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, முரளி தியோரா, மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இரண்டு அதிகாரிகள் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கும்படியும், போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு, கெஜ்ரிவால் கூறினார்.

கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு, டில்லி அரசியலிலும், தொழில் அதிபர்களிடத்திலும், பரபரப்பையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில், எந்த விளக்கமும் இன்னும் அளிக்கப்படவில்லை.


டில்லி போலீசார் விசாரிக்க முடியுமா?


'இயற்கை எரிவாயு எடுக்கப்படும், கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப்படுகை, ஆந்திராவில் உள்ளது. எனவே, இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்யவோ, விசாரணை நடத்தவோ, டில்லி போலீசாருக்கு அதிகாரம் இல்லை' என, மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.ஆனால், கெஜ்ரிவால், ''விலை நிர்ணயம் நடந்தது, டில்லியில் தான். எனவே, விசாரணை நடத்துவதற்கு, டில்லி போலீசாருக்கு அதிகாரம் உள்ளது,'' என்றார்.


ஷீலாவுக்கும் குடைச்சல்:


டில்லியில், முன்னாள் முதல்வர், ஷீலா தீட்ஷித் தலைமையிலான, முந்தைய காங்., அரசு, குடிநீர் வாரியத்தில், ஊழல் செய்துள்ளதாக கூறியுள்ள கெஜ்ரிவால், அதற்கான சாதனங்கள் வாங்கியதிலும், முறைகேடு நடந்துள்ளதாக, குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இது தொடர்பாக, ஷீலா தீட்ஷித்துக்கு எதிராக விசாரணை நடத்தும் படி, டில்லி ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளார்.


'உளறுகிறார் கெஜ்ரிவால்': உறுமுகிறார் மொய்லி:


மத்திய பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி கூறியதாவது:
டில்லி முதல்வர், கெஜ்ரிவால், அரசு எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ளாமல், இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுபோன்ற ஒப்பந்தங்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன, விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதை, அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.நிபுணர்களின் ஆலோசனையை பெற்றுத் தான், விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கிணற்றில் இருந்து, வாளியில் தண்ணீர் அள்ளுவது போல், இயற்கை எரிவாயு எடுக்கலாம் என, கெஜ்ரிவால் நினைக்கிறார் போலிருக்கிறது. நம் நாட்டுக்கு தேவையான, 75 சதவீத பெட்ரோலிய பொருட்களை, வெளிநாடுகளில் இருந்து தான், இறக்குமதி செய்கிறோம். கெஜ்ரிவால், பணம் கொடுத்தால், இயற்கை எரிவாயு விலையை குறைக்க தயார்.இவ்வாறு, மொய்லி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sutha - chennai,இந்தியா
12-பிப்-201407:29:18 IST Report Abuse
Sutha ஒருவர் ஒரு செயலை தவறு நடந்திருக்கிறது என்று சொல்லும் பொழுது அதற்க்கு பொது மக்களுக்கு சரியான விளக்கம் புர்யும்படி அளிக்கப் படவேண்டும்.ஆனால் காங்கிரஸ்காரன் எதிர் கட்சிகளையே மதிக்காத பொழுது பொது மக்களை எப்படி மதிப்பான்.
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
12-பிப்-201405:03:57 IST Report Abuse
s.maria alphonse pandian கேஜ்ரிவால் அவர்கள் இப்படியாக தினமும் பட்டையை கிளப்பிக்கொண்டே போனால் பிஜேபி , '" அபிராமி....அபிராமி...அபிராமி...அபிராமி" என சொல்லி கொண்டே இருக்கும் மனநிலைக்கு ஆளாகிவிடும்....காங்கிரசும் நாறிவிடும்...ஊழல்வாதிகள் இருவரும் தண்டிக்கப்படுவதைதானே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Tiruvannamalai Kulasekaran - AUSTRALIA  ( Posted via: Dinamalar Android App )
12-பிப்-201404:05:11 IST Report Abuse
Tiruvannamalai  Kulasekaran அப்பா கெச்ரி ரொம்ப ஆடாதே உன் ஆட்சியே மைனாரிட்டி எப்பவும் கவிழ்ந்துடுமே
Rate this:
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
12-பிப்-201405:04:48 IST Report Abuse
s.maria alphonse pandianகேஜ்ரிவால் ஆடவில்லை...ஆட்டுவிக்கிறார் .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X