தேவையா தே.மு.தி.க.,? யோசிக்கிறது பா.ஜ.,

Added : பிப் 12, 2014 | கருத்துகள் (41)
Share
Advertisement
லோக்சபா தேர்தலை ஒட்டி, தமிழகத்தில் பா.ஜ., போட்ட கூட்டணி திட்டத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ம.தி.மு.க., - பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., ஆகிய கட்சிகளை இணைத்து, தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்க முயன்ற, பா.ஜ., தலைமை, இப்போது தே.மு.தி.க., தேவையா என சிந்திக்க துவங்கி உள்ளது.தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி கணக்கை, முன்கூட்டியே திட்டமிட்டு தான், ஒவ்வொரு கட்சியும், இந்த முறை காய் நகர்த்தி
தேவையா தே.மு.தி.க.,? யோசிக்கிறது பா.ஜ.,

லோக்சபா தேர்தலை ஒட்டி, தமிழகத்தில் பா.ஜ., போட்ட கூட்டணி திட்டத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ம.தி.மு.க., - பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., ஆகிய கட்சிகளை இணைத்து, தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்க முயன்ற, பா.ஜ., தலைமை, இப்போது தே.மு.தி.க., தேவையா என சிந்திக்க துவங்கி உள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி கணக்கை, முன்கூட்டியே திட்டமிட்டு தான், ஒவ்வொரு கட்சியும், இந்த முறை காய் நகர்த்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், பா.ஜ., அமைக்கவிருக்கும் கூட்டணியால், தேர்தலுக்கு பின், பா.ஜ., ஆட்சி அமைய இடையூறு எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற சிந்தனை, அக்கட்சி தலைமைக்கு வந்துள்ளது.


கூட்டணி கணக்கு:

நாடு முழுவதும் மோடி அலை வீசி, பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டு விட்டால், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி கணக்கு போடத் தேவையில்லை. ஆனால், ஆட்சி அமைக்க, சில கட்சிகளின் ஆதரவு தேவை என்ற நிலை ஏற்படுமானால், அப்போது பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்துள்ள கட்சிகள் மட்டுமல்ல; கூட்டு சேராத கட்சிகளின் ஆதரவும் தேவைப்படக்கூடும்.
கூட்டணியில் இடம்பெறாத, அதே நேரத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்க, ஆதரவு தரக்கூடிய கட்சிகள் எவை என்ற பட்டியலும், பா.ஜ., கைவசம் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில், அந்த பட்டியலில், முதலிடத்தில் இருப்பது ஆளும் அ.தி.மு.க., என்பது, அரசியல் வட்டாரத்தில் உலா வரும் ஊர்ஜிதமான ஒரு தகவல்.


தேர்தலுக்கு முன்பே...:


கடந்த, 8ம் தேதி, சென்னை வந்த, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். ஆனால், ஒரு வரி கூட, அ.தி.மு.க.,வையோ, அதன் ஆட்சியை பற்றியோ விமர்சிக்கவில்லை. அது ஏன்? இக்கட்சி இடம்பெற்றுள்ள மூன்றாவது அணியை பற்றி கூட, வாய் திறக்க மோடி மறுத்து விட்டார்.இதெல்லாம், பா.ஜ.,வின் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி கணக்கு என்பதை, முதல்வர் ஜெயலலிதாவும் அறிந்தே வைத்துள்ளார். அதன் வெளிப்பாடு தான், பசும்பொன் தேவர் நினைவிடத்தில், ஜெயலலிதா பேசிய பேச்சு. 'மத்தியில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைப்பது தான் அ.தி.மு.க.,வின் நோக்கம்' என, கூறியுள்ள அவர், தேர்தலுக்கு பின் பா.ஜ., ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க தயங்க மாட்டோம் என்ற, 'மெசேஜை' தேர்தலுக்கு முன்பே, பா.ஜ., வட்டாரத்திற்குள் ஊடுருவச் செய்து விட்டார் என்கின்றனர். ஜெயலலிதாவின் வெளிப்படையான இந்த அறிவிப்பு, தமிழகத்தில் பா.ஜ.,வின் கூட்டணி திட்டத்தையே புரட்டி போடக் கூடியதாக அமைந்து விட்டது எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
'மத்தியில் காங்., - பா.ஜ., அல்லாத ஆட்சி' என்பது தான் மூன்றாவது அணியின் தேர்தல் கோஷம். அந்த வியூகம் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தான், ஜெயலலிதா கூட்டு சேர்ந்துள்ளார். அவர்களுடன் கூட்டணியில் இருந்து கொண்டே, 'காங்கிரசை ஆட்சி அமைக்க விட மாட்டோம்; அது தான் எங்கள் லட்சியம்' என, பகிரங்கமாக அறிவித்துள்ளதன் மூலம், பா.ஜ.,வுக்கு எதிர்ப்பு இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டார்.அதேபோல், தன்னை பிரதமர் வேட்பாளர் என கூறிக் கொள்வதையும், அவர் தற்போது தவிர்த்து வருகிறார். மார்க்சிஸ்ட் தலைவர்கள் அவரை சந்தித்தபோது, அளித்த பேட்டியில், 'பிரதமர் யார் என்பதை தேர்தலுக்கு பின் தீர்மானித்து கொள்ளலாம்' எனக் கூறி, நிலையை மாற்றிக் கொண்டுள்ளார்.இதனால், தேர்தலுக்கு பின், பா.ஜ., ஆட்சி அமைக்க ஆதரவு தரக்கூடிய கட்சியாக, அ.தி.மு.க., தன்னை அடையாளம் காட்டி வருகிறது. அதனால், தேர்தல் நேரத்தில் அதை பகைத்துக் கொள்ள தேவையில்லை என, பா.ஜ., தலைமை கருதுகிறது. எனவே, தமிழகத்தில் ஏற்படுத்தப்படும் கூட்டணியால், அ.தி.மு.க.,வுடனான சுமூக உறவுக்கு சிக்கல் வந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும் எனவும், கட்சி மேலிடம் ஆலோசனை கூறியுள்ளது.


நாளுக்கு நாள்...:


தற்போது, பா.ஜ., கூட்டணியில், ம.தி.மு.க., - பா.ம.க., இடம்பெறுகிறது. தே.மு.தி.க.,வுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. தே.மு.தி.க.,வை பொறுத்தவரையில், அ.தி.மு.க., தான், பிரதான எதிரி. அதிலும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் அரசியல் பகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.இதனால், ஜெயலலிதாவை வீழ்த்துவது தான், எங்கள் நோக்கம் என, விஜயகாந்தும், அவரது கட்சியினரும் பேசி வருகின்றனர். பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., வந்தால், அக்கட்சி தலைவர்களின் பிரசாரம் அனைத்தும், ஜெயலலிதாவுக்கு எதிராகவே இருக்கும். விஜயகாந்தின் பேச்சும் பிரசாரமும், அ.தி.மு.க.,வுக்கும் பா.ஜ.,வுக்கும் இடையே, தீராத பகையை ஏற்படுத்தி விடக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. தேர்தலில் ஜெயலலிதாவை கடுமையாக தாக்கிப் பேசி விட்டு, தேர்தலுக்கு பின், அவரிடம் ஆதரவு கேட்க முடியாத நிலையை, தே.மு.தி.க., தலைவர்கள் நிச்சயம் ஏற்படுத்தி விடலாம்.


தர்மசங்கடம்:


வைகோ, ராமதாசை கூட்டணி கொள்கை திட்டத்திற்குள் கொண்டு வந்து விடலாம். ஆனால், விஜயகாந்தை கட்டுப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே.மேலும், தே.மு.தி.க.,வின் நிலைப்பாடும், அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்திற்கு உரியதாகி உள்ளது. எந்த இலக்கும் இல்லாமல், எல்லா கட்சிகளுடனும் கூட்டணிக்கு பேரம் பேசி வருவதும், பா.ஜ.,வுக்கு தர்மசங்கடத்தை தந்துள்ளது.எனவே, இனிமேலும் அக்கட்சியுடன் பேச்சுவார்த்தையை தொடர்வதா என்று சிந்திக்கத துவங்கி விட்டோம்; தே.மு.தி.க.,வே இனி முடிவு எடுத்து வரட்டும்; அதுவரை பேச்சை தொடர வேண்டாம்' என, முடிவு செய்துள்ளோம். ஆனால், நாங்களாகவே, அவர்களை வேண்டாம் என சொல்ல மாட்டோம்.இவ்வாறு, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pachaiyappas bala - kallakurichi,இந்தியா
13-பிப்-201408:02:29 IST Report Abuse
pachaiyappas bala காங்கிரஸ் கூட யார் கூட்டணி வைக்கும் கட்சிகள் அடுத்த தேர்தலுக்கு இருக்காது .ஆயிந்திவிடும்
Rate this:
Cancel
தமிழன் - வேலூர்...  ( Posted via: Dinamalar Android App )
13-பிப்-201401:05:05 IST Report Abuse
தமிழன் பாவம் பிஜேபி .... போனி ஆகாமல் .. போகபோவுது.....
Rate this:
Cancel
செந்தமிழ் கார்த்திக் - Namakkal to chennai,இந்தியா
12-பிப்-201407:34:16 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் தமிழக பாஜக மோசமான அரசியலை, தரகு வேலையை தான் செய்து வருகிறது. சந்தர்பவாத , சுயநல கூட்டணியை அமைக்க முயற்சிக்கிறது. சாதி அரசியல் செய்யும் சில சாக்கடைகளை எல்லாம் கூட்டணியில் சேர்த்து கொள்கிறது. படித்த மக்கள் , இளைஞர்கள் பெரும்பாலும் சாதி அரசியலை எதிர்பவர்கள் தான். பிறகு இந்த சாதி கூட்டணிகளை எப்படி அவர்கள் ஆதரிப்பார்கள் ? வைகோ - திமுக , அதிமுக இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் இருக்க மாட்டேன் என்று சொன்னவர், நாளை அதிமுக ஒருவேளை பாஜக கட்சியை தேர்தலுக்கு பின்னோ , முன்னோ ஆதரித்தால் எந்த முகத்தோடு கூட்டணியில் இருப்பார் ?? பாஜகவிற்கு ஆதரவு தருவார் ?? 2002 குஜராத் கலவரத்தின் போது மோடியை ரத்த வெறி பிடித்த, மனித மிருகம் என்று வர்ணித்தவர் வைகோ. இன்று அதை எல்லாம் மறந்து விட்டு பல்லிளிக்கிறார் காரணம் - கொள்கை கோட்பாடு பார்த்தால் தனது கட்சி காணமல் போய்விடும். இந்த தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கி காட்டாமல் போனால் மதிமுகவின் தேர்தல் சின்னம் காலி. அதனாலே காங்கிரஸ் எதிர்ப்பு என்று கதை விட்டுக்கொண்டு வேறு வழி இல்லாமல் பாஜக கூட்டணியில் சுயநலமாக உள்ளார். பாஜகவை மதவாத கட்சி என்று இன்றுவரை விமர்சிக்காத ஒரே அரசியல் தலைவர் அதிமுக - ஜெயலலிதா தான். இத்தனைக்கும் மோடியும் , ஜெயாவும் நல்ல நண்பர்கள் வேறு. மோடி முதன்முதலாக தேர்தல் நாடாள மன்றம் தேர்தல் பிரசார கூட்டம் - ஹைதராபாத் கூட்டத்தில் பேசும் போது ஜெயலலிதா ஆட்சியை புகழ்ந்து பேசினார் என்பது குறிப்பிட தக்கது. இன்றுவரை அதிமுகாவை விமர்சிக்க வில்லை , விமர்சிக்கவும் மாட்டார். அரசியல் சதுரங்கத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே வாக்காளர்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுக்காதீர்கள். முதலில் யாரை ஆதரிக்க கூடாது என்று முடிவெடுங்கள். அப்போது தான் வாக்களிக்க வசதியாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X