உருவாகிறது ஏழு கட்சிகள் 'மெகா' கூட்டணி: கைகோர்க்கும் கருணாநிதி - விஜயகாந்த்

Added : பிப் 12, 2014 | கருத்துகள் (290)
Share
Advertisement
தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., காங்., உட்பட, ஏழு கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி அமைவது குறித்த அறிவிப்பை, திருச்சி தி.மு.க., மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவிக்க திட்டமிட்டு உள்ளார்.தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை துவக்க, காங்., மேலிட தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, வீரப்ப மொய்லி ஆகியோர், ஓரிரு நாளில், கருணாநிதியை சந்திக்க சென்னைக்கு வருகின்றனர். அதேசமயம், நாளை
ஏழு கட்சிகள் மெகா கூட்டணி,கைகோர்க்கும் கருணாநிதி - விஜயகாந்த்

தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., காங்., உட்பட, ஏழு கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி அமைவது குறித்த அறிவிப்பை, திருச்சி தி.மு.க., மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவிக்க திட்டமிட்டு உள்ளார்.

தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை துவக்க, காங்., மேலிட தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, வீரப்ப மொய்லி ஆகியோர், ஓரிரு நாளில், கருணாநிதியை சந்திக்க சென்னைக்கு வருகின்றனர். அதேசமயம், நாளை மறுநாள் டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுலை, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சந்தித்து, கூட்டணி குறித்த பூர்வாங்க பேச்சுவார்த்தையை துவக்குகிறார் என, தி.மு.க., வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.


ரகசிய பேச்சு :


தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., காங்., இடம் பெற வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் ஆகியோர், தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து, வலியுறுத்தி வந்தனர்.சமீபத்தில் டில்லி சென்ற திருமாவளவன், காங்., துணைத் தலைவர் ராகுலை சந்தித்து, அ.தி.மு.க., - பா.ஜ.,வுக்கு எதிராக, தமிழகத்தில், தி.மு.க., தலைமையில் வலிமையான கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளார். தொடர்ந்து, தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி ஆகியோரும், டில்லியில் முகாமிட்டு, காங்., மேலிட தலைவர்களை தனித்தனியாக சந்தித்து, கூட்டணிக்கான பூர்வாங்க பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தியுள்ளனர்.

அதன் பயனாக, ஓரிரு நாளில், சென்னையில் கருணாநிதியை சந்திக்க, காங்., மேலிட தலைவர்கள் ஏ.கே.அந்தோணியும், வீரப்ப மொய்லியும் வருகின்றனர். அப்போது, ஏழு கட்சிகள் கொண்ட, 'மெகா' கூட்டணி அமைப்பது குறித்து, காங்., மேலிட தலைவர்களிடம், கருணாநிதி முக்கிய ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே, தி.மு.க., கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட, நான்கு கட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த நான்கு கட்சிகளுக்கும், தலா ஒரு தொகுதியை ஒதுக்கி விட்டு, மீதமுள்ள 36 தொகுதிகளில், தி.மு.க., 20 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. மீதமுள்ள 16 தொகுதிகளில், தே.மு.தி.க.,விற்கு 9 தொகுதிகளும், காங்கிரசுக்கு 7 தொகுதிகளும், ஒதுக்கீடு செய்வதற்கான பேச்சுவார்த்தையை, மேலிட தலைவர்களிடம், கருணாநிதி தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


தனித்தனியாக...:


கருணாநிதியுடன் மேலிட தலைவர்கள் சந்திப்பு முடிந்த மறுநாள், டில்லியில், மன்மோகன் சிங், சோனியா, ராகுலை, விஜயகாந்தும், அவரது கட்சி எம்.எல்.ஏ.,க் களும் கூட்டணி தொடர்பாக, பூர்வாங்க பேச்சுவார்த்தையை நடத்துகின்றனர். காங்கிரசுடன் தி.மு.க., தே.மு.தி.க.,ஆகிய கட்சிகள் தனித்தனியாக நடத்தும் பேச்சுவார்த்தை, இம்மாதம் 15ம் தேதிக்குள், சுமூகமாக முடிவடையுமானால், 16ம் தேதி திருச்சி மாநாட்டில், ஏழு கட்சிகளின், 'மெகா' கூட்டணி அமைக்கும் அறிவிப்பை, கருணாநிதி வெளியிடவும் வாய்ப்புள்ளது என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (290)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அப்பு - மதுரை ,இந்தியா
14-பிப்-201418:44:35 IST Report Abuse
அப்பு தமிழகத்தில் ஜெயாவை தேர்தலில் சந்திக்க இத்தனை கஷ்டப்படவேண்டி இருக்கிறதே தலிவரே?????தம்மா ஒண்டிக்கி ஒண்டி நிக்கிற காலம் போயி இன்னிக்கி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி தலிவரே முடியல போங்க.....இதுல அழகிரி ஸ்டாலின் என்று ஆளுக்கு ஒரு பக்கம் பிரச்சனை வேற.....இருந்தாலும் இரண்டு ஜி நாயகி எப்படியாவது கா கூட்டணியுடன் கைகோர்த்து விடவேண்டும் என்பதில் உறுதியாக தான் இருக்கிறார் போங்க....மூன்று திசையில் பயணம் செய்யும் திமுகவை மக்கள் நம்புவது கஷ்டம் இல்லை.....நடக்காத ஒன்று.....சாலிடா அம்மா பிச்சிகிட்டு போயிடுவாங்க...கடசில கோவிந்தா கோவிந்தா தான் 7 கட்சி கூட்டணிக்கு......
Rate this:
Cancel
அப்பு - மதுரை ,இந்தியா
14-பிப்-201418:40:58 IST Report Abuse
அப்பு ஆஹா நல்ல கூட்டணி.....ஆமா வோட்டு போட யாரு இருக்கா? ஏற்கனவே ஸ்டாலின் கடுப்புல இருக்காரு....மக்கள் முடிவுல இருக்காங்க....இத எல்லாம் மீறி டபுள் டிஜிட் எண்ணிக்கைகளில் சீட்டுக்கள் பெறுவது என்பது குதைரை கொம்பு தான்...
Rate this:
Cancel
abbasmeeran doha - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-பிப்-201413:01:54 IST Report Abuse
abbasmeeran doha ஸ்டாலின் + விஜய காந்த் + ராகுல் நல்ல வாலிபர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுப்பார்கள். இந்தியாவும் தமிழ்நாடும் வலுவாக்கும் வல்லவர்கள்
Rate this:
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
14-பிப்-201405:09:04 IST Report Abuse
மதுரை விருமாண்டிஆளுக்கு 10 கழுதை வயசாகும் வாலிபர்களா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X