'காங்கிரசை காப்பாற்றுவதற்காகவே மூன்றாவது அணி': நரேந்திர மோடி குற்றச்சாட்டு

Added : பிப் 12, 2014 | கருத்துகள் (5)
Share
Advertisement
புவனேஸ்வர் : ''ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தள கட்சி தலைவருமான, நவீன் பட்நாயக், மூன்றாவது அணி அமைக்கப் போவதாக கூறுகிறார். காங்கிரசை காப்பாற்றுவதற்காக தான், அவர், இதுபோல் கூறி வருகிறார்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.ஒடிசா மாநிலத்தில், நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தள ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத்
Modi targets Patnaik ,  Third Front, Congress, 'காங்கிரசை காப்பாற்றுவதற்காகவே மூன்றாவது அணி, நரேந்திர மோடி குற்றச்சாட்டு

புவனேஸ்வர் : ''ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தள கட்சி தலைவருமான, நவீன் பட்நாயக், மூன்றாவது அணி அமைக்கப் போவதாக கூறுகிறார். காங்கிரசை காப்பாற்றுவதற்காக தான், அவர், இதுபோல் கூறி வருகிறார்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.

ஒடிசா மாநிலத்தில், நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தள ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில், நேற்று நடந்த கூட்டத்தில் பேசியதாவது:

மாநிலங்களில் மந்தம்:


மூன்றாவது அணி அமைக்கப் போவதாக கூறும் கட்சிகள், அவர்கள் ஆட்சி நடத்தும், நடத்திய மாநிலங்களில், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தாமல், முடக்கி விட்டன. இடதுசாரி கட்சிகள் மேற்கு வங்கத்தையும், சமாஜ்வாதி கட்சி உ.பி.,யையும், பிஜு ஜனதா தளம் கட்சி ஒடிசாவையும், வளர்ச்சியில் பின்னுக்கு தள்ளி விட்டன. தற்போது, 11 கட்சிகளின் தலைவர்கள் இணைந்து, லோக்சபா தேர்தலில், மூன்றாவது அணி அமைக்கப் போவதாக, முழங்கி வருகின்றனர். இவர்களில், நவீன் பட்நாயக்கும் ஒருவர். காங்கிரஸ் கட்சியை தோல்வியிலிருந்து காப்பாற்றுவதற்காகவே, இவர்கள், இந்த நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

வேலையளிக்கும் குஜராத்:


இவர்களுக்கு, மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர். ஒடிசாவைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள், குஜராத்தில் வேலை செய்து வருகின்றனர். பிஜு ஜனதா தளம் கட்சி அரசால், அவர்களுக்கு, சொந்த மாநிலத்தில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர முடியவில்லை.ஒடிசா வாக்காளர்கள், பா.ஜ., வுக்கு ஓட்டளித்தால், இந்த மாநிலத்தில், வளர்ச்சி பணிகள் தீவிரப்படுத்தப்படும். காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பா.ஜ., ஆளும் மாநிலங்கள், நல்ல வளர்ச்சி அடைந்துள்ளன. ஆனால், மூன்றாவது அணி என கூறும் கட்சிகள் ஆளும் மாநிலங்களும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும், வளர்ச்சியில் பின் தங்கியுள்ளன.
காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்துவதற்கு, 60 ஆண்டுகளாக வாய்ப்பு கொடுத்து வருகிறீர்கள்; அவர்களால், நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்தி தர முடியவில்லை. எங்களுக்கு, 60 மாதங்கள் மட்டும் ஆட்சி நடத்த வாய்ப்பு தாருங்கள்; இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றி காட்டுகிறோம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
12-பிப்-201407:09:17 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் மூன்றாவது அணியில் இருக்கும் கட்சிகள் பல காங்கிரஸ் கட்சியின் கை கூலிகளே.....இரண்டு, அந்த கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எந்த வகையிலும் சோபிக்க வில்லை.....உத்திரப் பிரதேசம், பீகார் வங்காளம், ஒரிஸ்ஸா மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கி இழுக்கும் வகையிலேயே உள்ளன....இந்த மாநிலங்களின் ஒரே பங்களிப்பு நாடு முழுவதும் குறைந்த சம்பளத்துக்கு கூலி ஆட்களை அனுப்பவது மட்டுமே.....அந்த மாநில மக்கள் அவர்கள் மாநிலத்திலேயே சுபிட்சமாய் வாழ வேண்டாமா?.....West Bengal has become Waste Bengal....இது ஒன்றுதான் இடது சாரிகளின் சாதனை.....
Rate this:
Cancel
SURESH SUBBU - Delhi,இந்தியா
12-பிப்-201407:06:03 IST Report Abuse
SURESH SUBBU மூணாவது அணி... முப்பதாவது அணி எல்லாம்... காங்கிரசின் கிளை.... அது நாட்டிற்கு களை...
Rate this:
Cancel
Nava Mayam - New Delhi,இந்தியா
12-பிப்-201406:41:14 IST Report Abuse
Nava Mayam மோடி அவர்களே 1990 க்கு முன் இருந்த இந்தியாவை பாருங்கள் ...நேரு இருந்த வரை தமிழகத்து காமராஜ் , கர்நாடகவுக்கு நிஜலிங்கப்பா , ஆந்திராவுக்கு சஞ்சீவி ரெட்டி என்று மதிய அரசு அதிகாரம் எல்லா மாநிலங்களிலும் பறந்து கிடந்தது ...அதற்கு பின் வந்த இந்திரா காந்தி உங்களைபோல மலையை புரட்டி போடுவேன் என்று அறுதி பெருன்பான்மை பெற்று ஒரு சர்வாதிகாரி போல ஆட்சி நடந்தது ...எமெர்ஜென்சி , தேசிய மயமாக்கம் என்று எந்த தலைவர்களையும் கலந்தொசிக்காமல் எடுக்க பட்ட முடிவு நம்ம்மை 1990 இல் திவால் நிலைக்கு கொண்டு வந்து விட்டது.அவர் ஆட்சிகாலத்தில் எந்த மாநில தலைவருக்கும் அதிகாரம் கிடையாது ....முதல் மந்திரிகள் இஷ்டபடி தூக்கி அடிக்க பட்டார்கள் ......அதன் பிறகு 1990 இல் நரசிம்ம ராவ் காலத்தில் மாநில கட்சிகளின் ஆதரவோடு ஆட்சிகள் தொடர்த்து ..அதாவது கிட்டத்தட்ட் நேரு காலம் போல மதிய அதிகாரம் எல்லா மாநில கட்சி தலைவர்களுக்கும் பிரித்து கொடுக்க பட்டது ..அது பின் தங்கள் தலைவர் பிஜேபி தலைவர் வாஜ்பேயி அவர்கள் காலத்திலும் தொடர்ந்தது அதற்க்கு பின் வந்த காங்கிரஸ் 10 வருஷ காலத்திலும் தொடர்ந்தது...அதை நீங்கள் மாற்ற போகிறேன் என்கிறீர்கள் ..உங்கள் ஆட்சி தனி பெரும்பான்மையுடன் அமைக்க பட்டால் அதிகாரம் உங்கள் ஒருவரிடமும் , உங்கள் புகழ்பெற்ற அமித் ஷா வசமும் தான் இருக்கும்...மாநிலத்தலைவர்கள் வசம் இருக்காது ...எதற்கெடுத்தாலும் டெல்லியை எதிர்பார்க்கும் நிலை வரும்...கிட்ட தட்ட இந்திரா காந்தி ஆட்சி போன்றதாகவே இருக்கும்...தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் , ப ம க மதிய ஆட்சியில் ரயில் மந்தி பதவி யில் இருந்த பொது பல ரயில் திட்டங்கள் , அகலபாதை படு வேகமாக நிறைவேற்ற பட்டது...அதே போல திமுக மந்திரி பதவியில் மத்தியில் இருந்த போது நோக்கியா தொழிற்சாலை , பல கார் தொழிற்சாலைகள் என்று தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு தொளிர்புறட்சியே நடந்தது... இதை இப்போ நீங்கள் என்னவோ செய்ய போகிறீர்கள் என்று மாநில கட்சிகளை புறக்கணித்து உங்களுக்கு வாக்களித்தால் அவர்கள் அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளி பொட்டுகொல்வதர்க்கு சமம்....தமிழ் மக்கள் சொல்லி திருந்துபவர்கள் அல்ல , பட்டு திருந்துபவர்கள் ..காமராஜ் காலத்தில் இருந்து நடந்து வருவது இது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X