விஜயகாந்தின் 'தரகு வேலை' துரதிருஷ்டவசமானது: தமிழருவி மணியன்

Added : பிப் 12, 2014 | கருத்துகள் (10)
Share
Advertisement
மதுரை: ''லோக்சபா தேர்தல் கூட்டணிக்காக, 'மாட்டு வியாபாரிகள் போல்' தரகு வேலையில் ஈடுபடும், விஜயகாந்தின் நிலை துரதிருஷ்டவசமானது,'' என, காந்திய மக்கள் கட்சித் தலைவர், தமிழருவி மணியன் தெரிவித்தார்.மதுரையில், அவர் நேற்று கூறியதாவது: மத்தியில், காங்., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழகத்தில் பா.ஜ.,வுடன் ஒரு வலுவான கூட்டணி உருவாக வேண்டும் என்றே, பா.ஜ., -
விஜயகாந்தின் 'தரகு வேலை' துரதிருஷ்டவசமானது: தமிழருவி மணியன்

மதுரை: ''லோக்சபா தேர்தல் கூட்டணிக்காக, 'மாட்டு வியாபாரிகள் போல்' தரகு வேலையில் ஈடுபடும், விஜயகாந்தின் நிலை துரதிருஷ்டவசமானது,'' என, காந்திய மக்கள் கட்சித் தலைவர், தமிழருவி மணியன் தெரிவித்தார்.
மதுரையில், அவர் நேற்று கூறியதாவது: மத்தியில், காங்., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழகத்தில் பா.ஜ.,வுடன் ஒரு வலுவான கூட்டணி உருவாக வேண்டும் என்றே, பா.ஜ., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி ஏற்பட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டேன். தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையிலும், தன் நிலைப்பாட்டை விஜயகாந்த் வெளிப்படுத்தவில்லை. இது ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு சரியல்ல. ஊழலுக்கு எதிராக மாநாடு நடத்திவிட்டு, காங்., - தி.மு.க.,விற்கு எதிரான நிலைப்பாட்டை, அவர் ஏன் எடுக்கத் தயங்குகிறார். அ.தி.மு.க.,வுடன் தனிமனித விரோத போக்கு உள்ளதால், அவர் கூட்டணி வைக்க முடியாது.


துணிச்சல் உண்டா?

ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த அவர், பா.ஜ.,வுடன் கூட்டணி ஏற்படுத்த வேண்டும் அல்லது தனித்து போட்டியிட வேண்டும். இதுதான் அவரது நேர்மைக்கு அடையாளமாக இருக்கும். அதை செய்ய அவருக்கு துணிச்சல் உண்டா. இதை நான் சவாலாகவே கேட்கிறேன். குறைந்த சதவீதம் ஓட்டுகள் வைத்துள்ள கம்யூ.,வுடன் கூட்டணி வைத்து, துணிச்சலுடன், லோக்சபா தேர்தலை அ.தி.மு.க., சந்திக்க உள்ளது. அதுபோல், சிறிய கட்சியை கூட்டணி சேர்த்து, லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிட்டு, பலத்தை காட்ட முடியுமா?


பேரம்:

எந்த முடிவையும் அவர் அறிவிக்கவில்லை. இதற்கு பின்னணியில் பேரம் நடப்பதாக கூறுகின்றனர். மாட்டு வியாபாரம் செய்யும் தரகர்களின் தரகு வியாபாரத்தை, விஜயகாந்த் நடத்துவது ஆரோக்கியமானது அல்ல; தி.மு.க., கூட்டணியில், முஸ்லிம் லீக் உள்ளது. ஆனால், பா.ஜ.,வுடன் வைகோ இருந்தால் விமர்சிக்கின்றனர். தமிழகத்தில் உண்மையான மதச்சார்பற்ற கட்சிகள் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Syed Mustafa - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-பிப்-201422:11:24 IST Report Abuse
Syed Mustafa யாரு நல்ல தரகர்ன்னு அடிச்சிக்கிறீங்க அதானே?
Rate this:
Cancel
A .RENGASAMY - MADURAI,இந்தியா
13-பிப்-201413:42:29 IST Report Abuse
A .RENGASAMY தமிழருவி மணியனின் தரகுவேலை THOLVIEL MUDIUM
Rate this:
Cancel
Regan - chennai,இந்தியா
13-பிப்-201411:41:59 IST Report Abuse
Regan விஜயகாந்த் என்ற ஒரு விசக்கிருமியை இந்த தமிழ்நாட்டை விட்டு விரட்ட வேண்டும்..கண்டிப்பாக அது மிக விரைவில் நடக்கும்..உனக்கு வோட்டு போட்டேன் நான்..அதற்காக வெட்க படுகிறேன்...உன்னை போல் ஒரு சுயநலவாதி யாருமே இருக்க முடியாது...உனக்கு கொள்கை இல்லை..சோனியா காங்கிரஸ் உடன் சேர்ந்து உண் அழிவை தேடி கொள்கிறாய்...உன்னை இனி மேல் தமிழ்நாட்டில் ஒருவரும் மதிக்க மாட்டார்கள்..மிக அருவருக்கதக்க அரசியல் செய்கிறாய்..உன்னை நம்பி வந்த தொண்டர்கள் மிகவும் பாவும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X