"மதுரை ஆவின்' நூதன திட்டம்

Added : பிப் 13, 2014 | கருத்துகள் (1) | |
Advertisement
மதுரை: பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், "ஆ' (பசு)வின் எண்ணிக்கையைப் பெருக்க, தமிழகத்தில் முதன்முறையாக புதிய முயற்சியை, மதுரை ஆவின் எடுத்து வருகிறது. மதுரை ஆவின் தினமும் சராசரியாக, 85 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது. பால் கொள்முதலை அதிகரிக்க, கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம், தாது உப்புக்களை வழங்குவதுடன், டாக்டர்களை நியமித்து, மருத்துவ

மதுரை: பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், "ஆ' (பசு)வின் எண்ணிக்கையைப் பெருக்க, தமிழகத்தில் முதன்முறையாக புதிய முயற்சியை, மதுரை ஆவின் எடுத்து வருகிறது. மதுரை ஆவின் தினமும் சராசரியாக, 85 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது. பால் கொள்முதலை அதிகரிக்க, கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம், தாது உப்புக்களை வழங்குவதுடன், டாக்டர்களை நியமித்து, மருத்துவ உதவிகளையும் மேற்கொள்கிறது. தற்போது தமிழகத்திலேயே புதிய முயற்சியாக மதுரை ஆவின், நவீன, செயற்கை கருவூட்டல் முறையில், பசுக்கன்றுகளை மட்டும் அதிகளவில் உற்பத்தி செய்யவும் முயற்சி மேற்கொண்டுள்ளது. குஜராத் மாநிலம் சபர்மதியிலும், பஞ்சாப் மாநிலத்திலும் இம்முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. பஞ்சாபில், வெளிநாடுகளில் இருந்து மாடுகளின் விந்தணுவை இறக்குமதி செய்து,
செயற்கை முறையில் கருவூட்டி, அதிகளவு பசுக்களை உருவாக்கின்றனர். இதற்கு 50 சதவீதம் அரசு மானியமும் வழங்கப்படுகிறது. அதேபோல மதுரையிலும் செய்ய, ஆவின் நிறுவனம், நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கூட்டத்தின் முடிவு தற்போது இத்துறையின் கமிஷனர் அலுவலகத்திற்கு ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காளைகள், பசுக்களுடன் இனவிருத்திக்காக சேரும்போது, அதன் விந்துவில் உள்ள, "எக்ஸ்' அணுவும், பசுவின் கருமுட்டையில் உள்ள "எக்ஸ்' அணுவுடன் இணைந்தால், பெண் கன்று பிறக்கிறது. அதேசமயம், "எக்ஸ்' அணுவும், "ஒய்' அணுவும் இணைந்தால் ஆண் கன்று பிறக்கிறது. செயற்கை முறை கருவூட்டலின் போது, "எக்ஸ்' அணுவும், "ஒய்' அணுவும் இணையும் வகையில் விஞ்ஞானபூர்வமாக சேர்க்கை நடைபெறும். இதற்கு உதவும் "விந்து ஊசி'யை, சபர்மதியில் இருந்து பெற்று, விவசாயிகளுக்கு வழங்கலாம் என ஆவின் முடிவு செய்துள்ளது. இந்த ஊசிக்கான தொகையில் 50 சதவீதத்தை அரசு மானியமாக வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இம்முறையில் 90 சதவீத வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளதாக கால்நடை மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Damodardeshvaasi Tribhuvanapathi dasa - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-பிப்-201410:37:43 IST Report Abuse
Damodardeshvaasi Tribhuvanapathi dasa இது அசுரத்தனத்தின் உச்சகட்டம். இந்த முறையில் கறக்கப்படும் பால் நல்ல குணநலன்களை கொண்டு இருக்காது. கால்நடை மருத்துவர்களின் முட்டாள்தனமான முயற்சி இது. வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. மனிதர்களை இந்த பால் நோய் வாய்ப்படுத்தும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X