கல்லணையில் மணிமண்டபம் : முதல்வர் ஜெ., திறந்து வைத்தார்

Added : பிப் 13, 2014 | கருத்துகள் (4) | |
Advertisement
தஞ்சாவூர்: கல்லணையில், கரிகால சோழன் மணிமண்டபத்தை, வீடியோ கான்பரன்சிங்கில், முதல்வர் ஜெ., நேற்று திறந்து வைத்தார். காவிரியின் குறுக்கே கல்லணையை, சோழ மன்னன் கரிகாலன் கட்டினான். வெறும் மண், மரங்களை கொண்டு இது கட்டப்பட்டுள்ளது. கல்லணையில், கரிகால சோழனுக்கு சிலை உள்ளது.பாசனத்துக்கு முக்கியத்துவம் அளித்த, கரிகால சோழனை கவுரவிக்கும் வகையில், கல்லணையில், 2.10 கோடி ரூபாய் செலவில்,
கல்லணையில் மணிமண்டபம் : முதல்வர் ஜெ., திறந்து வைத்தார்

தஞ்சாவூர்: கல்லணையில், கரிகால சோழன் மணிமண்டபத்தை, வீடியோ கான்பரன்சிங்கில், முதல்வர் ஜெ., நேற்று திறந்து வைத்தார். காவிரியின் குறுக்கே கல்லணையை, சோழ மன்னன் கரிகாலன் கட்டினான். வெறும் மண், மரங்களை கொண்டு இது கட்டப்பட்டுள்ளது. கல்லணையில், கரிகால சோழனுக்கு சிலை உள்ளது.
பாசனத்துக்கு முக்கியத்துவம் அளித்த, கரிகால சோழனை கவுரவிக்கும் வகையில், கல்லணையில், 2.10 கோடி ரூபாய் செலவில், மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. மணிமண்டபத்துக்குள், யானை மீது கரிகால் சோழன் அமர்ந்த நிலையில், வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நான்கு நுழைவாயிலும், ஒரே மாதிரி அமைக்கப்பட்டு உள்ளது. மண்டபத்தைச் சுற்றி பசும் புல்வெளி, அழகுச் செடிகள் வளர்க்கப்பட்டு, எழில் கொஞ்ச காட்சியளிக்கிறது. இந்த மணிமண்டபத்தை, நேற்று மாலை 3:10 மணிக்கு, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, வீடியோ கான்பரன்சிங் முறையில், முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
விழாவில், கட்சியினர் வெடித்த பட்டாசு தீப்பொறி, விழா பந்தலில் விழுந்தது; துவக்கத்திலேயே அணைத்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
palanichamikv - kullampalayam/gobichettipalayam,இந்தியா
13-பிப்-201419:14:25 IST Report Abuse
palanichamikv தேர்தல் நெருங்குகிறது .தங்க கவசம் ,வெண்கல சிலை etc பட்டியல் நீ ள ள ள ள ள போகிறது .உங்கள் மனதில் இதற்கு செலவிடும் தொகை யினை நல திட்டங்களுக்கு பயன் படுத்தலாம் என . அதை விடுங்க இம்மாதிரி நிகழ்ச்சியில் வெடி விபத்து ஏற்படாமல் தடுக்க மிகுந்த கவனம் கொள்வோம் .இல்லையெனில் நினைத்து பார்க்கவே படு பயங்கரமாய் இதயம் துடிக்கிறது .ஐயகோ .
Rate this:
Cancel
siva - Chennai,இந்தியா
13-பிப்-201408:07:15 IST Report Abuse
siva அது எல்லாம் சரிதான். அந்நாள் சரித்திரப் படங்கள் எடுப்பதற்கு எதாவது உதவிசெய்தால் இன்னும் நல்லது. பொன்னியின் செல்வன், யவனராணி, கடல்புறா போன்றவற்றை திரைப்படமாக எடுக்க முடியாவிட்டாலும் தொலைகட்சி தொடர்களாக எடுக்க உதவி செய்யலாம்.
Rate this:
Cancel
k.natarajan - chennai,இந்தியா
13-பிப்-201406:58:34 IST Report Abuse
k.natarajan தமிழ் நாடு சொத்து எல்லாம் எப்படி வரா கடனாக போகப்போகுதா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X