தஞ்சாவூர்: கல்லணையில், கரிகால சோழன் மணிமண்டபத்தை, வீடியோ கான்பரன்சிங்கில், முதல்வர் ஜெ., நேற்று திறந்து வைத்தார். காவிரியின் குறுக்கே கல்லணையை, சோழ மன்னன் கரிகாலன் கட்டினான். வெறும் மண், மரங்களை கொண்டு இது கட்டப்பட்டுள்ளது. கல்லணையில், கரிகால சோழனுக்கு சிலை உள்ளது.
பாசனத்துக்கு முக்கியத்துவம் அளித்த, கரிகால சோழனை கவுரவிக்கும் வகையில், கல்லணையில், 2.10 கோடி ரூபாய் செலவில், மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. மணிமண்டபத்துக்குள், யானை மீது கரிகால் சோழன் அமர்ந்த நிலையில், வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நான்கு நுழைவாயிலும், ஒரே மாதிரி அமைக்கப்பட்டு உள்ளது. மண்டபத்தைச் சுற்றி பசும் புல்வெளி, அழகுச் செடிகள் வளர்க்கப்பட்டு, எழில் கொஞ்ச காட்சியளிக்கிறது. இந்த மணிமண்டபத்தை, நேற்று மாலை 3:10 மணிக்கு, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, வீடியோ கான்பரன்சிங் முறையில், முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
விழாவில், கட்சியினர் வெடித்த பட்டாசு தீப்பொறி, விழா பந்தலில் விழுந்தது; துவக்கத்திலேயே அணைத்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE